Aari Business Ideas in Tamil | ஆரி பிசினஸ் ஐடியாஸ்
வீட்டில் இருக்கும் பெண்களே நீங்கள் ஆரி கலையில் ஈடுபாடு காட்டுபவர்கள் என்றால் நீங்கள் வீட்டிலே உங்கள் ஆரி தொழிலை தொடங்கலாம். எப்படி ஆரி தொழிலை தொடங்குவது என்று குழப்பமாக இருந்தால் இந்த பதிவை முழுமையாக பார்த்து பிசினஸ் ஐடியாஸை தெரிந்துகொன்டு உங்கள் தொழிலை தொடங்குங்கள்.
இந்த காலகட்டத்தில் ஆரி தொழில் மிகவும் ட்ரெண்டிங் ஆக இருக்கிறது. ஆரி கலையை கற்றுக்கொள்வதில் பெண்கள் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள். ஒரு தெருவில் குறைந்தபட்சம் நான்கு, ஐந்து வீட்டில் இருக்கும் பெண்கள் ஆரி தொழில் செய்கிறார்கள். நீங்களும் ஆரி கலையை கற்றுக்கொண்டு உங்கள் தொழிலை தொடங்கலாம்.
பெண்களே உங்களுக்கு எங்கு ஆரி கலையை கற்றுக்கொள்வது என்று தெரியவில்லையா.? கவலைவேண்டாம் ஏதேனும் ஒரு ஆரி கிளாஸ்க்கு சென்று ஆரி கலையை கற்றுக்கொள்ளலாம் இல்லையெனில் ஆன்லைன் மூலம் ஆரி வீடியோக்களை பார்த்தும் கற்றுக்கொள்ளலாம். ஆரி தொழில் தொடங்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் ஆரி கலையை பேசிக் முதல் அட்வான்ஸ் வரை(Basic to Advance) கற்று கொண்ட பிறகு உங்கள் தொழிலை தொடங்குங்கள்.
எப்படி ஆரி தொழிலை தொடங்குவது?
- நீங்கள் ஆரி கலையை கற்றுக்கொள்ளும்போது நீங்கள் சரியாக செய்தலும் உங்களுக்கு அந்த ஆரி ப்ளௌஸ் பினிஷிங்(Aari Blouse Finishing) சரியாக வராது. சில பெண்கள் ஆரி ப்ளௌஸ் பினிஷிங்க்கை சரியாக செய்வார்கள் சில பெண்களுக்கு அந்த பினிசிங்கில் சிறு சிரமம் இருக்கும். சிரமாக இருக்கிறது என்று என்னும் பெண்கள் உங்கள் ஆரி ப்ளௌஸ் பினிஷிங்க்கை சரியாக பயிற்சி செய்து கற்றுக்கொள்ளுங்கள்.
- ஆரி தொழிலில் உங்கள் வாடிக்கையாளர்களை திருப்தி படுத்த வேண்டும். வாடிக்கையாளர்கள் கேட்கும் டிசைன் மற்றும் ஆரி ப்ளௌஸ் பினிஷிங் சரியாக இருந்தால் அவர்கள் மீண்டும் மீண்டும் உங்களை தேடி வருவார்கள். வாடிக்கையாளர்கள் நீங்கள் செய்யும் வேலை அவர்களுக்கு பிடித்து தான் உங்களிடம் வருவார்கள்.
ட்ரெண்டிங்ல இருக்கும் இந்த தொழிலை செய்யுங்க
Marketing Skill:
- தொழிலில் Marketing Skill என்பது மிகவும் முக்கியமான ஒன்று. முதலில் நீங்கள் செய்யும் தொழிலை உங்கள் தெருவில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். தெருவில் உள்ளவர்கள் மற்றும் உறவினர்களுக்கு நீங்கள் ஆரி ப்ளௌஸ் போட்டு கொடுத்தால் அவர்கள் அவர்களுக்கு தெரிந்தவர்களிடம் உங்கள் வேலையை பற்றி கூறுவார்கள்.
- உங்கள் வேலையை இணையதளங்களில் பதிவிட வேண்டும் Facebook, Instagram, Whatsapp, Youtube Videos போன்ற வலைத்தளத்தில் நீங்கள் உங்கள் வேலையை வீடியோவாக எடுத்து இணையதளத்தில் பதிவிடுங்கள். இதைப்பார்த்து நிறைய வாடிக்கையாளர்கள் உங்களை தேடி வருவார்கள்.
நீங்கள் வாடிக்கையாளர்களை தேடிச்சென்றால் வாடிக்கையாளர்கள் உங்களை தேடி வருவார்கள்.
Investment:
- ஆரி பிசினஸை பொறுத்தவரை நீங்கள் நிறைய பணம் முதலீடு செய்ய அவசியம் இல்லை. உங்களிடம் இருக்கும் குறைந்தபட்ச தொகையை வைத்து நீங்கள் உங்கள் ஆரி தொழிலை தொடங்கலாம். உங்களிடம் ஆரி ஸ்டாண்ட்(Aari Stand) மற்றும் ஆரிக்கு தேவையான பொருட்கள்(Materials) இருந்தாலே போதும் அதை வைத்தே நீங்கள் உங்கள் வேலையை செய்யலாம். ஆரிக்கு தேவையான பொருட்கள்(Materials) மிகவும் தரம்(Quality) வாய்ந்ததாக இருக்க வேண்டும்.
ஆரி பிசினஸ் செய்வது மிகவும் நன்மை இப்போது ட்ரெண்டிங் ஆக உள்ளது என்பதால் இந்த பிசினஸில் நல்ல லாபத்தை பெறலாம். யாரு வேண்டுமானாலும் இந்த தொழிலை கற்றுக்கொண்டு பிசினெஸ் செய்யலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |