Bike Wash Business Plan in Tamil
படித்து முடித்த பின் என்ன வேலைக்கு செல்வது என்று அனைவருமே யோசிப்பார்கள்..! படித்தவர்களுக்கு ஆயிரம் வேலை இருக்கும்..! ஆனால் படிக்காதவர்களுக்கு வேலை இருக்காது என்று யோசிப்பார்கள்..! ஆனால் அதுமே தவறான கூற்று தான். பொதுவாக என்ன தான் படித்தாலும் திறமைக்கு எங்கு சென்றாலும் வேலை கிடைக்கும்.
பொதுவாக எந்த வேலையையும் குறைவாக நினைப்பது தவறு அனைத்து வேலையும் நல்ல வேலை தான். நாம் அந்த வேலைகளை எப்படி பார்க்கிறோம் என்பதில் தான் உள்ளது. Pothunalam.com பதிவில் தினமும் நிறைய விதமான தொழில்களை பற்றி பதிவிட்டுக் கொண்டு தான் வருகிறோம்..! அந்த வகையில் இன்று சூப்பரான ஒரு தொழிலை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Bike Wash Business Plan in Tamil:
பைக் சுத்தம் செய்வது ஒரு தொழிலா என்று நினைப்பீர்கள். ஆனால் இதற்கு தான் வருக்காலத்தில் மவுஸ் அதிகம் உள்ளது. மேலும் இந்த தொழிலுக்கு அதிகளவு போட்டிகளும் இல்லை. அதேபோல் இதற்கு தான் தேவையும் அதிகமாக உள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த தொழிலை எங்கு தொடங்கலாம் எப்படி தொடங்குவது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..!
எங்கு தொடங்கலாம்:
பொதுவாக இந்த தொழிலுக்கு அதிகளவு முதலீடு தேவையில்லை கடையும் தேவையில்லை பெரும்பாலும் வாகனங்கள் வைத்திருப்பவர்கள் வீட்டை விட்டு வெளியில் எடுத்து சென்று அதனை சுத்தம் செய்ய விரும்புவதில்லை. ஆகவே உங்கள் சேவையை வீட்டிற்கும் வந்து செய்ய நீங்கள் ரெடியாக இருக்க வேண்டும். மேலும் உங்களுக்கு கடையாக இருந்தால் வசதியாக இருக்கும் என்றால் அதை போல் உங்களின் வசதிக்கேற்ப பெயரை கொண்டு கடையை திறந்து கொள்ளுங்கள்..! ஆகவே உங்கள் தொழிலுக்கு வணிக பெயர் மட்டும் போதுமானது..!
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மாதம் லட்சம் கணக்கில் லாபம் தரக்கூடிய சிறந்த 3 தொழில்
கடையை எங்கு தொடங்கலாம்:
நீங்கள் கடையை தொடங்குவது என்று முடி எடுத்துவிட்டால் அந்த கடையை பெரிய நிறுவங்களுக்கு அருகில் அல்லது குடியிருப்பு பகுதிக்கு பக்கத்தில் இருப்பது சிறந்தாக இருக்கும்..! ஏனென்றால் அங்கு நிறைய வாகனங்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதை விட உங்களின் சேவையானது வீட்டிற்கு சென்று ஆற்றுவதற்கு தான் அதிகளவு வாய்ப்புகள் வருங்காலத்தில் இருக்கும்.
பைக் வாஷ் மற்றும் கார் வாஷ் செய்ய தேவையான இயந்திரம், ஆட்கள், கடை வாடகை என இயந்திரத்திற்கு ஏற்ப முதலீடு அதிகமாகவும் குறைவாகவும்இருக்கும். குறைந்தது 2 லட்சம் வரை முதலீடு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
லாபம்:
ஒரு பைக் வாஷ் செய்வதில் நிறைய விதமான Type உள்ளது. அதற்கு ஏற்றபடி விலையும் மாறுபடும். அதற்கு நிறைய வாஷிங் லிக்விடு உள்ளது அதற்கு ஏற்றபடியும் மாறுபடும்.
குறைந்து ஒரு நாளுக்கு 20 பைக் கார் வாஷ் செய்தால் நிச்சயம் 20,000 ஆயிரம் ரூபாய்க்கு மேல் லாபம் கிடைக்கும். ஆகவே இந்த தொழிலை இன்றே தொடங்கி லாபத்தை பெறுங்கள்..!
இதையும் தொடங்குங்கள் 👉👉 தயாரிப்பு விலை 1.50 ரூபாய், விற்பனை விலை 15 ரூபாய் , ஒரு கிலோவுக்கு 2000 ரூபாய் லாபம் தரும் தொழில்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |