வீட்டில் இருந்து செய்யும் சிறு தொழில் பட்டியல்கள்…!

சிறு தொழில் பட்டியல்கள்

வீட்டில் இருந்து செய்யும் சிறு தொழில் பட்டியல்கள்..!

சிறு தொழில் பட்டியல்கள்:- பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி இப்போது அனைவருமே சுயமாக தொழில் துவங்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து விட்டது. அந்த வகையில் இந்த பகுதியில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறக்கூடிய தொழில்களை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

அதாவது ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே வீட்டில் இருந்து செய்யும் சிறு தொழில் பட்டியல்கள் சிலவற்றை இங்கு நாம் தெரிந்து கொள்வோம் வாங்க.

சிறு தொழில் பட்டியல்கள்: 1 – Homemade Organic Products Business Ideas in Tamil:-

இயற்கை சார்ந்த உணவு பொருட்கள் மற்றும் அழகு சாதன பொருட்களை இயற்கையான முறையில் தயார் செய்து விற்பனை செய்வது. அதாவது வீட்டில் இருந்தபடி தங்களுடைய ஒய்வு நேரங்களில் இயற்கை பொருட்களை பயன்படுத்தி ஷாம்பு, சோப்பு, கூந்தல் எண்ணெய், குளியல் பொடி போன்றவற்றை தயார் செய்து விற்பனை செய்யலாம்.

இந்த ஆர்கானிக் பொருட்களை இப்பொழுது மக்கள் அதிகம் வரவேற்கின்றன, எனவே இம்மாதிரியான பொருட்களை தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் வீட்டில் இருந்தபடியே நல்ல வருமானத்தை பெறமுடியும்.

உதாரணத்திற்கு கற்றாழையை பயன்படுத்தி கற்றாழை ஷாம்பு, கற்றாழை குளியல் சோப்பு, கற்றாழை எண்ணெய் ஆகியவற்றை தயார் செய்து விற்பனை செய்யலாம்.

உணவு சார்ந்த பொருட்களாக இருந்தால் தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை பயன்படுத்தி ஹெல்த் ட்ரிங் பவுடர், ஆளிவிதை மற்றும் கொள்ளு பயிர்களில் செய்ய கூடிய இட்லி பொடி என்று பலவகையான உணவு பொருட்களை தயார் செய்து மக்களிடம் விற்பனை செய்யலாம், இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே சப்பாத்திக்கலாம்.

சிறு தொழில் பட்டியல்கள்: 2 – அப்பளம் தயாரிப்பு தொழில்:-

இந்தியாவில் அதிகம் ஏற்றுமதியாகும் உணவு பொருட்களில் மிகவும் முக்கியமாக திகழ்வது அப்பளம் தான். எனவே பெண்கள் வீட்டில் இருந்து செய்யும் சிறு தொழிலாக அப்பளம் தயாரிப்பு தொழில் சிறந்த ஒன்றாக திகழ்கின்றது.

இந்த அப்பளம் தயாரிப்பு தொழில் பொறுத்தவரை சுவை, கைப்பக்குவம் மற்றும் தரம் இவை அனைத்தையும் மக்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். எனவே நல்ல கைப்பக்குவத்துடன், சுவையாக மற்றும் நல்ல தரமாக தயாரித்து மக்களிடம் விற்பனை செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும் இந்த அப்பளம் தயாரிப்பு தொழில்.

இந்த அப்பளம் தயாரிப்பு தொழிலுடன் வத்தல், வடவம், மசாலா பொருட்கள், ஊறுகாய் போன்றவற்றை தரமாக தயார் செய்து விற்பனை செய்தால் நிச்சயம் நல்ல வருமானத்தை வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம்.சிறு தொழில் பட்டியல்கள்..!

20,000 முதலீட்டில் ஒரு சுவையான தொழில் – வீட்டிலிருந்தே மாதம் 30,000 சம்பாதிக்கலாம்..!

சிறு தொழில் பட்டியல்கள்:- சுயமாக வீட்டில் இருந்த படியே குறைந்த முதலீட்டில் தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு ஒரு சுவையான சுயதொழில் வாய்ப்பு. உங்களிடம் உழைக்கும் மனமும், கைப்பக்குவமும் இருந்தால் இந்த தொழிலில் சர்வசாதாரணமாக மாதம் 30,000/- வரை சம்பாதிக்கலாம்.

இந்த தொழில் யாருக்கு ஏற்ற தொழில் என்று பார்த்தால், சொந்தமாக வீடு இருந்து, வெளியே சிறிய இடம் இருந்து அந்த இடத்தில தொழில் செய்ய நினைப்பவர்களுக்கும், குறிப்பாக சமையலில் அதிக ஆர்வம் உள்ளவர்களுக்கும், இது ஒரு அருமையான தொழில்.

அதாவது பிரியாணி கடை வைத்து அவற்றின் மூலம் தினமும் வருமானம் பார்ப்பது எப்படி என்பதை பற்றி இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

சுயதொழில் – பெண்கள் வீட்டில் இருந்து செய்யும் தொழில்கள்..!

இடம்:

Biryani business ideas in tamil:- 10-க்கு, 10 அளவு கொண்ட ஒரு சிறிய அறை இருந்தால் போதும் இந்த பிரியாணி கடை வைத்து அதிக வருமானத்தை பார்த்துவிடலாம்.

முதலீடு:

ஒரு பெரிய அடுப்பு, பிரியாணி செய்வதற்கு பாத்திரங்கள், சிலிண்டர், பேக்கிங் செய்வதற்கு கவர் போன்றவை வாங்குவதற்கு 10,000/- முதல் 15,000/- வரை தேவைப்படும்.

நல்ல ட்ரெண்டிங்கில் பனை மர இலை தட்டு தயாரிப்பு ..!

 

6 கிலோ அரிசியில் பிரியாணி செய்ய ஆகும் செலவு:

Biryani business ideas in tamil:- 6 கிலோ பிரியாணி அரிசி மற்றும் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் வாங்குவதற்கு குறைந்தபட்சம் 1,500/- செலவாகும்.

இதன் மூலம் 45 பாக்கெட் பிரியாணி கிடைக்கும். ஒரு பிரியாணி பாக்கெட்டில் ஒரு பீஸ் சிக்கன் மற்றும் ஒரு முட்டை வைத்து ரூபாய் 75-க்கு விற்பனை செய்யலாம். தினமும் 45 பாக்கெட் பிரியாணி விற்பனை செய்தால் 3,375/- ரூபாய் கிடைக்கும்.

செலவுகள் போக தினமும் 1500/- ரூபாய் லாபம் கிடைக்கும். இதன் மூலம் மாதம் 30,000/- ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

பாக்குமட்டை தட்டு தயாரிப்பு மாத வருமானம் 50,000/-

தொழில் குறிப்பு:-

Biryani business ideas in tamil:- இந்த தொழில் பொறுத்தவரை, சுவை மற்றும் கை பக்குவம் இரண்டும் அவசியம்.

இவை இரண்டும் இருந்தால் போதும் இந்த தொழில் தினமும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதன் மூலம் தினமும் அதிக வருமானம் பெறலாம்.

சில நேரங்களில் பிரியாணி மீந்து விட்டால் அவற்றை வீணாக்காமல் பிர்ஜியில் வைத்து, பின் இட்லி பானையில் பிரியாணியை அவித்தும் விற்பனை செய்யலாம். இதனால் அவற்றில் இருக்கும் சுவையும், மனமும் மாறாது.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில்  போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2019