Amla Juice Manufacturing Business in Tamil
இன்றைய காலகட்டத்தில் அனைவருக்குமே தங்களது வாழ்க்கையை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படி கொண்டு செல்ல வேண்டும் என்றால் ஏதாவது சுயதொழில் தொடங்க வேண்டும். அப்படிப்பட்ட ஆசை உள்ளவர்களுக்காக தான் நமது பதிவின் மூலம் தினமும் ஒரு அருமையான சுயதொழில் பற்றி அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் நெல்லிக்காய் ஜூஸ் தயாரிக்கும் தொழிலை பற்றி தான் விரிவாக பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள நெல்லிக்காய் ஜூஸ் தயாரிக்கும் தொழிலை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Amla Juice Manufacturing Business Plan in Tamil:
பொதுவாக நெல்லிக்காயில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது என்று நமக்கு தெரியும் ஆனால் ஒரு சிலருக்கு இந்த நெல்லிக்காயை முழுதாக சாப்பிடுவது என்பது பிடிக்காது.
அப்படி பிடிக்காதவர்கள் இந்த நெல்லிக்காய் ஜூஸினை வாங்கி குடிக்கிறார்கள். அதனால் நீங்கள் இந்த நெல்லிக்காய் ஜூஸ் தயாரிக்கும் தொழிலை தொடங்கினீர்கள் என்றால் நல்ல லாபம் கிடைக்கும்.
முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:
இந்த நெல்லிக்காய் ஜூஸ் தயாரிக்கும் தொழிலுக்கு தேவையான பொருட்கள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள நெல்லிக்காய், Amla Juice Making Machine, பாட்டில்கள் மற்றும் Sealing Machine ஆகியவை தேவைப்படும்.
இந்த Amla Juice Making Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். அதன் ஆரம்ப விலை தோராயமாக 10,000 ரூபாய் ஆகும். அதே போல் இந்த Sealing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 வீட்டில் இருந்தபடியே மாதம் 1,20,000 ரூபாய் வரை வருமானம் தரும் அருமையான தொழில்
இது ஒரு உணவு சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
மேலும் நீங்கள் தயாரித்து வைத்துள்ள Amla Juice–னை Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டிலேயே நல்ல தூய்மையான சிறிய இடம் இருந்தால் மட்டும் போதும்.
தயாரிக்கும் முறை:
முதலில் நாம் வாங்கி வைத்துள்ள நெல்லிக்காய்களை நன்கு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அதனை Amla Juice Making Machine-ல் அதற்கென்று ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் சேர்த்து விட்டு Machine-னை On செய்தீர்கள் என்றால் அதுவே நெல்லிக்காய் ஜூஸினை தயாரித்து தந்து விடும்.
பிறகு அதனை பாட்டில்களில் சேர்த்து Sealing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.
விற்பனை செய்யும் முறை:
நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள நெல்லிக்காய் ஜூஸினை நாட்டு மருந்து கடைகள், மளிகை கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் நேரடியாக சென்று விற்கலாம்.
அப்படியில்லை என்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 1 லிட்டர் நெல்லிக்காய் ஜூஸின் விலை 200 – 250 ரூபாய் என்றால், நீங்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 10 லிட்டர் நெல்லிக்காய் ஜூஸினை விற்பனை செய்கிறீர்கள் என்று வைத்து கொண்டால் 2,000 – 2,500 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
ஒரு மாதத்திற்கு 60,000 – 75,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். அதனால் இந்த நெல்லிக்காய் ஜூஸ் தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 எவ்வளோ நாளைக்கு தான் ஒரே தொழிலை செய்வீங்க கொஞ்சம் Different-ஆ இந்த தொழிலை செய்து பாருங்க
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |