Best Home Business Ideas
பொதுவாக வேலைக்கு செல்லும் பெண்கள் முதல் ஆண்கள் வரை அனைவரும் இன்னும் எத்தனை நாட்கள் தான் மற்றவரிடம் மாத சம்பளத்திற்கு வேலைக்கு செல்வது என்று யோசித்து இருப்பார்கள். ஆனால் அதனை யோசிப்பதோடு மட்டும் விட்டு விடாமல் அடுத்தகட்ட நிலையாக என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க வேண்டும். அப்படி நீங்கள் சுயதொழில் செய்வதன் மூலம் அதில் லாபம் மற்றும் நஷ்டம் இரண்டில் எதுவாக இருந்தாலும் அதனை நீங்கள் ஏற்றக்கொள்ள வேண்டும். ஏனென்றால் அப்போது தான் அத்தகைய தொழிலை பற்றி இன்னும் அதிகமாக தெரிந்துக்கொள்ள முடியும். ஆகையால் உங்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இன்றைய பதிவில் ஒரு அருமையான தொழிலை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். சரி வாருங்கள் அது என்ன தொழில் அதனை எப்படி செய்வது போன்ற போன்ற அனைத்தினையும் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
வீட்டில் இருந்து என்ன மாதிரியான தொழில் செய்யலாம்:
அனைவருடைய வீட்டிலும் பருப்பு வகைகள் அதிகமாக தினமும் உபயோகப்படுத்தி கொண்டிருப்போம். இத்தகைய தொழிலை நிறைய நபர்கள் செய்தாலும் கூட இதற்கான டிமாண்ட் என்பது அதிகமாகி கொண்டே தான் உள்ளது.
ஆகையால் இன்று Dal Business-ஐ பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். மேலும் இந்த தொழிலை செய்வதற்கு மிகவும் அதிக அளவில் முதலீடு தேவைப்படாது.
தேவையான முதலீடு:
நீங்கள் இத்தகைய Dal Business-ஐ செய்ய வேண்டும் என்றால் அதற்கு தோராயமாக 1 லட்சம் ரூபாய் முதலீடு தேவைப்படும்.
தேவையான மூலப்பொருள்:
- துவரம் பருப்பு
- கடலை பருப்பு
- பொட்டுக்கடலை
- உளுந்து
- கொண்டைக்கடலை
- மொச்சை கொட்டை
- வெள்ளை கொண்டைக்கடலை
- பாசிப்பருப்பு
- பச்சை பட்டாணி
- Dust Remover Machine
- பேக்கிங் கவர்
மேலும் இந்த தொழிலை செய்வதற்கு முன்பாக FSSAI லைசென்ஸ் மற்றும் GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
தேவையான இடம்:
இத்தகைய தொழிலை செய்வதற்கு உங்களுடைய வீட்டில் வெறும் 10×10 இடம் மட்டும் இருந்தால் மட்டும் போதுமானது. ஆனால் மின்சார வசதி என்பது முக்கியமான ஒன்று.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
முதலீடு வெறும் ரூ.2000, வருமானம் தினமும் ரூ.5000, போட்டியே இல்லாத புதுமையான தொழில்
How to Start a Home Business:
முதலில் இந்த தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களாக மேலே சொல்லப்பட்டிருக்கும் பொருட்களை வாங்கி கொள்ளுங்கள். அதுவும் உளுந்து, பொட்டுக்கடலை மற்றும் கடலை பருப்பு போன்றவற்றையினை இரண்டாக உடைத்து இருப்பது போல பார்த்து வாங்கி கொள்ளுங்கள்.
அதன் பிறகு அந்த பொருட்களை எல்லாம் தனி தனியாக Dust Remover Machine-ல் போட்டு அதில் இருக்கும் தூசியினை எல்லாம் நீக்கி கொள்ளுங்கள். இவ்வாறு செய்து தனி தனியாக வைத்து விடுங்கள்.
பேக்கிங் செய்தல்:
தூசி நீக்கி வைத்துள்ள பருப்பு வகைகளை 100 கிராம், 200 கிராம், 1/2 கிலோ மற்றும் 1 கிலோ என தனித்தனியாக பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.
விற்பனை செய்யும் இடம்:
நீங்கள் பேக்கிங் செய்து வைத்துள்ள பருப்பு வகைகளை பெரிய மற்றும் சிறிய மளிகை கடை, Department ஸ்டோர், ஷாப்பிங் மால், ஹோட்டல், கேட்டரிங் சர்வீஸ் மற்றும் Restaurant ஆகிய இடங்களில் ஆர்டரின் பெயரில் விற்பனை செய்யலாம்.
வருமானம்:
இந்த தொழிலில் நீங்கள் நிறைய வகையான பொருட்களை பேக்கிங் செய்து விற்பனை செய்வதால் விற்பனைக்கு ஏற்றவாறு வருமானம் பெறலாம். ஆனால் தோரயமான மாதம் 2 லட்சம் ரூபாய் வரையும் சம்பாதிக்கலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
2,000 ரூபாய் முதலீட்டில் இரட்டிப்பு வருமானம் தரக்கூடிய தொழில் என்றால் அது இதாங்க..
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |