Fast Money Making Business Ideas | How to Start Boutique Business in Tamil
பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை யாருக்கு தான் இல்லாமல் இருக்கிறது. அதிலும் குறிப்பாக சிலர் வேகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். நாம் நினைத்தை விட அதிகமான பணம் சம்பாதிக்க வேண்டும் என்றாலோ அல்லது வேகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்றாலோ அதற்கு உகந்ததாக இருப்பது சுயதொழில் மட்டுமே. சுயதொழிலை பொறுத்தவரை ஆரம்ப காலத்தில் குறைவான வருமானம் வந்தாலும் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நீங்கள் நினைத்தை விட அதிகமான லாபம் மற்றும் வருமானத்தை அளிக்கக்கூடிய ஒன்றாக தான் உள்ளது. அதனால் இன்று சுயதொழில் மூலம் வேகமாக பணத்தினை சம்பாதிக்க கூடிய ஒரு Boutique Business-ஐ பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
என்ன தொழில்:
Boutique Business என்றால் அதாவது மெட்டீரியலாக இருக்கும் துணியினை நாம் வடிவமைத்து கொடுப்பது ஆகும். இதற்கு நீங்கள் துணியினை விதவிதமான முறையில் வடிவமைத்து கொடுக்கும் திறமை கொண்டவராக இருக்க வேண்டும்.
மேலும் 4 முதல் 5 ஆட்கள் மேலே முறையில் நீங்கள் வேலைக்கு வைத்து கொள்ள வேண்டும்.
முதலீடு மற்றும் மூலப்பொருள்:
- ஒரு பெரிய அளவிலான இடம்
- தையல் இயந்திரம்
- நூல்கள் மற்றும் ஊசிகள்
- துணிகள்
மேலே பொருட்கள் அனைத்தினையும் நீங்கள் துணிகளுக்கு ஏற்றவாறு வாங்கி கொள்ள வேண்டும். இதற்கான முதலீடாக ஆரம்பத்தில் 30,000 ரூபாய் தோராயமாக வைத்து கொள்ள வேண்டும்.
Business Ideas👇👇 வருங்காலத்திற்கு ஏற்ற மாதிரி தொழில் செய்யுங்கள்
How to Start a Boutique Business Plan:
- இந்த தொழிலை ஆரம்பதிப்பதற்கு முதலில் உங்களுக்கு தேவையான துணிகளை வெவ்வேறு டிசைன் மற்றும் மாடலில் வாங்கி கொள்ள வேண்டும்.
- அதன் பிறகு நீங்கள் யாருக்கு தைக்க போகிறீர்கள் என்றும், அதற்கான அளவு மற்றும் டிசைனை தீர்மானம் செய்து தைக்க வேண்டியது தான். இந்த முறையிலேயே மற்ற துணிகளை விருப்பத்திற்கு ஏற்றவாறு தைக்க விற்பனை செய்ய வேண்டியது தான்.
- மேலும் நீங்கள் கடை வைக்கும் இடம் ஆனது அதிகமாக மக்கள் நடமாட்டம் உள்ள இடமாக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் உங்கள் வீட்டிலேயும் கடையினை வைத்து கொள்ளலாம்.
- அதுமட்டும் இல்லாமல் இந்த கடையிலேயே நீங்கள் தயார் செய்த Hand bag, வீட்டு அழகுப்பொருட்கள் போன்றவற்றையினையும் விற்பனை செய்யலாம்.
- அதேபோல் உங்களிடம் துணிகளை வாங்கி கொண்டு வந்து மக்கள் தைத்து கொடுக்க சொன்னால் அதையும் நீங்கள் தைத்து கொடுத்து வருமானம் பெறலாம்.
வருமானம்:
- இந்த தொழிலுக்கான வருமானம் என்பது உங்களுடைய கடையில் நீங்கள் தைத்து விற்பனை செய்யும் ஆடைகளின் முறையினை பொறுத்தே அமையும். ஆகவே தோராயமாக இந்த தொழில் மாதம் 10,000 ரூபாய் வரை தோராயமாக வீட்டிலோ அல்லது கடை வைத்தோ சம்பாதிக்கலாம்.
- தற்போது இந்த தொழில் ஆனது வேகமாக பணம் சம்பாதிக்கக்கூடிய தொழில்களில் ஒன்றாகவும், டிமாண்ட் உள்ள தொழிலாகவும் இடம் பெற்று இருக்கிறது.
Business Ideas👇👇 ஆன்லைன் மூலமா தொழில் செய்து லாபம் பெறனுமா.. அப்போ இந்த தொழில் தான் பெஸ்ட்..
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |