Best Small Business Ideas in Tamil
எவ்வளவு தொழில் செய்தாலும் இந்த தொழிலுக்கு மவுஸ் அதிகம் தான். அப்படி என்ன தொழில் அது என்று யோசிப்பது புரிகிறது. Beautician தொழில் தான். ஏன் இந்த தொழில் எப்போதும் மவுஸ் குறையாது என்கிறோம் என்றால் ஆண்களை விட பெண்கள் தான் அதிகளவு அழகிற்கு ஆர்வம் காட்டுகிறது.
அதேபோல் பெண்களும் சரி ஆண்களும் சரி Beautician படிப்பதில் ஆர்வம் செலுத்துகிறார்கள். மேலும் அதனை கற்றுக்கொள்ளவும் ஆர்வம் காட்டுகிறார்கள். இதனை வைத்து அருமையான தொழில் செய்யலாம் என்று இந்த பதிவில் உங்களுக்கு தெளிவாக தெரியப்படுத்த போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Beautician Business Ideas in Tamil:
பொதுவாக இந்த தொழில் செய்வதற்கு படித்திருக்கவேண்டும் என்று ஒன்றும் இல்லை. படித்து முடித்தவர்களை வைத்து இந்த தொழிலை தொடங்கலாம்.
இதற்கு தனியாக கடைகள் வைத்தாலும் சரி அல்லது ஆன்லைன் மூலம் மற்றும் நேரடியாக வீட்டிற்கு சென்றும் செய்தாலும் சரி அது உங்கள் விருப்பம் தான்.
முன்பெல்லாம் கடைகளுக்கு சென்று தான் முகத்தை அழகுபடுத்திக் கொள்வோம். அது கொஞ்சம் கடினமாக உள்ளது. ஏனென்றால் வேலைக்கு செல்லும் பெண்கள் இதற்காக வெளியில் சென்று செய்வதற்கு அலுப்புபடுவார்கள். ஆகவே நாம் அவர்களின் கஷ்டத்தை போக்கும் வகையில் வீட்டிற்கு சென்று அவர்களின் தேவையை பூர்த்தி செய்து கொடுக்கலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பல பொருட்கள் தயாரிக்க மூலப்பொருளாக தேவைப்படும் இந்த தொழிலை நீங்களும் செய்யலாமே..!
முதலீடு:
அழகுபடுத்த தேவையான பொருட்கள், உங்களுக்கேற்ற தனியாக இணையதள முகவரி அதேபோல் உங்களிடம் 5 நபர்கள் இருக்கவேண்டும். ஏனென்றால் முகூர்த்த நாட்களின் உங்களிடம் அதிகளவு ஆர்டர் வரும் போது அதனை சரியாக செய்ய ஆட்கள் தேவைப்படும்.
மேலும் நீங்கள் செய்யும் வேலைகளை அதாவது ஒரு மேக்கப் போடும் போது அதனை படம் பிடித்து உங்களின் வலைத்தளங்களில் பதிவிடுவதன் மூலம் உங்களுக்கு நிறைய ஆர்டர் வரும்.
முக்கியமாக படம் பிடிக்கும் போது அவர்களின் அனுமதியுடன் எடுத்து அதனை பதிவிடுவது நல்லது.
சிலருக்கு பேஷியல் செய்வது Face Pack போடுவது என்று கேட்டால், அவர்கள் உங்களிடம் என்ன பொருட்கள் வாங்கவேண்டும் என்று கேட்டு அந்த பொருட்கள் அனைத்தையும் வாங்கி வைத்துவிட்டு உங்களிடம் ஆன்லைன் மூலம் கேட்டுக்கொண்டு அவர்களே முகத்திற்கு Face Pack போட்டுக் கொள்ளலாம். இது போல் அவர்கள் தனியாக செய்ய நினைத்தாலும் செய்ய உதவி செய்து அவர்களிடம் இதற்கு எவ்வளவு பணம் வேண்டுமோ அதை பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலமும் லாபம் கிடைக்கும்.
அதேபோல் நீங்கள் கற்றுக்கொண்டவற்றை மற்றவர்களுக்கும் கற்றுக்கொடுக்க நினைத்தால் அதனை பயிற்சி வகுப்பாக கூட எடுக்கலாம்.
இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉👉 முதலீடே செய்யாமல் இந்த தொழில்களை செய்வதற்கு சரியான நேரம் இது தான் தவற விடாதீர்கள்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |