பெண்கள் டிவி பார்க்கும் நேரத்தில் இந்த தொழிலை செய்தால் போதும் அசால்ட்டா 2,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!

Business Ideas For Women at Home 

பெண்களை பொறுத்தவரை காலையில் தூங்கி எழுந்த நேரம் முதல் இரவு தூங்க செல்லும் நேரம் வரை வீட்டில் நிறைய வேலைகளை பார்க்க வேண்டிய சூழல் இருக்கும். அதிலும் சிலர் வீட்டு வேலையினையும் முடித்து விட்டு வெளியிலும் வேலைக்கு செல்வார்கள். ஆனால் மற்ற சிலருக்கு வீட்டில் உள்ள வேலைகளை எல்லாம் செய்து முடித்த பிறகு மீதமாக வெறும் 2 மணி நேரம் அல்லது 3 மணி நேரம் மட்டுமே இருப்பதால் அதில் எப்படி வேலைக்கு செல்ல முடியும் என்று யோசித்து அப்படியே விட்டு விடுவார்கள். பெண்களை பொறுத்தவரை முடியாது என்ற ஒன்று இல்லை என்று சரித்திரமே இருக்கிறது. இவ்வாறு இருக்கும் போது வேலைக்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்து விட்டால் அதனை தாமதம் செய்யக்கூடாது. அதுபோல வெளியில் சென்றால் தான் வேலைக்கு செல்ல முடியும் என்று கிடையாது. வீட்டில் இருந்து கொண்டே வெறும் 2 மணி நேரம் வேலை செய்தால் 2,000 ரூபாய் அசால்ட்டாக சம்பாதிக்க முடியும். இப்படிப்பட்ட ஒரு தொழிலை தான் இன்றைய பதிவில் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl 

இல்லத்தரசிகளுக்கு வீட்டில் இருந்து வேலை:

பெண்கள் வீட்டில் இருக்கும் வேலையினை எல்லாம் முடித்த பிறகு மீதம் இருக்கும் நேரத்தில் உங்களுடைய ஊரிற்கு அருகில் உள்ள பெரிய மற்றும் சிறிய மளிகை, டிபார்ட்மெண்ட் ஸ்டோர் ஆகிய கடைகளுக்கு என்று வேலை கேட்கலாம்.

அதாவது மேலே சொல்லப்பட்டுள்ள கடைகளில் அஞ்சறை பெட்டி பொருட்கள் எல்லாம் மொத்தமாக வாங்கி பேக்கிங் செய்யும் தொழில். அத்தகைய தொழிலை நீங்கள் வீட்டில் இருந்தே செய்து கொடுப்பதாக கடைகளிடம் பேசி செய்யலாம்.

பேக்கிங் தொழில்:

இல்லத்தரசிகளுக்கு வீட்டில் இருந்து வேலை

அனைவருடைய வீட்டிலும் பயன்படுத்தப்படும் வீட்டு அஞ்சறைப்பெட்டி பொருட்கள் மற்றும் வடகம், அப்பளம், வத்தல் என இதுபோன்ற அனைத்தினையும் கடைகளின் தேவைக்கு ஏற்றவாறு 50 கிராம், 100 கிராம் மற்றும் 1/4 கிலோ என பேக்கிங் செய்து கொடுத்தால் போதும் பேக்கிங்கிற்கு ஏற்ற கணக்கில் வருமானம் மற்றும் லாபம் பெறலாம்.

மேலும் இதற்க்கான மூலப்பொருட்கள் மற்ற பொருட்களான பேக்கிங் கவர், பேக்கிங் மெஷின் என இவற்றை அந்தந்த கடைகளிலே வாங்கி கொள்ளலாம்.

Businees Ideas👇👇 மரத்தை வைத்து இத்தனை தொழில் செய்யலாமா..? மாதம் மாதம் லட்சத்தில்

சம்பாதிக்கும் முறை:

இத்தகைய தொழிலிற்கான வருமானம் என்பது நீங்கள் பேக்கிங் செய்யும் பாக்கெட்டுகளின் எண்ணிக்கையினை பொறுத்து தான் அமையும். அப்படி என்று பார்த்தால் ஒரு நாளைக்கு 1,000 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை தோரயமாக சம்பாதிக்கலாம்.

மேலும் இந்த தொழில் நீங்கள் நல்ல வருமானம் பார்த்தீர்கள் என்றால் இதனை மற்றொரு முறையிலும் செய்யலாம். அதாவது நீங்களே 3 அல்லது 5 நபர்களை வேலைக்கு வைத்து 2, 3 கடைகளில் ஆர்டர் எடுத்து பேக்கிங் செய்து விற்பனை செய்யலாம்.

இதன் படி நீங்கள் தொழில் செய்தால் உங்களுடைய வீட்டில் வெறும் 10×10 இடம் இருந்தால் மட்டும் போதும்.

Businees Ideas👇👇 தினமும் 1 மணிநேரம் வேலை செய்தால் போதும்  வருமானம் மட்டும் 10,000 ரூபாய் பெறலாம் 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil