தினமும் விடிந்தவுடன் 10,000/- வருமானம் தரும் சுயதொழில்..!

Advertisement

தினமும் விடிந்தவுடன் 10,000/- வருமானம் தரும் சுயதொழில்..! Banana Leaf Plate Making Business in Tamil..!

இந்த உலகத்தில் சுயதொழில் ஆரம்பிப்பதற்கு நிறைய ஐடியாக்கள் கொட்டிக்கிடக்கிறது. அந்த ஐடியாவை நாம் சரியாக ஆராய்ந்து, பின் அதில் எந்த ஐடியா நமக்கு சரியாக இருக்குமே அதனை தேர்ந்தெடுத்து தொழிலாக ஆரம்பித்தோம் என்றால் நல்ல வருமானத்தை பெற முடியும். தொழில் தொடங்குவதில் உங்களுக்கு எந்த ஒரு ஐடியாவும் கிடைக்கவில்லை என்றாலும் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவும் வகையில் நமது பொதுநலம்.காம் பதிவில் பலவகையான தொழில் யோசனைகளை பற்றி பதிவு செய்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் வாழை இலையை பயன்படுத்தி Banana Leaf Plate தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும். அதுவும் இந்த Banana Leaf Plate மட்டும் இல்லாமல். திருவிழா மற்றும் எந்த ஒரு நல்ல காரியங்களுக்கும் சரி, கெட்ட காரியங்களுக்கும் சரி வாழை இலை அவசியம் தேவைப்படும். ஆக நாம் வாழையிலை கொண்டு தொழில் தொடங்கும் போது நல்ல வருமானத்தை பெற முடியும். சரி வாங்க இந்த தொழிலை எப்படி ஆரம்பிக்கலாம் மற்றும் இதன் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Banana Leaf Plate Making Business in Tamil:

மூலப்பொருள்:

இந்த தொழிலுக்கான மிக முக்கியமான மூலப்பொருட்களே வாழை இலை தான். இந்த வாழை இலைகளை பெற தோப்புகள் வைத்திருப்பவர்களிடம் சென்று அந்த தோப்பை குத்தகை எடுத்து இலைகளை பறித்துக்கொள்ளலாம்.

முதலீடு:

வாழை தோப்பில் குத்தகை எடுப்பதற்கு ஒரு மாதத்திற்கு இடத்தை பொறுத்து 10 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை குத்தகைக்கு பணம் கொடுக்க வேண்டியதாக இருக்கும். இது மட்டும் தான் உங்களது முதலீடு தொகை ஆகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மாதம் 20 ஆயிரம் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம் வெறும் பேக்கிங் செய்தால் போதும்..!

சந்தை வாய்ப்பு:

தினமும் இலைகளை நீங்கள் காய்கறி மார்கெட், ஹோட்டல், ரெஸ்டாரண்ட், மண்டபம் என்று அனைத்து இடங்களிலும் விற்பனை செய்யலாம். இதன் மூலம் தினந்தோறும் நல்ல வருமானம் கிடைக்கும்.

Banana Leaf Plate

மேலும் வாழை இலைகளை தட்டுபோல் 3 இஞ், 5 இஞ், 9 இஞ், 10 இஞ், 12 இஞ், 14 இஞ் என்று பிளேட்டின் அளவுகளுக்கு ஏற்றது போல் கட் செய்து ஹோட்டல்களுக்கு விற்பனை செய்யலாம். இப்படி கட்  செய்து விற்பனை செய்யும் ஒவ்வொரு இலைகளின் அளவுகளுக்கு ஏற்றது போல் 1 ரூபாய் முதல் 3 ரூபாய் வரை தாராளமாக விற்பனை செய்யலாம். இப்படி கட் செய்து விற்பனை செய்யும் வாழை இலைகளுக்கு ஹோட்டல்களில் அதிக வரவேற்பு இருக்கிறது.

வருமானம்:

ஒரு நாளுக்கு சாதரண இலையை 2 ரூபாய் கணக்கில் 5,000-ம் இலைகளை சந்தையில் விற்பனை செய்தால் அதன் மூலம் 10,000/- வருமானம் கிடைக்கும்.

12 இஞ் அளவில் கட் செய்த ஒரு வாழை இலையை 3 ரூபாய் கணக்கில் 1,500 இலைகளை விற்பனை செய்தால் 4,500/- ரூபாய் வருமானம்  கிடைக்கும்.

ஆக மொத்தமாக ஒரு நாளுக்கு 14,500/- ரூபாய் வருமானமாக கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தினமும் 9,250 ரூபாய் சம்பாதிக்க போட்டியே இல்லாத அருமையான தொழில்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement