300 ருபாய் முதலீட்டில் வண்ணமயமான சிறு தொழில்..!
வணக்கம் நண்பர்களே. இன்று நம் பொதுநலம்.காம் பதிவில் அனைவருக்கும் பயனுள்ள தகவல் ஒன்றை பற்றி தான் பார்க்கப்போகிறோம். இன்றைய காலகட்டத்தில் எவ்வளவோ மக்கள் சிறுதொழில் மற்றும் குடிசை தொழில்கள் தொடங்கி அதன் மூலம் லாபம் பெற்று வருகின்றனர். அந்த வகையில் இன்று நம் பதிவில் வீட்டிலிருந்து 300 ருபாய் முதலீடு செய்தால் போதும் அதிகளவு லாபம் தரக்கூடிய சிறந்த சிறு தொழில் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க.
இதையும் பாருங்கள் ⇒ குறைந்த முதலீடு, அதிக லாபம் தரும் சிறந்த தொழில்
வண்ணமயமான சிறு தொழில்:
எவ்வளவோ சிறுதொழில்கள் இன்றைய காலகட்டத்தில் வளர்ந்து கொண்டு வருகின்றன. குறைந்த முதலீட்டில் லாபம் தரக்கூடிய தொழில்கள் அதிகளவு மக்களால் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் அதிகளவு ஏற்றுமதியாகும் உணவு பொருட்களில் முக்கியமான ஓன்று இந்த வடகங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய பொருள் தான் வண்ண அப்பளங்கள்.
இந்த வண்ண அப்பளங்கள் பலவகையான வடிவங்களில் உள்ளன. அதுபோல இன்று நாம் அனைவருக்கும் பிடித்த வண்ணமயமான வடகங்கள் பாக்கெட் செய்து விற்பதன் மூலம் அதிக லாபம் பெறலாம். இதற்கு 300 ருபாய் முதலீடு செய்தால் மட்டும் போதும் இதன் மூலம் அதிகளவு லாபம் பார்க்கலாம்.
இதையும் பாருங்கள் ⇒ வீட்டில் இருந்த படியே ஒருநாளைக்கு 5000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
இதுபோன்ற வண்ண அப்பளங்களை கிலோ கணக்கில் வாங்கி வரவும். நட்சத்திர வடவம், பேட் வடகம், வெங்காய வடகம், எண் வடகம், எழுத்து வடகம், வீல் வடகம், கூல் வடகம் போன்று பலவகையான வடகங்கள் உள்ளன. இதுபோன்ற வடகங்கள் மார்க்கெட்டில் கிடைக்கும். அவற்றை கிலோ கணக்கில் வாங்கிக்கொள்ள வேண்டும்.
பின் அதை பாக்கெட் செய்வதற்கு 100 கிராம் கவர் வாங்கவேண்டும். அதில் இந்த வடவங்களை சரியான அளவில் நீங்கள் வாங்கி வைத்துள்ள 100 கிராம் கவரில் போடவேண்டும்.
பின் அதை சீல் இயந்திரம் (sealing Machine) மூலம் ஓட்டவேண்டும். அதுபோல எல்லா வகையான வண்ண வடகங்களையும் 100 கிராம் கவரில் சரியான அளவில் போட்டு பாக்கெட் செய்ய வேண்டும்.
இதுபோன்று செய்த பாக்கெட்களை ஒரு பாக்கெட் 10 ருபாய் என்று மார்க்கெட்டில் விற்பனை செய்வதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்.
இந்த பாக்கெட் வடகங்களை சிறு பெட்டிக் கடைகள், பெரிய மார்க்கெட்கள், சந்தைகள் மற்றும் உங்கள் வீட்டு பகுதியில் உள்ளவர்கள் அனைவருக்கும் விற்பனை செய்யலாம். இதனால் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |