Blouse Stitching Business in Tamil
வணக்கம் நண்பர்களே..! இக்காலத்தில் பல இல்லத்தரசிகள் வீட்டு வேலைகளை முடித்த பிறகு என்ன தொழில் செய்யலாம் என்று யோசித்து கொண்டு இருக்கிறார்கள். அப்படி நினைக்கும் பெண்களுக்கு இப்பதிவில் கூறப்பட்டுள்ள தொழில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பெண்கள் வீட்டில் இருக்கும் சமையல் வேலைகளை முடித்த பிறகு ஒரு நாளைக்கு 4 மணிநேரம் இத்தொழிலை செய்தால் போதும் 900 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். அத்தொழில் என்னவென்றால் Blouse Stitching Business தொழில் தாங்க. ஓகே வாருங்கள் இத்தொழிலை எப்படி தொடங்கலாம் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
How to Start Blouse Stitching Business in Tamil:
தகுதிகள்:
இத்தொழில் ஒரு தையல் சம்மந்தப்பட்ட தொழில் என்பதால் நன்கு ஆடைகளை தைக்கும் முறை பற்றி தெரிந்த பெண்ணாக இருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் ஒரு மாதத்திற்கு நீங்கள் தையல் பயிற்சி சென்று அங்கு நன்றாக பிளவுஸ் தைப்பதற்கு கற்றுக்கொண்டே பிறகே இந்த தொழிலை தொடங்க வேண்டும்.
தேவையான இடம்:
இத்தொழிலை செய்ய உங்கள் வீட்டில் ஒரு சிறிய அரை இருந்தால் போதும்.
தேவையான மூலப்பொருள்:
இத்தொழிலுக்கு முக்கிய மூலப்பொருள் தையல் இயந்திரம் ஆகும். மேலும், ஆடை தைப்பதற்கு தேவையான பொருட்கள்.
தேவையான முதலீடு:
இத்தொழிலில் முதலீடு என்று பார்த்தால், தையல் இயந்திரம் மற்றும் இதர பொருட்கள் அனைத்தையும் சேர்த்து 7,000 ரூபாய் முதலீடாக தேவைப்படும்.
பெண்கள் டிவி பார்க்கும் நேரத்தில் இந்த தொழிலை செய்தால் போதும் அசால்ட்டா 2,000 ரூபாய் சம்பாதிக்கலாம்
தொழில் தொடங்கும் முறை:
முதலில் நீங்கள் உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள பெரிய பெரிய அழகு நிலையங்கள் மற்றும் தையல் கடைகளுக்கு சென்று அங்கு உள்ள பிளவுஸ்களை மொத்தமாக வாங்கி வந்து அவர்களுக்கு சேவை செய்யும் விதமாக அதன் மூலம் தொழிலை செய்து வருமானம் ஈட்ட முடியும்.
கிடைக்கக்கூடிய வருமானம்:
இக்காலத்தில் ஒரு பிளவுஸ் தோராயமாக 300 ரூபாய்க்கு தைத்து தரப்படுகிறது.
எனவே உதாரணமாக, நீங்கள் ஒரு நாளைக்கு 4 மணி நேரத்தில் 3 பிளவுஸ்களை தைப்பதன் மூலம் 900 ரூபாய் வருமானமாக பெறலாம். அதுவே ஒரு மாதத்திற்கு என்று பார்த்தால் 27,000 ரூபாய் வருமானமாக பெறலாம்.
குறிப்பு:
மேலே கூறப்பட்டுள்ள வருமானம் ஒரு தோராய மதிப்பில் கூறப்பட்டுள்ளது. நீங்கள் எவ்வளவு பிளவுஸ் தைத்து தருகிறீர்களோ அதற்கேற்றவாறு வருமானம் அதிகமாகவும், குறைவாகவும் வரும்.
படித்த பெண்கள் வீட்டில் இருந்தால் இந்த தொழில் செய்யுங்கள்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |