இந்த தொழிலுக்கு முதலீடே தேவையில்லை, ஆனால் தினமும் கைநிறைய சம்பாதிக்கலாம்..!

Advertisement

Amla Candy Business

இன்றைய நிலையில் பலரும் சொந்தமாக ஒரு தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. அதற்காக நாம் பல முயற்சிகளை எடுக்க வேண்டும். படித்து முடித்துவிட்டு வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். அந்த வகையில் இந்த பதிவின் மூலம் ஒரு சிறந்த தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம். அதனால் இந்த பதிவை படித்து பயன்பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Amla Candy Business in Tamil: 

Amla Candy Business

மிட்டாய் என்றாலே குழந்தைகள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இன்னும் சொல்லப்போனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே மிட்டாயை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் நாம் என்ன தான் கடைகளில் விற்கும் மிட்டாயை வாங்கி சாப்பிடாலும் அதில் ஆரோக்கியம் குறைவாக தான் இருக்கும்.

அதனால் நாம் வீட்டிலேயே குழந்தைகளுக்கு மிட்டாய் செய்து கொடுக்கலாம் என்று பலரும் நினைப்பார்கள். அதனால் நாம் இந்த தொழிலை வீட்டில் இருந்தபடியே செய்யலாம். இதனால் நமக்கு நல்ல வருமானம் கிடைக்கும். இந்த தொழில் செய்வதற்கு என்னென்ன தேவை என்று இங்கு பார்ப்போம்.

மூலப்பொருட்கள்:

Amla Candy  

  1. நெல்லிக்காய் – 1 கிலோ
  2. வெல்லம் (அ) சர்க்கரை – 800 கிராம்
வீட்டில் இருந்தபடியே தினமும் 3,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய சிறந்த தொழில்..!

நெல்லிக்காய் மிட்டாய் தயாரிக்கும் முறை: 

நெல்லிக்காய் மிட்டாய் தயாரிக்கும் முறை

நெல்லிக்காயை 1 கிலோ அல்லது உங்களுக்கு தேவையான அளவு வாங்கி கொள்ள வேண்டும். பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள்.

பின் அதில் நெல்லிக்காயை போட்டு 10 லிருந்து 15 நிமிடம் வரை நன்றாக வேகவைக்க வேண்டும். நெல்லிக்காயில் வெடிப்பு வந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

பின் நெல்லிக்காயின் மேல் இருக்கும் தோலை மட்டும் நீக்கி விட்டு அதை கட் பண்ணி கொள்ளுங்கள்.

பிறகு அதில் 800 கிராம் அளவிற்கு வெல்லத்தையோ அல்லது வெள்ளை சர்கரையோ சேர்த்து கொள்ள வேண்டும். 1 கிலோ நெல்லிக்காயிற்கு 800 கிராம் அளவு தான் சர்க்கரை சேர்க்க வேண்டும். 

நெல்லிக்காயில் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின் 10 நிமிடம் கழித்து பார்த்தால் சர்க்கரை உருகி இருக்கும்.

அதை நன்றாக கலந்து விட்டு வெயிலில் 3 நாட்கள் வரை நன்றாக காயவைக்க வேண்டும். அவ்வளவு தான் நெல்லிக்காய் மிட்டாய் தயார்..!

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மாதம் மாதம் லட்ச கணக்கில் சம்பாதிக்கலாம்

விற்பனை செய்யும் முறை:

விற்பனை செய்யும் முறை

 

இந்த நெல்லிக்காய் மிட்டாயை நீங்கள் பேக் செய்து கடைகளுக்கு விற்பனை செய்ய வேண்டும்.

இந்த மிட்டாயை நீங்கள் கிராம் அளவிலோ அல்லது கிலோ கணக்கிலோ உங்கள் ஊர் பகுதியில் இருக்கும் பெட்டிக் கடை, ஆர்கானிக் ஸ்டோர், மளிகை கடை போன்ற இடங்களில் விற்பனை செய்யலாம்.

 நெல்லிக்காய் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இந்த நெல்லிக்காய் மிட்டாய் சாப்பிடுவதால் நோய்எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். முடி உதிர்வதை தடுக்கும். பசி உணர்வை தூண்டும். இதில் வைட்டமின் C அதிகமாக இருப்பதால் இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. மேலும் இதில் இருக்கும் சத்துக்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு பெரிதும் உதவுகிறது.  

அதனால் மக்கள் கட்டாயம் இதை வாங்கி சாப்பிடுவார்கள். இந்த நெல்லிக்காய் மிட்டாய் 1 கிலோ 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதுவே நீங்கள் 10 கிலோ விற்றால் உங்களுக்கு 1 நாளைக்கு 3000 ரூபாய் வரை கிடைக்கும்.

இந்த வருடம் இந்த தொழில்களை ஆரம்பித்தால் நீங்கள் தான் ராஜா..!

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  —> siru tholil ideas in tamil
Advertisement