வீட்டில் இருந்தபடியே தினமும் 3,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

Daily income business in Tamil

தினசரி வருமானம் தரும் தொழில்

வணக்கம் நண்பர்களே 🙏  இன்றைய வியாபார பதிவில் தினசரி வருமானம் தரும் ஒரு அருமையான தொழில் பற்றித் தான் தெரிந்துகொள்ள போகின்றோம். இந்த தொழிலுக்கு எப்பொழுதும் அழிவே கிடையாது, இதை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.  மேலும் என்ன தொழில் செய்தால்  நல்ல லாபம் கிடைக்கும் என்று யோசித்துக் கொண்டிருப்பவர்கள், இந்த தொழிலை செய்வதன் மூலம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு வருமானத்தை பெறலாம். மேலும் அவை என்ன தொழில், அந்த தொழிலை தொடங்க எவ்வளவு முதலீடுகள் தேவைப்படும் என்று நம் பதிவின் மூலம் தெரிந்துகொள்வோம் வாங்க.

இந்த பிஸ்னஸை யார் செய்தாலும் தினமும் 1,000 ரூபாய்க்கு மேல் வரையும் சம்பாதிக்கலாம்

உலர் திராட்சை தயாரிப்பு:

இன்று நாம் தெரிந்துகொள்ளப் போகின்ற பிஸ்னஸ் என்னவென்றால் ஒரு சத்தான உணவு பொருள் தயாரிப்பது பற்றித்தான் தெரிந்துகொள்ளப் போகின்றோம். அதாவது குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை உடல் ஆரோக்கியத்திற்க்காக சாப்பிட்டு வரும் உலர் திராட்சை தயாரிப்பது தான்.  பொதுவாக இந்த உலர் திராட்சைகள்  வெறுமையாக சாப்பிடுவது மட்டுமின்றி, இவை பல உணவுப் பொருட்களிலும்  சேர்க்கப்பட்டு வருகின்றன. மேலும் இவற்றை எப்படி தயாரித்து விற்பனை செய்வது என்று தெரிந்துகொள்வோம்.

தேவைப்படும் இடவசதி:

இந்த உலர் திராட்சைகளை தயாரிப்பதற்கு  உங்கள் வீட்டில் ஒரு 10 × 10  இடம் இருந்தாலே போதும், நீங்கள் சுலபமாக இதனை தயாரித்து விற்பனை செய்யலாம். மேலும் இந்த தொழில் செய்வதற்கு ஒரு ஆள் இருந்தால் மட்டுமே போதுமானது, இந்த தொழில் நன்றாக வளர்ந்த பிறகு நீங்கள், அதிகமான ஆட்களை சேர்த்து இந்த தொழில் தொடங்கி வரலாம்.

உலர் திராட்சை தயாரிப்பதற்கு தேவைப்படும் மூலப்பொருள்:

இந்த உலர் திராட்சைகளை தயாரிப்பதற்கு உங்களுக்கு தேவைப்படும் பொருள் திராட்சை மட்டும் தான். இந்த உலர் திராட்சைகளை மொத்த வியாபாரிகளிடம் இருந்து  வாங்கி நீங்களே அதை நல்ல முறையில் தயாரித்து பேக்கிங் செய்து விற்கலாம். இவற்றை தயாரிப்பதற்கு உங்களுக்கு தேவைப்படும் முதலீடு 5,000 ரூபாய் மட்டும்தான்,  மேலும் இவற்றை எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

உலர் திராட்சை தயாரிக்கும் முறை:

உலர் திராட்சைகளை தயாரிப்பதற்கு முதலில் வாங்கிய திராட்சைகளை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். அதன் பிறகு  நல்ல வெயில் இருக்கும் இடத்தில் காயவைக்க வேண்டும்.

உங்களுக்கு காயவைப்பதற்கு போதுமான வசதிகள் இல்லையென்றால், நீங்கள் இதற்கான மெஷின்களை வாங்கி கூட காய வைக்கலாம். ஆனால் நீங்கள் சூரியன் வெப்பத்தின் மூலம் இயற்கையாக தயாரிக்க வேண்டும் என்றால்,  உலர் திராட்சைகள் காய்வதற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும்.

வீட்டில் தேவையில்லாத இடத்தில் இந்த தொழிலை செய்தால்..! நல்ல லாபம் கிடைக்கும்..!

Food Dryer Machine in Tamil:

உங்கள் வீட்டில் உலர் திராட்சைகளை காயவைப்பதற்கு போதுமான இட  வசதிகள் இல்லாதவர்கள்,  இந்த Food Dryer Machine வாங்கிக்கொள்ளலாம். இதனுடைய அளவுகளை பொறுத்து விலையும் மாறுபடுகிறது. இதனுடைய ஆரம்ப விலை 3,999 ரூபாயில் இருந்து இருக்கிறது. 

பேக்கிங் செய்யும் முறை:

இந்த உலர் திராட்சைகளை தயாரித்த பிறகு, இதனை நல்ல முறைகளில்  பேக்கிங் செய்வது மிகவும் அவசியம். அதற்கு அழகான பிளாஸ்டிக் பாட்டில் அல்லது அழகான வண்ணங்களை கொண்ட கவர்கள் போன்றவற்றை ஆன்லைன் மூலமாவது, நேரடியாவது பெற்றுக்கொண்டு, ஒவ்வொரு அளவிற்கு தகுந்தது போல பேக்கிங் செய்ய வேண்டும்.

விற்பனை செய்யும் முறை:

பொதுவாக நாம் இரண்டு கிலோ திராட்சைகளை வாங்கி அவற்றை காய வைக்கும் பொழுது அவை ஒன்றறை கிலோவாக மாறிவிடும், ஆனால் இதற்கு மதிப்பும் அதிகம். இந்த ஒரு கிலோ திராட்சைகளை விற்பனை செய்யும் பொழுது 200 ரூபாயிலிருந்து 250 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யலாம். 

தயாரித்த உலர் திராட்சைகளை எந்த இடங்களில் விற்பனை செய்யலாம் என்றால், நாட்டு மருந்து கடை, சூப்பர் மார்க்கெட், டிபார்ட்மென்ட் ஸ்டோர், சிறிய பெட்டி கடைகள் போன்ற இடங்களில் விற்பனை செய்யலாம். இவற்றை விற்பனை செய்யும் பொழுது வாரத்திற்கு மட்டுமே 3,000 ரூபாய் என்றால், மாதம் 90,000 ரூபாய் வரையும் சம்பாதிக்கலாம். எனவே  இந்த பிஸ்னஸ் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தால் நீங்களும், இந்த தொழிலை செய்து அதிகமான லாபத்தை பெறுங்கள்.

 

பெண்கள் அதிகமாக வாங்கும் பொருள் இந்த பிஸ்னஸை செய்தால் மாதம் 80,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil