2023-இல் தொடங்குவதற்கான டாப் 5 Business இது தாங்க..!

Advertisement

Top 5 Business Ideas 2023 in Tamil

2023-ஆம் ஆண்டு பிறந்துவிட்டது.. இந்த ஆண்டு புதியதாக ஏதாவது தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்களா நீங்கள்..? இருந்தாலும் என்ன தொழில் தொடங்கலாம் என்பதில் பல யோசனையாக உள்ளதா..? அப்படியென்றால் உங்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆம் நண்பர்களே இந்த 2023-ஆம் ஆண்டு மட்டும் இல்லாமல் இனி வரும் ஆண்டுகளும் நல்ல வருமானம் தரும் தொழில் யோசனையை பற்றி இங்கு நாங்கள் பதிவு செய்துள்ளோம் அவற்றில் உங்களுக்கு ஏற்ற தொழிலை தேர்வு செய்துகொள்ளுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Content Marketing:Content Marketing

நீங்கள் இரு சிறந்த எழுத்தாளராக இருந்தால் கண்டிப்பாக Content Marketing தொழிலை தொடங்கலாம். இன்றைய டிஜிட்டல் உலகில், அதிகமான வணிகங்களுக்கு உயர்தர உள்ளடக்கம் தேவைப்படுகிறது. ஆக நீங்களே சொந்தமாக ஒரு வலைப்பதிவைத் தொடங்கலாம். பிறகு உங்கள் வலைப்பதிவில் உங்களுக்கு தெரிந்த விஷயங்களை பதிவு செய்யலாம். பின் விளம்பரம் மூலம் வருமானம் ஈட்டலாம். உங்களால் சொந்தமாக வலைத்தளம் வைத்து பதிவுகளை பதிவு செய்ய முடியாது என்றால். இதற்கு சம்பந்தமான நிறுவனங்களுடன் இணைந்து Freelance-ஆக பணிபுரிந்து சம்பாதிக்கலம்.

இதை கிளிக் செய்து படியுங்கள் 👇
எத்தனை வருடமானாலும் இந்த தொழிலுக்கான மவுஸ் குறையவே குறையாது..!

Web Development and Design:Web Development and Design

இன்றைய டிஜிட்டல் உலகில், கிட்டத்தட்ட ஒவ்வொரு வணிகத்திற்கும் இணையதளம் தேவை. ஒரு வலை உருவாக்குநராக அல்லது வடிவமைப்பாளராக, பிற வணிகங்களின் தேவைகளுக்கு ஏற்ற இணையதளத்தை உருவாக்க நீங்கள் உதவலாம். ஆனால் இதற்கு நீங்கள் Web Development and Design பயிற்சி பெற்று அதில் ஓரளவு உங்களுக்கு திறன் இருக்க வேண்டும். இந்த பயிற்சியை கற்றுக்கொண்டீர்கள் என்றாலே கண்டிப்பாக உங்களுக்கு ஒரு நல்ல எதிர்காலம் இருக்கும்.

Digital Marketing:Digital Marketing

இன்றைய காலத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஒரு சிறந்த தொழிலாக இருக்கிறது. நீங்கள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் செய்பவராக இருந்தால், தங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளை ஆன்லைனில் விளம்பரப்படுத்த உதவுவதே உங்கள் வேலையாக இருக்கும். இவற்றில் நிறைய வகைகள் உள்ளது. அவற்றில் ஏதாவது ஒன்றை பற்றி உங்களுக்கு நல்ல திறன் இருந்தால். இப்போதே டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொடங்கலாம். நீங்கள் டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொடங்க விரும்பினால், உங்கள் சொந்த வலைப்பதிவை தொடங்குவதே சிறந்த வழி ஆகும்.

Affiliate Marketing:Affiliate Marketing

நீங்கள் சொந்தமாக ஒரு வலைத்தளம் வைத்து அவற்றில் அஃபிலியேட் மார்க்கெட்டிங் செய்யலாம். அல்லது சமூக ஊடகங்களில் உங்களுக்கு அக்கௌன்ட் இருந்தாலும் அதில் கூட விளம்பரம் செய்யலாம். அதற்கு முன் அஃபிலியேட் மார்க்கெட்டிங் என்பது என்ன என்பதை பற்றி தெரிந்துகொள்ளுங்கள். அஃபிலியேட் மார்க்கெட்டிங் என்பது வேறு ஒன்றும் இல்லை. இப்போது ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோர் நிறைய இருக்கிறது. அவரில் அஃபிலியேட் புரோகிராம்களை வழங்கும் ஆன்லைன் வணிகங்களை கண்டறிய வேண்டும். பிறகு அவர்களிடம் அனுமதி பெற்று,  உங்கள் வலைத்தளங்களில் அவர்களுடைய பொருட்களை பதிவிட்டு அந்த வணிகத்தின் லிங்கை உங்கள் வலைப்பதிவில் லிங்க் பண்ண வேண்டும். இப்படி செய்து உங்கள் வலைப்பதிவில் அந்த லிங்கை கிளிக் செய்து அந்த பொருளை ஆர்டர் செய்தார்கள் என்றால் உங்களுக்கு அதன் மூலம் வருமானம் கிடைக்கும்.

இதை கிளிக் செய்து படியுங்கள் 👇
ஒரு மணி நேரத்தில் 4000 ரூபாய் வருமானம் தரும் பேக்கிங் தொழில்..!

Food Delivery Service:Food Delivery Service

இன்றைய கால கட்டத்தில் உணவு விநியோகம் செய்யும் தொழிலும் சிறந்த தொழிலாக இருந்து வருகிறது. ஆக நீங்கள் வீட்டில் சமையல் செய்து உணவுகளை விநியோகம் செய்யலாம். அல்லது கடையில் வாங்கி கூட அதனை பயனர்கள் இருக்கும் இடத்திற்கு செய்து நேரடியாக உணவு விநியோகம் செய்யலாம். இவற்றில் முதலில் கூறியுள்ளது போல் நீங்கள் வீட்டில் இருந்து உணவை சமைத்து பிறகு பயனர்கள் இருக்கும் இடத்திற்கு நேரடியாக சென்று உணவு விநியோகம் செய்தீர்கள் என்றால் நல்ல வருமானம் பெற முடியும்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்  —> siru tholil ideas in tamil
Advertisement