தேனீ வளர்ப்பு முறை பற்றிய முழு விவரங்கள்..!
Beekeeping business in tamil..!
தேனீ வளர்ப்பு முறை புதிதாக சிறு தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு, ஒரு அருமையான தொழில் வாய்ப்பு. அதாவது தேனீ வளர்ப்பு இன்றைய காலகட்டத்தில் பல ஆரோக்கியமான பிரச்சனைகளுக்கு தேன் ஒரு சிறந்த மருத்துவ பொருளாக விளங்குகிறது. இத்தகைய தேனீ வளர்ப்பு மூலம் குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் பெறலாம்.
கூரியர் தொழில் செய்து Rs.50000 லாபம் பெறலாம் ..! |
சரிவாங்க இந்த பகுதியில் தேனீ வளர்ப்பு முறை (Beekeeping business in tamil) பற்றிய மாதிரி திட்ட அட்டவணை, அதாவது தேனீ வளர்ப்பு முறைக்கு செய்யப்படும் முதலீடு, அதன் மூலம் நமக்கு கிடைக்கும் வருமானம் பற்றிய சில விவரங்களை இந்த பகுதில் நாம் படித்தறிவோம் வாங்க..!
தேனீ வளர்ப்பு எப்படி (Beekeeping business in tamil) பற்றிய முழு விவரங்களையும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்–> | தேனீ வளர்ப்பு |
தேனீ வளர்ப்பு முறை/ Theni Valarpu in Tamil:
தேனீக்களின் வகை:
- தேனீக்களின் வகைகள் – கொம்புத் தேனீ, மலைத் தேனீ, கொசுத் தேனீ, அடுக்குத் தேனீ, மேற்குலகத் தேனீக்கள், கிழக்குலகத் தேனீக்கள் ஆகும்.
தேனீ வளர்ப்பு – முதலீடு
- தேனீ வளர்ப்புப் பெட்டிகள் 5 எண்ணம் X 2200 வீதம் = 11,000/-ரூபாய்
- 1 ஆண்டு பராமரிப்புச் செலவு = 1,000/-ரூபாய்
- முதலீட்டுச் செலவு = 12,000/-ரூபாய்
தேனீ வளர்ப்பு – வருமானம்
தேன் 1 ஆண்டில் ஒரு பெட்டிக்கு 15 கிலோ வீதம் 5 பெட்டிக்கு மொத்தம் 75 கிலோ கிடைக்கும்.
விற்பனை 75 கிலோ X 300 ரூபாய் = 22,500/-ரூபாய்
மெழுகு 1 ஆண்டில் ஒரு பெட்டிக்கு 2 கிலோ வீதம் 5 பெட்டிக்கு மொத்தம் 10 கிலோ கிடைக்கும்.
விற்பனை 10 கிலோ X 500 ரூபாய் = 5000/-ரூபாய்
புதிய காலனிகள் ஒரு பெட்டிக்கு 4 காலனிகள் வீதம்
1 காலனிக்கு ரூபாய் 700 வீதம் 5 X 4 X 700 = 14,000/-ரூபாய்
முதலாம் ஆண்டு மொத்த வருமானம் = 41,500/-ரூபாய்
நிகர வருமானம்:
முதலாம் ஆண்டு மொத்த வருமானம் – 41,500/-ரூபாய்
முதலீடு செலவு – 12,000/-ரூபாய்
நிகர வருமானம் – 29,500/-ரூபாய்
தேனீ வளர்ப்பு முறை பற்றிய சில குறிப்புகள்:
தேனீ வளர்ப்பிற்கு, குறைந்த நேரம், பணம் மற்றும் கட்டமைப்பு மூலதனமே தேவைப்படும்.
குறைந்த மதிப்புள்ள விவசாய நிலங்களில், தேன் மற்றும் மெழுகினை தயாரிப்பது இயல்பு.
தேனீ வளர்ப்பதால் தென்னை, பாக்கு தோப்புகளில் 30 சதவிகிதம் விளைச்சலும், பிற விவசாயங்களில் 40 சதவிகிதம் விளைச்சலும் கூடுதலாகின்றன.
புதிதாக என்ன தொழில் செய்யலாம் சிறந்த சிறு தொழில் பட்டியல் 2021..! |
இது போன்ற பல வியாபாரம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | என்ன தொழில் செய்யலாம் 2021..! |