Suya Tholil Ideas
படித்து முடித்து விட்டு வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். எங்கள் பொதுநலம்.காம் பதிவின் மூலம் தினமும் ஒவ்வொரு தொழிலை பற்றி கூறிக்கொண்டு வருகிறோம். சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அதற்கான முயற்சிகளை யாரும் எடுப்பதில்லை. நாம் ஒரு தொழில் தொடங்குவதற்கு முன்னால், என்ன தொழில் தொடங்கலாம், முதலீடு எவ்வளவு, அந்த தொழிலை தொடங்கினால் வருமானம் கிடைக்குமா..? என்றெல்லாம் யோசிக்க வேண்டும். அந்த வகையில் இன்றைய பதிவின் மூலம் ஒரு சிறந்த தொழிலை பற்றி தான் பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Aloe Vera Powder Business Ideas in Tamil:
சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தொழிலை தாராளமாக தொடங்கலாம். கற்றாழையை பற்றி நம் அனைவருக்குமே தெரியும். கற்றாழை பல நன்மைகளை கொண்டுள்ளது. இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன.
அதனால் நீங்கள் எந்தவொரு தயக்கமும் இல்லாமல் கற்றாழை பவுடர் தயாரித்து விற்பனை செய்யலாம். இன்றைய நிலையில் இந்த கற்றாழை பவுடருக்கு Demand அதிகமாக இருக்கிறது. அதனால் இந்த தொழிலை நீங்கள் தொடங்கினால் நல்ல வருமானம் கிடைக்கும்.
இடம்:
இந்த தொழில் தொடங்குவதற்கு தனியாக ஒரு இடமெல்லாம் தேவையில்லை. இந்த தொழிலை நீங்கள் உங்கள் வீட்டிலேயே தொடங்கலாம். வீட்டில் சிறிய இடம் இருந்தால் போதும் தினமும் நல்ல லாபம் பார்க்கலாம்.
அரைத்து வைத்தால் மட்டும் போதும் தினமும் 3000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..! |
மூலப்பொருட்கள்:
- கற்றாழை
- சீல் இயந்திரம் – Heat Sealing Machine
- பாலித்தீன் கவர்
பவுடர் தயாரிக்கும் முறை:
கற்றாழையை நீங்கள் கடையில் இருந்து கிலோ கணக்கில் அல்லது உங்களுக்கு தேவையான அளவு வாங்கிக்கொள்ள வேண்டும்.
முதலில் கற்றாழையை சுத்தமாக கழுவி எடுத்து கொள்ள வேண்டும். பின் அதை மெல்லிய துண்டுகளாக அதாவது சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். அப்போது தான் கற்றாழை விரைவாக காயும்.
பின் நறுக்கிய கற்றாழை நன்கு காய்ந்து வருவதற்கு 2 நாட்கள் தேவைப்படும். அதனால் இதை வெயிலில் 2 நாட்கள் நன்றாக காயவைக்க வேண்டும்.
2 நாட்கள் கழித்து கற்றாழை ஒரு சுருங்கிய பதத்திற்கு வந்து விடும். அதை நீங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் மிக்சியில் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு பொடியாக வரும் வரை அரைத்து கொள்ள வேண்டும்.
பின் இந்த பவுடரை நீங்கள் பேக் செய்வதற்கு கவர் தேவைப்படும். அதை நீங்கள் கடைகளில் இருந்து 100 கிராம் அல்லது 200 கிராம் அளவிலான பாலித்தீன் கவர்களை வாங்க வேண்டும்.
பிறகு அந்த கவர்களில் 100 கிராம் மற்றும் 200 கிராம் அளவுகளில் கற்றாழை பவுடரை நிரப்ப வேண்டும். பின் அந்த கவரை சீல் இயந்திரத்தை கொண்டு பேக் செய்ய வேண்டும். பின் இந்த கவரின் மேல் உங்கள் தகவல்களை அச்சிட்டு விற்பனை செய்யலாம்.
இதையும் படியுங்கள்=> இந்த 5 தொழில்களில் ஒன்றை தொடங்கி பாருங்க லாபம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்..!
எப்படி விற்பனை செய்வது..?
முதலில் இந்த பவுடரை நீங்கள் உங்கள் பகுதிகளில் இருக்கும் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். இதை நீங்கள் மருந்தகம், இயற்கை அங்காடி, பேன்ஸி ஸ்டோர் போன்ற கடைகளில் விற்பனை செய்யலாம்.
இந்த கற்றாழை பவுடருக்கு Demand அதிகமாக இருப்பதால் இதை கட்டாயம் வாங்குவார்கள். அதனால் நீங்கள் இதை கிலோ கணக்கில் தயாரித்து விற்பனை செய்யலாம்.
பின் வியாபாரம் நன்றாக நடக்கும் போது இந்த கற்றாழை பவுடரை நீங்கள் ஆன்லைனிலும் விற்பனை செய்து நல்ல லாபம் பார்க்கலாம்.
ஒரு 200 கிராம் பவுடரில் விலை 300 ரூபாய் வரை இருக்கும். நீங்கள் ஒரு நாளைக்கு 10 பாக்கெட் பவுடர் விற்பனை செய்தால் ஒரு நாளைக்கு 3000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.இதையும் படியுங்கள்=> முதலீடு 600 மட்டும் போதும் தினமும் 2000 ரூபாய் வரை லாபம் பார்க்கலாம்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |