10000 ரூபாய் முதலீட்டில் என்ன தொழில் செய்யலாம்? | 10000 Investment Business Idea in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்.. இந்த உலகில் உள்ள அனைவருக்குமே ஏதாவது சொந்தமாக தொழில் துவங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கு போதுமான அளவிற்கு சிலரிடம் பணம் இருக்காது. ஆக குறைந்த முதலீட்டில் ஏதாவது தொழில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசிப்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது வெறும் 10 ஆயிரம் முதலீட்டில் நீங்கள் சொந்தமாக செய்து தினமும் அதன் மூலம் நல்ல வருமானத்தை தரக்கூடிய ஒரு அருமையான தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம் அவற்றை தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.
10000 ரூபாய் முதலீட்டில் என்ன தொழில் செய்யலாம்?
பொதுவாக யாராக இருந்தாலும் சரி ஒரு தொழிலை முழு நம்பிக்கையுடன் தொடங்க வேண்டும். அதேபோல் உணவு சார்ந்த தொழிலை தொடங்கினால் நிச்சயம் அவகற்றில் நீங்கள் நல்ல வருமானத்தை பெற முடியும்.
பொதுவாக அனைவருமே காலை மற்றும் மாலை நேரங்களில் டீ அருந்தபொழுது பிரட், வருடி, ரஸ்க், பன் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை சாப்பிடுவார்கள். அதேபோல் குழந்தைகளும் இதனை விரும்பி சாப்பிடுவார்கள்.
ஆகவே நீங்கள் பிரட், வருடி, ரஸ்க், பன், கேக் விற்பனை செய்யலாம், இதன் மூலம் உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். இதெல்லாம் உங்களுக்கு செய்ய உங்களுக்கு பெரிய அளவில் முதலீடு தேவைப்படும் என்று யோசிப்பீர்கள்.
உங்கள் யோசனை நியாயமானதுதான், ஆனாலும் கூட இந்த தொழிலை நீங்கள் குறைந்த முதலீட்டில் செய்ய முடியும். அதாவது ஈரோடு, கோயம்பத்தூர், திருச்சி, சென்னை போன்ற பெரிய பெரிய நகரங்களில் இதற்கென்று தனியாக நிறுவங்கள் இருக்கிறது.
அவர்களிடம் டீலர்சிப் வைத்து கொண்டு அவர்களிடம் நீங்கள் மொத்தமாக பிரட், வருடி, ரஸ்க், பன் போன்றவற்றை வாங்கி உங்கள் ஊரில் ஒரு சிறிய அளவில் கடை வைத்து வியாபரத்தை தொடங்கலாம். இதற்கு அதிக முதலீடு தேவைப்படாது.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 குறைந்த முதலீட்டில் மாதம் 30,000 லாபம் தரும் அருமையான தொழில்..!
முதலீடு:
நீங்கள் பிரட், வருடி, ரஸ்க், பன் போன்றவரை மொத்தமாக இரு 10 ஆயிரம் ரூபாய்க்கு வாங்குகிறீகள் என்று வைத்து கொள்வோம். அதன் பிறகு உங்கள் ஊரில் சிறிய அளவில் கடை வைத்து நடத்த இடம் தேவைப்படும். அதற்கு வாடகை மற்றும் அட்வான்ஸ் சேர்த்து 20 ஆயிரம் என்று வைத்து கொள்வோம். அது போக உங்கள் கடைக்கு சோகேஷ், டேபிள், நாற்காலி இது போன்ற பொருட்கள் தேவைப்படும் இதற்கு ஒரு 20 ஆயிரம் தேவைப்படும். ஆக உங்களிடம் மொத்தமாக 50000 ரூபாய் இருந்தால் போதும் நீங்களும் உங்கள் ஊரில் தினமும் வருமானம் தரக்கூடிய இந்த தொழிலை ஆரம்பித்துவிடலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |