Bike Cleaning Business in Tamil
இன்றைய போட்டி உலகில் தங்கள் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காமல் பலரும் தங்களின் வாழ்க்கையை சீராக நடத்தி செல்வதற்கு மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அவர்கள் அனைவருமே தங்களின் வாழ்க்கையை எந்த ஒரு பொருளாதார நஷ்டமும் இல்லாமல் நடத்தி செல்வதற்காக ஏதாவது ஒரு சுயதொழிலை துவங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால் தான் நமது பதிவின் வாயிலாக அவர்களுக்கு உதவும் வகையில் தினமும் ஒரு அருமையான மற்றும் எளிமையான ஒரு சுயதொழில் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றும் ஒரு அருமையான தொழில் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொள்ள போகின்றோம். அது என்ன தொழில் என்றால் பைக் சுத்தம் செய்யும் தொழில் தான். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள சுய தொழில் பற்றிய முழு விவரங்களையும் அறிந்து கொண்டு அதன் பிறகு இந்த தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Bike Cleaning Business Plan in Tamil:
பைக் சுத்தம் செய்யும் தொழில் என்றவுடன் பலரின் மனதிலேயும் ஒரு பொதுவான கேள்வி தான் எழுந்திருக்கும். அது என்னவென்றால் பைக் சுத்தம் செய்வதெல்லாம் ஒரு தொழிலா இதனை எப்படி துவங்கி சம்பாதிப்பது என்று தான் உங்களின் மனதில் கேள்வி இருக்கும்.
எந்த தொழிலாக இருந்தாலும் அதனை முழு ஈடுபாட்டுடனும் சரியாகவும் செய்தால் வாழ்கையின் அடுத்த அடுத்த நிலைக்கு செல்லலாம். சரி வாங்க இந்த தொழிலை எவ்வாறு தொடங்கி சம்பாதிப்பது என்பதை விரிவாக பார்க்கலாம்.
தொழிலை எப்படி தொடங்குவது:
இந்த பைக் சுத்தம் செய்யும் தொழிலை பொறுத்த வரையில் இரண்டு முறையில் நீங்கள் இந்த தொழிலை தொடங்கலாம். அதாவது நீங்கள் சொந்தமாக ஒரு இடத்தில் நிலையான கடையை வைத்தும் செய்யலாம். அப்படியில்லை என்றால் வீடுவீடாக சென்றும் சுத்தம் செய்து விட்டு வரலாம்.
ஒரே ஒரு மெஷின் வாங்கினால் மட்டும் போதும் மாதம் 1,32,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
தேவையான மூலப்பொருட்கள் மற்றும் முதலீடு:
இந்த தொழிலுக்கு தேவையான முக்கியமான மூலப்பொருட்கள் என்று பார்த்தால் பைக் வாஷிங் லிக்விடு மற்றும் வாட்டர் பைப் ஆகியவை முதன்மையாக தேவைப்படும்.
இவை இரண்டுமே அவற்றின் தரம் மற்றும் அளவை பொறுத்து விலை மாறுபடும். மேலும் இந்த பைக் வாஷ் செய்ய ஆட்கள், கடை வாடகை என அதற்கு ஏற்ப முதலீடு அதிகமாகவும் குறைவாகவும் இருக்கும்.
தோராயமாக உங்களுக்கு 2 லட்சம் முதல் 3 லட்சம் வரை முதலீடு தேவைப்படலாம்.
தேவையான ஆவணம் மற்றும் இடவசதி:
இந்த தொழிலை நீங்கள் சொந்தமாக ஒரு இடத்தில் நிலையான கடையை வைத்து தொடங்க போகின்றீர்கள் என்றால் அதற்கு 1000 sq.ft இடவசதி தேவைப்படும். மேலும் நீங்கள் பைக் வாஷிங் செய்வதற்கு அதிக அளவு தண்ணீர் தேவைப்படும் என்பதால் அதற்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
அடுத்து நீங்கள் இந்த தொழிலை வீடு வீடாக சென்று செய்ய போகின்றிர்கள் என்றால் அதற்கு GST Registration கண்டிப்பாக பெற்றிருக்க வேண்டும்.
தொழில் செய்யும் முறை:
நீங்கள் இந்த தொழிலை கடையை தொடங்கி செய்வது என்று முடி செய்து விட்டீர்கள் என்றால் அந்த கடையை பெரிய நிறுவனங்களுக்கு அருகில் அல்லது குடியிருப்பு பகுதிக்கு பக்கத்தில் இருப்பது சிறந்தாக இருக்கும்.
ஏனென்றால் அங்கு நிறைய வாகனங்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
வருமானம்:
இப்பொழுது ஒரு பைக் வாஷ் செய்வதில் நிறைய விதம் உள்ளது. அதற்கு ஏற்றபடி விலையும் மாறுபடும். தோராயமாக ஒரு பைக் வாஷ் செய்வதற்கு நீங்கள் 1,000 ரூபாய் வசூலிக்கிறீர்கள் என்றால், நீங்கள் ஒரு நாளைக்கு தோராயமாக 20 பைக் வாஷ் செய்கிறீர்கள் என்றால் 20,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.
அதனால் இந்த பைக் சுத்தம் செய்யும் தொழில் உங்களுக்கு ஏற்றதாக இருந்தால் அதனை தொடங்கி வாழ்க்கையில் முன்னேறுங்கள்.
வாரம் 2,00,000 ரூபாய் வரை சம்பாதிக்க கூடிய அருமையான தொழில்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |