நஷ்டமே வராத தொழில் ​4 மணி நேரத்தில் ரூ.7500/- வருமானம் அசத்தலான தொழில்..!

Bucket Biryani Business Ideas in Tamil

பாக்கெட் பிரியாணி Business – Bucket Biryani Business Ideas in Tamil

பொதுவாக அசைவ பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவு எது அப்படின்னா கண்டிப்பா அது பிரியாணி என்று தான் சொல்ல வேண்டும். தினமும் பல கோடி கணக்கான மக்கள் ஆன்லைனிலும் சரி, ஆஃப்லைனிலும் சரி ஆர்டர் செய்து சாப்பிடுகின்ற்ன.. ஆகவே நீங்கள் உணவு சார்ந்த தொழில் துவங்க வேண்டும் என்றால் கண்டிப்பாக பிரியாணி கடை வைக்கலாம், அதிலும் பாக்கெட் பிரியாணிக்கு மக்களிடம் அதிக வரவேற்பு இருக்கிறது. ஆக நீங்கள் பாக்கெட் பிரியாணி தொழில் கூட ஆரம்பிக்கலாம். அப்படி ஆரம்பிக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் நீங்களா அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கானது தான். ஆம் நன்பர்களே பாக்கெட் பிரியாணி எப்படி ஆரம்பிக்கலாம் என்பதை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். அதாவது இந்த தொழில் தொடங்க எவ்வளவு முதலீடு தேவைப்படும், என்னென்ன மூலப்பொருட்கள் தேவைப்படும், இதன் மூலம் எவ்வளவு வருமானம் கிடைக்கும் போன்ற தகவல்களை நாம் இந்த பதிவில் முழுமையான படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

இடம்:

இந்த தொழிலை நீங்கள் வீட்டில் இருந்தபடியே செயலாம், அல்லது தனியாக இதற்கு என்று இடம் அமைத்துகூட செய்யலாம். தனியாக இடம் அமைத்து தொழில் தொடங்க வேண்டும் என்று விரும்புகீர்கள் என்றால். மக்கள் கூட்டம் அதிகம் உள்ள இடத்தை தேர்வு செய்வது மிகவும் சிறந்து. அதேபோல் நீங்கள் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் போட்டிகள் இருக்க கூடாது. போட்டிகள் இல்லாத இடத்தை தேர்வு செய்தீர்கள் என்றால் தினமும் நல்ல வருமானத்தை பெறமுடியும்.

மூலப்பொருட்கள்:

மூலப்பொருட்கள் என்றால் பிரியாணி செய்வதற்கு மசாலா பொருட்கள், காய்கறிகள், சிக்கன், முட்டை, பேக்கிங் கவர், பாக்கெட் பிரியாணி என்றால் அதற்கான பாக்கெட், இது போன்ற பொருட்கள் தேவைப்படும். இது தவிர பிரியாணி செய்வதற்கு பெரிய பாத்திரங்கள் தேவைப்படும்.

முதலீடு:

25 கிலோவிற்கு பிரியாணி செய்ய பொறுங்க அப்படின்னா அதற்கான முதலீடு:

  • அரசி – 12 கிலோ அதன் விலை 12,000 ரூபாய்
  • சிக்கன் – 13 கிலோ அதன் விலை 3000 ரூபாய்
  • மாலா பொருட்களுக்கு – 1500 ரூபாய்
  • முதலீடு – 16,500 ரூபாய் தான் தேவைப்படும்.

வருமானம்:

25 கிலோ பிரியாணியை கண்டிப்பாக 30 நபர்களுக்கு விற்பனை செய்ய முடியும்.

ஒரு கிலோ பாக்கெட் பிரியாணியை நீங்கள் 800 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம்.

ஆக 800X30=24000 ரூபாய் வருமானம் கிடைக்கும்.

செலவுகள் 16,500 ரூபாய் போக ஒரு நாளுக்கு உங்களுக்கு 7,500 ரூபாய் லாபம் கிடைக்கும்.

வெறும் நான்கு மணி நேரத்தில் 7500 ரூபாய் எளிதில் சம்பாரித்துவிடலாம்.

சந்தை வாய்ப்பு:

நீங்கள் App Based Briyani Service Business செய்யலாம். மக்கள் அந்த App மூலமாக உங்களிடம் ஆர்டர் செய்வார்கள்.

அல்லது கடை வைத்து விற்பனை செய்யலாம். எப்படி செய்ய இருந்தாலும் நீங்கள் பிரியாணி கடை வச்சிருக்கீங்க அப்படின்னு மக்களிடம் விளம்பரம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டும் தான் மக்கள் உங்கள் கடையை தேடி வருவார்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 ஒரு முறை தயாரித்தால் போதும் 85,000/- லாபம் கிடைக்கும் தொழில்..!

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022