அதிக லாபம் தரும் சிறு தொழில்
நாம் சொந்தமாக சுயதொழில் தொடங்க வேண்டும் என்று முடிவு செய்த பிறகு அதனை தள்ளி போடாமல் உடனே செய்ய தொடங்க வேண்டும். உடனே எப்படி தொடங்குவது என்று நீங்கள் நினைக்கலாம். நாம் செய்ய போகும் தொழிலை மற்றவர்கள் செய்கிறார்களா என்று பார்ப்பதை விட மற்றவர் செய்யும் அந்த தொழிலை நாமும் செய்து எப்படி அதிகபட்சமான லாபத்தை பெறுவது என்று தான் யோசிக்க வேண்டும். அப்படிப்பட்ட வரிசையில் நிறைய வகையான தொழில்கள் இருக்கிறது. அதில் ஒன்றான மிகவும் டிமாண்ட் உள்ள தொழிலை பற்றி தான் இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Small Business Ideas:
இன்று அதிக லாபம் தரக்கூடிய Banana Fiber Business பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். இந்த தொழிலுக்கான லாபம் என்பது இன்று வரையிலும் சிறிதளவும் குறையாமல் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
அதனால் நீங்களும் இந்த Banana Fiber Business-ஐ செய்து வாழ்க்கையில் மிகவும் எளிதாக முன்னேறுவது என்று தெரிந்துக்கொள்வோம் வாங்க.
முதலீடு மற்றும் மூலப்பொருள்:
- வாழை பட்டை
- Banana Fiber Extraction Machine- ஆரம்ப விலை 65,000 ரூபாய்
இந்த தொழிலை தொடங்குவதற்கு தோராயமாக உங்களுக்கு 80,000 ரூபாய் முதலீடு இருந்தால் போதுமானது. அதன் பிறகு உங்களுடைய தொழில் முன்னேற்றத்திற்கு ஏற்றவாறு முதலீட்டை அதிகரித்து கொள்ளலாம்.
இதையும் படியுங்கள்⇒ நடுத்தர வர்க்கத்தினருக்கு அள்ளிக் கொடுக்கும் Offer இது தான்..! இந்த தொழிலால் உங்களுக்குத் தான் லாபம்..!
தேவைப்படும் இடம்:
உங்களுக்கு Banana Fiber Extraction Machine-ஐ பொருத்தி வேலை செய்யும் அளவிற்கு மின்சார வசதியுடன் கூடிய பெரிய அளவிலான இடம் தேவைப்படும்.
How to Start Banana Fiber Extraction Business:
முதலில் நீங்கள் மொத்தமாக வாழைமரம் வைத்து இருப்பவர்களிடம் இருந்து வாழை பட்டையை வாங்கி கொள்ளுங்கள். நீங்கள் மொத்தமாக அந்த இடத்தில் வாங்கினால் தொழில் செய்வதற்கு உதவியாக இருக்கும்.
அதன் பிறகு அந்த வாழை பட்டையினை Banana Fiber Extraction Machine-ல் பொருத்தி நார் போல செய்து கொள்ளுங்கள்.
இப்போது வாழை பட்டையில் இருந்து செய்து வைத்துள்ள நாரினை வெயிலில் 3 அல்லது 4 நாட்கள் வரை காய வைத்து விடுங்கள். அவ்வளவு தான் இப்போது Banana Fiber தயாராகிவிட்டது.
வருமானம்:
நீங்கள் தயார் செய்து வைத்துள்ள Banana Fiber-ஐ நூல், ஆடை, கயிறு, பாய் மற்றும் Hand Bag ஆகிய பொருட்கள் தயாரிக்கும் இடத்தில் நீங்கள் விற்பனை செய்யலாம்.
வெள்ளை நிற Banana Fiber-ஐ நீங்கள் தயார் செய்து இருந்தால் தோராயமாக 100 கிராம் Banana Fiber-ன் விலை 190 ரூபாய் ஆகும்.
அப்படி என்றால் ஒரு நாளைக்கு 100 கிராம் Banana Fiber-ல் 25 பேக்கிங் விற்பனை செய்தால் தோராயமாக 4,750 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். இது போல தொடர்ச்சியாக விற்பனை செய்தால் ஒரு வாரத்திற்கு தோராயமாக 33,250 ரூபாய் வரை வருமானம் பெறலாம்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 Customer உங்களை தேடி வரும் அளவிற்கு டிமெண்ட் உள்ள இந்த தொழிலை தொடங்குவதற்கு கால தாமதம் செய்யாதீர்கள்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |