1000 ரூபாய் முதலீடு மாதம் 40,000/- சம்பாதிக்கலாம்..! அருமையானது தொழில்..!
புதிதாக தொழில் தொடங்க நினைக்கும் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் வணக்கம்.. இன்றைய பதவியால் நாம் வீட்டில் இருந்தபடியே செய்ய கூடிய ஒரு அருமையான தொழில் பற்றி தான் பார்க்க போகிறோம். அதாவது மெழுகுவர்த்தி தயாரிப்பு தொழில் தான். ஆமாங்க பிரண்ட்ஸ் வீட்டில் இருந்தபடியே மெழுகுவர்த்தி தயார் செய்து மாதம் நீங்கள் நல்ல வருமானத்தை பெற முடியும். சரி வாங்க இதற்கு முதலீடு எவ்வளவு தேவைப்படும்.. என்னென்ன மூல பொருட்கள் தேவைப்படும்.. மாதம் இதன் மூலம் எவ்வளவு வருமானம் பெறலாம்.. எப்படி சந்தைப்படுத்தலாம் போன்ற தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.
மெழுகுவர்த்தி தயாரிப்பு:
நீங்கள் நினைக்கிற மாதிரி பழைய மாடலில் மெழுகுவர்த்தி தயார் செய்து விற்பனை செய்வது கிடையாது. டெக்னலாஜி மாறிய காலத்திற்கு ஏற்ப மெழுகு வர்த்தியை பல்வகையான டிசைனில் தயார் செய்து விற்பதன் மூலம் நல்ல வருமானத்தை பெறலாம்.
இடம்:
வீட்டில் இருந்தபடியே இந்த தொழிலை நீங்கள் தொடங்கலாம். ஆக உங்கள் வீட்டில் சிறிய அளவில் இதற்குகென்று தனியாக இடம் இருந்தால் போதும்.
மூல பொருட்கள் மற்றும் அதற்கான முதலீடு:
மொழுகுவார்த்தி தயார் செய்வதற்குகான – Paraffin Wax இதன் விலை ஒரு கிலோ 75 ரூபாயில் இருந்து விற்பனை செய்யப்படுகிறது.
Candle Moulds தேவைப்படும் இது பலவகையான டிசைன்களில் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது இதன் விலை 500 ரூபாய் மட்டுமே.
Candle Making Colours தேவைப்படும் அதன் விலை 100
Fragragrance தேவைப்படும் Fragragrance என்பது வாசனை திரவியம் ஆகும். இதன் வை 200
மெழுகுவர்த்தி திரி – 50
இதற்கான முதலீடு = 900 ரூபாய் மட்டுமே. இருமினும் கூட குறைச்சலாக பார்க்கும் பொழுது முதலீடாக 1000 ரூபாய் தேவைப்படும்.
அடக்க விலை:
ஒரு மெழுகுவர்த்தி தயார் செய்வதற்கு உங்களுக்கு 20 ரூபாய் செலவு ஆகும்.
விண்ணப்பனை விலை:
நீங்கள் தயார் செய்த மெழுகுவர்த்தியை ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் ஒரு மெழுகுவர்த்தியையே 200 ரூபாய் வரை விற்பனை செய்ய முடியும்.
பலவகையான Candle Moulds-ஐ பயன்படுத்தி பலவகையான டிசைன்களில் மெழுகுவர்த்தி தயார் செய்து ஆன்லைனில் விற்பனை செய்யலாம். இதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். மேலும் உங்கள் ஊரில் உள்ள கடைகளிலும் இந்த மெழுகுவர்த்தியை தயார் செய்து விற்பனை செய்யலாம்.
மெழுகுவர்த்தி தயாரிக்கும் முறை:
Paraffin Wax-ஐ அடுப்பில் வைத்து உருக்கி அதில் கலர் சேர்த்து நன்றாக மிக்ஸ் தேய்த்து கொள்ளுங்கள். பின் Candle Moulds-யில் திரியை செட் செய்து பிறகு உருக்கிய Paraffin Wax-ஐ ஊற்றி காத்திருங்கள். ஊற்றிய Paraffin Wax Candle Moulds-க்குள் நன்கு உறைந்தபிறகு அதனை வெளியேயே எடுத்தால் அழகான மெழுகுவர்த்தி தயார்.
இன்னும் தெளிவாக புரியவேண்டும் என்றால் இதற்கென்று யூடியூபில் பலவகையான வீடியோக்களை பதிவு செய்துள்ளன அதனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் நன்றி வணக்கம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 10,00,000 ரூபாய் வருமானம் வரும் லாபம் தரும் தொழில்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |