வெறும் 1000 ரூபாய் முதலீட்டில் கிலோ கணக்கில் லாபம் தரும் தொழில்..! Aloe Vera Powder Business Plan in Tamil
சொந்தமாக ஏதாவது ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று துடிப்புடன் இருக்கும் அனைவருக்கும் பொதுநலம்.காம் பதிவின் அன்பு வணக்கங்கள்.. இன்றைய கால கட்டத்தில் மற்றவர்களுக்கு கீழ் வேலை செய்வதற்கு பதில் ஏதாவது சொந்தமாக தொழில் தொடங்குவதை தான் அனைவரும் கௌரவமாக நினைக்கின்றன. அதுவும் உண்மை தான் எவ்வளவு நாள் தான் நாமும் மற்றவர்களுக்கு கீழ் பணிபுரிந்து சம்பளம் வாங்குவது. நாமும் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் அல்லவா. அவர்களுக்கு உதவும் வகையில் நாம பொதுநலம்.காம் பதிவில் பலவகையான தொழில் யோசனைகளை வழங்கி வருகிறோம். அந்த வகையில் ஆண் மற்றும் பெண் இருவரும் வீட்டில் இருந்தபடியே தினமும் நல்ல வருமானம் தரக்கூடிய தொழில் பற்றி இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
என்ன தொழில் அது?
நாம் இப்போது தெரிந்துகொள்ள இருக்கும் தொழில் என்னவென்றால் கற்றாழை பவுடர் தயாரிப்பு தொழில் பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த தொழிலுக்கு சந்தையில் அதிக வரவேற்பு இருக்கிறது. குறிப்பாக 200 கிராம் கற்றாழை பவுடர் தோராயமாக 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆக இந்த தொழிலை நீங்கள் தொடங்குவதன் மூலம் நல்ல லாபம் பெற முடியும்.
இடம் வசதி:
கற்றாழை பவுடர் தயாரிப்பு தொழிலுக்கு பெரிய அளவில் இடம் வேண்டும் என்று எந்த ஒரு அவசியமும் இல்லை. உங்கள் வீட்டில் 10-க்கு 10 இடம் இருந்தாலே போதும். மிக எளிதாக இந்த தொழிலை ஆரம்பித்துவிடலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
30,000 ரூபாய் முதலீட்டில் மாதம் மாதம் 50,000 ரூபாய் சம்பாதிக்கலாம்
மூலப்பொருள்:
கற்றாழை, பேக்கிங் கவர் இவை இரண்டும் இருந்தால் போதும். வேறு எந்த பொருட்களும் தேவைப்படாது.
கற்றாழை பவுடர் தயாரிக்கும் முறை:
கற்றாழையை சுத்தமாக மண் இல்லாமல் கழுவி வெயிலில் நன்றாக வற்றல் போல் காயவைத்து எடுக்க வேண்டும்.
பிறகு இந்த வற்றலை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பவுடர் போல் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பிறகு அரைத்த பவுடரை ஒரு முறை சல்லடையால் சலித்து 50 கிராம், 100 கிராம், 150 கிராம், 200 கிராம் என்று பேக்கிங் செய்து விற்பனை செய்யலாம்.
முதலீடு:
குறைந்தபட்சம் உங்களிடம் 1000 ரூபாய் இருத்தலே போது இந்த தொழிலை நீங்கள் வீட்டில் இருந்து மிக எளிதாக ஆரம்பித்துவிட முடியும்.
சந்தை வாய்ப்பு:
நீங்கள் தயார் செய்த கற்றாழை பவுடரை இயற்கை அங்காடி, நாட்டுமருந்து கடை, மல்லிகை கடை, பியூட்டி பார்லர் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோர் என்று அனைத்து கடைகளிலும் நீங்கள் பேக்கிங் செய்து விற்பனை செய்யலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
200 ரூபாய் முதலீடு இருந்தால் போதும் நீங்களும் பத்து பேருக்கு முதலாளி ஆகலாம்..!
வருமானம்:
நீங்கள் ஒரு நாளுக்கு மூன்று கிலோ கற்றாழை பவுடரை விற்பனை செய்துவிட்டீர்கள் என்றாலே உங்களுக்கு 3,000 ரூபாய் வருமானம் கிடைக்கும். அப்படியென்றால் ஒரு வாரத்தில் 21,000/- வருமானம் கிடைக்கும். ஒரு மாதத்திற்கு 84,000/- ரூபாய் வரும்மானம் கிடைக்கும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |