யாரும் முயற்சிக்காத இந்த தொழிலை இன்றே தொடங்கினால் நீங்களும் முதலாளி ஆகலாம்..!

Advertisement

Arugampul Powder Making Business

இந்த காலகட்டத்தில் பலரும் படித்து முடித்துவிட்டு வேலை தேடி கொண்டிருக்கிறார்கள். அதுபோல சொந்தமாக ஒரு தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். சொந்தமாக தொழில் தொடங்குவது என்பது அவ்வளவு பெரிய விஷயம் இல்லை. நம்முடைய முயற்சி மட்டும் இருந்தால் போதும் நாமும் முதலாளியாக மாறலாம். அதனால் உங்களுக்கு உதவும் வகையில் தினமும் இந்த பதிவின் வாயிலாக பல வணிக யோசனைகளை பதிவிட்டு வருகின்றோம். அதுபோல இன்றைய பதிவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த பதிவை முழுமையாக படித்து பயன்பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Arugampul Powder Making Business in Tamil:

Arugampul Powder

சொந்தமாக ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தொழிலை தாராளமாக தொடங்கலாம். அது வேறவொன்றும் இல்லை. அருகம்புல் பவுடர் தயாரித்து விற்பனை செய்யும் தொழிலை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம்.

அருகம்புல் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இது ஆரோக்கியம் தரும் மூலிகையாக பயன்படுகிறது. அருகம்புல் உடலில் உள்ள பல வியாதிகளை போக்கும் மருந்தாக பயன்படுகிறது. சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளையும் போக்கும் மருந்தாக இது பயன்படுகிறது.

அதனால் நீங்கள் இந்த பவுடர் தயாரித்து நீங்கள் விற்பனை செய்யலாம். இந்த பவுடர் தயாரித்து விற்பனை செய்வதற்கு அதிகளவு பணம் செலவாகாது. இந்த அருகம்புல் பவுடர் ஆன்லைனில் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதனால் இந்த தொழிலை நீங்கள் தொடங்கி நல்ல லாபம் பார்க்கலாம்.

5 நிமிடத்தில் 1850 ரூபாய் சம்பாதிக்காலம்..! அதுவும் 1 பீஸ் மூலமாக மட்டும் மிஸ் பண்ணாம இந்த தொழிலை செஞ்சி பாருங்க…!

முதலீடு: 

இந்த தொழில் செய்வதற்கு அதிகளவு முதலீடு தேவைப்படாது. பேக்கிங் செய்யும் கவர்களின் விலை மட்டும் தான். அதுவும் 500 ரூபாய்க்குள் வந்துவிடும். அதனால் எந்தவொரு தயக்கமும் இல்லாமல் இந்த தொழிலை தொடங்கலாம்.

இடம்: 

இந்த தொழில் செய்வதற்கு தனியாக ஒரு இடமெல்லாம் தேவை கிடையாது. உங்கள் வீட்டில் சிறிய இடம் இருந்தாலே போதும். இந்த தொழிலை செய்து நல்ல லாபம்  பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்⇒ டெல்லி மொத்த வியபார சந்தை.. 20 ரூபாய்க்கு வாங்கி 200 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம்..!

அருகம்புல் பொடி தயாரிக்கும் முறை:

அருகம்புல் பொடி தயாரிக்கும் முறை

அருகம்புல் கடையில் காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியமே இல்லை. நம் வீட்டு பகுதியில் அதிகமாகவே காணப்படுகிறது. அதை பறித்து வந்து சுத்தமாக கழுவி கொள்ளவும்.

பின் அதை வெயிலில் 1 அல்லது 2 நாட்கள் காயவைக்க வேண்டும். 2 நாட்கள் கழித்து அதை மிக்சி ஜாரில் போட்டு தூளாக அரைத்து கொள்ள வேண்டும். பின் இதை கண்கவரும் பாக்கெட்களில் வைத்து பேக் செய்யவேண்டும். அப்போது தான் மக்கள் இதை வாங்குவார்கள்.

உங்கள் முகவரிகளை இந்த பாக்கெட்டில் அச்சிட வேண்டும். அப்போது தான் மக்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள். பின் இந்த பவுடரை உங்கள் பகுதியில் இருக்கும் நாட்டு மருந்து கடை, மெடிக்கல் ஷாப், அழகு நிலையங்கள் போன்ற இடங்களில் விற்பனை செய்ய வேண்டும்.

இந்த பவுடரை உங்களுக்கென்று ஒரு வலைத்தளம் ஆரம்பித்து ஆன்லைனிலும் விற்பனை செய்யலாம். ஆன்லைனில் இந்த அருகம்புல் பவுடர் 1 கிலோ 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனால் இந்த தொழிலை இன்றே தொடங்கி நல்ல லாபத்தை பெறுங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் வேலை செய்தால் 3000 ரூபாய் சம்பாதிக்கலாம்

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement