Future Business Ideas in India
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். மனிதனாக பிறந்த அனைவருமே வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வது என்று யோசித்து கொண்டே தான் இருக்கிறோம். அதிலும் பலரும் தங்களின் வாழ்க்கையில் மற்றவர்கள் பார்த்து ஆச்சரியப்படும் அளவிற்கு வாழ வேண்டும் என்று நினைக்கிறாரார்கள். இதற்காக பலரும் சுய தொழில் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். நீங்கள் சுயதொழில் செய்ய வேண்டும் என்று நினைப்பது சரி, ஆனால் அதில் கவனிக்க வேண்டியது எதிர்காலத்தில் நீங்கள் ஆரம்பிக்கும் தொழிலுக்கு டிமாண்ட் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொண்டு தொழிலை தொடங்க வேண்டும். அதனால் இந்த பதிவில் வருங்காலத்தில் டிமாண்ட் உள்ள தொழிலான 3D பிரின்டிங் தொழிலை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
3டி பிரிட்டிங் பிசினஸ்:
2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் 3D பிரிண்டிங் தொழிலை தொடங்குவது பலனளிக்கும் மற்றும் லாபகரமான தொழிலாக இருக்கும். ஏனெனில் நாட்டின் 3D பிரிண்டிங் தொழில் வரும் ஆண்டுகளில் கணிசமாக வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளாவிய 3D பிரிண்டிங் சந்தை அளவு 2022 இல் USD 16.75 பில்லியனாக மதிப்பிடப்பட்டது மற்றும் 2023 முதல் 2030 வரை 23.3% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்தில் (CAGR) வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1000 ரூபாய் முதலீட்டில் தினமும் 5,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய சுயதொழில்
இடம்:
இந்த தொழிலை தொடங்குவதற்கு தனியாக இடம் தேவையில்லை, உங்கள் வீட்டிலேயே 10*10 இடம் இருந்தாலே போதுமானது. தொழில் நன்றாக வளர்ந்த பிறகு தனியாக கடை அமைத்து கொள்ளலாம்.
முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:
இந்த தொழிலுக்கு மூலப்பொருளாக தேவைப்படுவது 3டி மெஷின் தான் தேவை. நீங்கள் மெஷின் வாங்கும் இடத்திலேயே அதனை எப்படி பயன்படுத்துவது என்று சொல்லி தருவார்கள். இந்த மெஷின் விலையானது ஆரம்பத்தில் அதிகமாக இருந்தது. தற்போது குறைந்து அதனின் விலை 60,000 ரூபாயிலிருந்து விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு தேவையான மூலப்பொருட்களையும் மெஷின் வாங்கும் இடத்திலேயே தந்து விடுவார்கள்.
வருக்காலத்திற்கு ஏற்ற மாதிரி தொழில் செய்யுங்கள்
வருமானம்:
நீங்கள் தயாரித்த பொருட்களை ஆன்லைன் மூலமாகவும் விற்பனை செய்யலாம், அப்படி இல்லையென்றால் நேரடியாகவும் விற்பனை செய்யலாம். நீங்கள் விற்கும் பொருட்களுக்கு தகுந்தது போல் வருமானம் கிடைக்கும். தோராயமாக ஒரு மாதத்திற்கு 30,000 ரூபாய் கிடைக்கும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |