Avarampoo Powder Making Business in Tamil
நீங்கள் படித்து முடித்து விட்டு வேலை தேடிக் கொண்டிருப்பவரா..? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்காகத்தான். ஆம் நண்பர்களே நமது பதிவின் மூலம் தினமும் ஒரு அருமையான மற்றும் எளிய முறையில் தொடங்கக் கூடிய சுயதொழில்கள் பற்றி பார்த்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவிலும் ஒரு அருமையான சுயதொழில் பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அது என்ன தொழில் என்றால் ஆவாரம் பூ பொடி தயாரிக்கும் தொழில் தான். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள ஆவாரம் பூ பொடி தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள். சரி வாங்க நண்பர்களே இந்த தொழிலை எவ்வாறு தொடங்குவது மற்றும் இதற்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் முதலீடு பற்றி எல்லாம் இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Avarampoo Powder Making Business Paln in Tamil:
இன்றைய சூழலில் சில மருந்துகள் தயாரிக்கவும், சில அழகு சாதன பொருட்கள் தயாரிக்கவும் இந்த ஆவாரம் பூ பொடி பயன்படுகிறது. அதனால் இந்த ஆவாரம் பூ பொடி தயாரிக்கும் தொழிலை நீங்கள் தொடங்குனீர்கள் என்றால் குறைந்த காலத்தில் அதிக லாபம் கிடைக்கும்.
அதனால் உடனடியாக இந்த ஆவாரம் பூ பொடி தயாரிக்கும் தொழிலை தொடங்குங்கள்.
முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:
இந்த ஆவாரம் பூ பொடி தயாரிக்கும் தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் நல்ல நிலையில் உள்ள ஆவாரம் பூ, மிக்சி மற்றும் Packing Machine போன்றவை தேவைப்படும்.
இந்த Packing Machine-ன் விலை அதன் மாடலை பொறுத்து மாறுபடும். இதன் ஆரம்ப விலை ரூபாய் 1,000 ஆகும். இது ஒரு உணவு சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் இதனை தொடங்குவதற்கு FSSAI ஆவணம் கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
இதையும் படித்துப்பாருங்கள்=> உங்களிடம் வெறும் 500 ரூபாய் உள்ளதா..? அப்போ நீங்களும் முதலாளி ஆகலாம்..!
மேலும் நீங்கள் தயாரித்து வைத்துள்ள ஆவாரம் பூ பொடியினை Online மூலமாக விற்பனை செய்ய போகிறீர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
இந்த தொழில் செய்வதற்கு உங்கள் வீட்டிலேயே நல்ல தூய்மையான இடம் இருந்தால் மட்டும் போதும்.
தயாரிக்கும் முறை:
முதலில் நாம் வாங்கி வைத்துள்ள ஆவாரம் பூக்களை தண்ணீரை ஊற்றி நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அது நன்கு சருகு போல மாறும் வரை வெயிலில் காயவைத்து கொள்ளுங்கள்.
பிறகு அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனை நன்கு சலித்து Packing Machine-யை பயன்படுத்தி பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> எவ்வளோ நாளைக்கு தான் ஒரே தொழிலை செய்வீங்க கொஞ்சம் Different-ஆ இந்த தொழிலை செய்து பாருங்க..!
விற்பனை செய்யும் முறை:
நாம் தயாரித்து பேக்கிங் செய்து வைத்துள்ள ஆவாரம் பூ பொடியை நாட்டு மருந்துக் கடைகள், மருந்துகள் தயாரிக்கும் மற்றும் அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் இடங்களுக்கெல்லாம் நீங்களே நேரடியாக சென்றும் விற்பனை செய்யலாம்.
அப்படி இல்லையென்றால் Online மூலமாகவும் விற்பனை செய்யலாம். தோராயமாக 1 கிலோ ஆவாரம் பூ பொடியின் விலை 650 – 700 ரூபாய் என்றால், நீங்கள் தோராயமாக ஒரு நாளைக்கு 10 கிலோ ஆவாரம் பூ பொடியினை விற்பனை செய்கிறீர்கள் என்றால் 6,500 – 7,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
அதனால் இந்த ஆவாரம் பூ பொடி தயாரிக்கும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் இதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
இதையும் படித்துப்பாருங்கள்=> கை நிறைய லாபம் தரக்கூடிய ஒரே தொழில்..! இதை மட்டும் செஞ்சு பாருங்க..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |