மாதம் Rs.50000 to Rs. 1 Lakh தரக்கூடிய மிக சிறந்த 3 தொழில்..!

சிறந்த மூன்று (3 Profitable Business Ideas in Tamil) தொழில் வாய்ப்புகள்..!

நச்சுனு மூன்று தொழில் வாய்ப்புகளை (Profitable Business Idea in Tamil) பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம். இந்த மூன்று தொழிலில் ஏதேனும் ஒரு தொழிலை தெரிந்து கொண்டாலே போதும் மாதம், மாதம் ரூபாய் 50,000/- முதல் 1,00,000/- வரை நம்மால் சம்பாதிக்க முடியும்.

சரி வாங்க நல்ல வருமானம் தரக்கூடிய மூன்று தொழில் (kudisai tholil) பற்றி இப்போது நாம் தெரிந்து கொள்வோம்.

App Development Business Idea in Tamil:

இந்த app development தொழில் மிகவும் சிறந்த ஒன்றாக விளங்குகிறது. இந்த app development பிசினஸ் ஒன்றும் கஷ்டமாக இருக்காது.

பல சுவாரசியமான செய்திகளுக்கு எங்கள் Telegram, Youtube" சேனல Join" பண்ணுங்க: Pothunalam Telegram Pothunalam Youtube

இந்த app development-க்கு தனியாக பயிற்சி மையங்கள் இருக்கிறது. அங்கு சென்று app creation course ஒரு ஆறு மாதங்கள் படித்தால் போதும். இந்த app development business சுயமாகவே செய்துவிட முடியும்.

மேலும் தினமும் நாம் புதிதாக ஆப் கிரியேஷன் செய்து பிளே ஸ்டோரில் அப்டேட் செய்துகொண்டே இருந்தால் போதும் குறைந்தது மாதம் மாதம் 50,000/- முதல் 1,00,000/- வரை சம்பாதிக்க முடியும்.

உதாரணம்:

ஒரு காலத்தில் அனைத்து நிறுவனங்களுக்கும் எப்படி வெப்சைட் இல்லாமல் இருந்தது, ஆனால் இப்போதோ அனைத்து நிறுவனங்களுக்கும் வெப்சைட் இருக்கிறதோ, அதேபோல் app development business எதிர்காலத்தில் அனைத்து நிறுவனங்களுக்கும் app என்பது கண்டிப்பாக இருக்கும்.

newசுயதொழில் பேப்பர் கவர் தயாரிப்பு..! சூப்பர் வருமானம்..!

Online Sales Business Idea in Tamil:

இப்போதேல்லாம் சாதாரண குண்டூசியில் இருந்து பலவகையான பொருட்கள் அனைத்தையும் நம் வீட்டில் இருந்து கொண்டே ஆன்லைனில் ஆடர் செய்து கொள்ளும் பழக்கம் அதிகரித்து கொண்டே இருப்பதினால், இந்த online sales business தலையோங்கி கொண்டேதான் இருக்கிறது. எனவே மாதம், மாதம் வீட்டில் இருந்து கொண்டே நல்ல வருமானம் பெறவேண்டும் என்றால் கண்டிப்பாக இந்த online sales business செய்யலாம்.

இந்த online sales business செய்ய விரும்புபவர்கள், உடனே online seller account கிரியேட் செய்ய வேண்டும். மேலும் aliexpress.com மற்றும் alibaba.com போன்ற வெப்சைட்டில் நமக்கு தேவையான அனைத்து பொருட்களும் மிக குறைந்த விலையில் விற்கப்படும். அவற்றில் தங்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் ஆடர் செய்ய வேண்டும். பின்பு amazon seller account கிரியேட் செய்து கொள்ளவும். பின்பு amazon fba program சேரவேண்டும்.

ஏன் amazon fba program-யில் சேரவேண்டும் என்றால் நாம் வாங்கி வைத்துள்ள பொருட்களையும் நாம் பேக்கிங் செய்ய வேண்டும் என்று அவசியம் இல்லை. நாம் வாங்கிய அனைத்து பொருட்களையும் அமேசானிடம் கொடுத்துவிடலாம், அவர்கள் அந்த பொருட்கள் தனியாக ஸ்டோர் செய்து வைத்துக்கொள்வார்கள். தங்களிடம் வாடிக்கையாளர்கள் எப்போது ஆடர் கேக்கின்றார்களோ அப்போது அமேசான் நேரடியாக தங்களது வாடிக்கையாளர்களுக்கு ஆடரை தந்துவிடுவார்கள்.

இந்த தொழில் செய்வதற்கு குறைந்தது 50000/- முதலீடு செய்ய வேண்டும். இருப்பினும் இந்தியாவில் ஆன்லைனில் பொருட்களை ஆடர் செய்யும் பழக்கம் அதிகரித்து கொண்டே இருப்பதால் இந்த ஆன்லைன் சேல்ஸ் பிசினஸ்ஸை தயங்காமல் செய்யலாம்.

Solar Installation Business Idea in Tamil:

Solar Installation Business Idea in Tamil (siru thozhil vagaigal in tamil) பொறுத்தவரை இப்போது அதிகமாக solar installation பயன்படுத்தி கொண்டு வருகின்றனர். இந்த solar installation business-க்கான பயிற்சிகளை நீங்கள் ஒரு 3 மாதங்கள் கற்றுக்கொண்டால் போதும், தாங்களே சுயமாக ஒரு ஆபிஸ் வைத்து இந்த தொழிலை துவங்கி விடமுடியும்.

மேலும் கிராமப்புறங்கள் மற்றும் நகர்புறங்கள் என்று அனைத்து இடங்களிலும் இந்த சோலார் பேனலின் பயன்கள் அதிகமாக இருப்பதினால் கண்டிப்பாக இந்த solar installation business எதிர்காலத்தில் ஒரு நல்ல வருமானத்தை அளிக்கும் என்பதால் உடனே இதற்கான பயிற்சிகளை கற்றுக்கொண்டு தயங்காமல் இந்த தொழிலை துவங்கலாம்.

இந்த மூன்று தொழில்களும் எதிர்காலத்தில் நல்ல வருமானத்தை அளிக்கும் தொழிலாக விளங்குவதால் இதற்கான பயிற்சிகளை கற்றுக்கொண்டால் தங்களது எதிர்காலத்தை பற்றி கவலையே வேண்டாம்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில்  போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>siru tholil ideas in tamil 2021
SHARE