1000 ரூபாய் முதலீட்டில் தினமும் 5,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய சுயதொழில்..!

Advertisement

Business Ideas With 1000 Rupees in Tamil

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பெரும்பாலான மக்கள் வாழ்க்கையில் எப்படியாவது முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தினை மனதில் வைத்து கொண்டு தான் அதற்கான முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிலருக்கு இதற்கான போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற நினைக்கிறார்கள். அதாவது சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் கையில் முதலீடு என்று பார்த்தால் வெறும் 1,000 ரூபாய் மட்டுமே இருக்கும். ஆகையால் வெறும் 1,000 ரூபாயினை மட்டும் வைத்து எப்படி தொழில் தொடங்குவது என்று யோசித்து சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தினையே கைவிட்டு விடுகிறார்கள். ஆனால் இவ்வாறு நினைப்பது தான் தவறு. ஏனென்றால் 1,000 ரூபாய் முதலீட்டில் தொடங்கக்கூடிய எண்ணற்ற தொழில்கள் உள்ளது. அத்தகைய தொழில்கள் ஒன்றான வீட்டில் இட்லி மற்றும் தோசை மாவு விற்பனை செய்யக்கூடிய தொழிலினை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

வீட்டில் இருந்தபடியே சுயதொழில்:

சுயதொழில் தொடங்குவது எப்படி

சுயதொழில் என்பது ஆரம்பத்தில் சிறிய அளவிலான தொகையினை வருமானமாக கொடுத்தாலும் கூட குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு நாம் எதிர்க்கபார்க்காத அளவிற்கு வருமானம் மற்றும் நன்மையினை அளிக்கும் விதமாக இருக்கிறது.

இத்தகைய முறை சுயதொழில்களில் இட்லி மற்றும் தோசை மாவு தொழிலும் ஒன்றாகும். பெரும்பாலான வீட்டில் தற்போதைய தேவைக்காக கடைகளில் தான் இட்லி மாவினை வாங்கி கொள்கிறார்கள். எனவே வீட்டில் இருந்த படியே எப்படி இந்த தொழிலை செய்வது என்று விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மூலப்பொருள்:

  • அரிசி
  • உளுந்து
  • வெந்தயம்
  • உப்பு
  • பேக்கிங் கவர்
  • லப்பர் பேண்ட்

மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களை மட்டும் நீங்கள் வாங்கி கொள்ளுங்கள். இவை இல்லாமல் உங்களுடைய வீட்டில் கிரைண்டர் அல்லது மாவு ஆட்டும் கல்லு இருக்க வேண்டும்.

Businees Ideas👇👇 1000 ரூபாய் வைத்து என்ன தொழில் செய்யலாம் அதனை பற்றி பார்க்கலாம் வாங்க 

இட்லி மாவு தொழில்:

வீட்டில் இருந்தபடியே சுயதொழில்

முதலில் உங்களுடைய வீட்டிற்கு எப்படி இட்லி மாவினை சரியான பதத்தில் அரைப்பீர்களோ அதே பதத்தில் கொஞ்சம் கூடுதலான அளவில் மாவினை அரைத்து விடுங்கள்.

பின்பு அரைத்து வைத்துள்ள மாவினை பேக்கிங் செய்து கொள்ளுங்கள். இதில் முக்கியமானது என்னவென்றால் அனைத்து மாவு பாக்கெட்டுகளிலும் ஒரே அளவில் மாவினை பேக்கிங் செய்ய வேண்டும்.

அதன் பிறகு பேக்கிங் செய்த வைத்துள்ள மாவு பாக்கெட்டினை உங்களுடைய ஊரில் உள்ள மளிகை கடை, காய்கறி கடை ஆகிய கடைகளிலும் கமிஷன் முறையில் விற்பனை செய்வதாக பேசி வைத்து கொண்டும் வருமானம் பெறலாம்.

எனவே இந்த தொழிலை பொறுத்தவரை வீட்டில் இருந்து வியாபாரம் மற்றும் கமிஷன் முறையில் வியாபாரம் என இரண்டு விதமாக செய்யலாம்.

வருமானம்:

ஒரு மாவு பாக்கெட்டின் விலை என்பது தோராயமாக 50 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆகவே ஒரு நாளைக்கு நீங்கள் 100 மாவு பாக்கெட்டினை விற்பனை செய்தால் போதும் தோராயமாக 5,000 ரூபாய் சம்பாதிக்கலாம்.

Businees Ideas👇👇 அடிதூள் இந்த தொழில்ல மாதம் 30,000 ரூபாய் சம்பாதிக்கலாமா 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement