Business Ideas With Low investment and High Profit in Tamil
வணக்கம் நண்பர்களை ஒரு பொருளை வாங்கி.. அதனை திரும்ப மக்களிடம் விற்பனை செய்வதன் மூலம் தினமும் 2,000/- ரூபாய் வரை லாபம் பெற முடியும். இந்த தொழில் துவங்க எந்த ஒரு இயந்திரமும் வேண்டாம், பேக்கிங் செய்யும் வேலையும் இருக்காது. அந்த தொழில் குறித்த தகவல்களை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். குறைந்த முதலீட்டில் தினமும் வருமானம் பெற வேண்டும்.. ஆனால் என்ன தொழில் செய்வது என்று யோசிப்பவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆகவே பதிவை முழுமையாக படித்து பயன்பருங்கள்..
என்ன தொழில்?
நாம வாங்கி விற்பனை செய்யக்கூடிய தொழிலின் பெயர் aloe vera cooling eye gel mask. ஆம் இந்த மாஸ்க்கை விற்பனை செய்வதன் மூலம் தினமும் நல்ல வருமானத்தை பெற முடியும். இது பார்ப்பதற்கு ஒரு மாஸ்க் மாதிரி தான் இருக்கும்.
பயன்கள்:
இந்த மாஸ்க் கண்களுக்கு பாதுகாப்பை கொடுக்கும். குறிப்பாக கண் எரிச்சல், கண் அரிப்பு, கருவளையம், கண்கள் வறண்டு போவது போன்ற கண் தொடர்பான பேரச்சனைகளுக்கு மிகவும் சிறந்தது. தினமும் கண்களுக்கு அதிகம் வேலை கொடுக்கும் நபர்கள் இந்த Aloe Vera Cooling Eye Gel Mask-ஐ பயன்படுத்துவதன் மூலம் கண்களுக்கு நல்ல புத்துணர்ச்சி கொடுக்கும். இதன் காரணமாக மக்களிடம் இதன் தேவை அதிகமாகவே இருக்கிறது. ஆக நாம் இந்த தொழிலை செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை தினந்தோறும் பெறமுடியும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 பெண்கள் வீட்டில் இருந்து Packing செய்து தினமும் 5,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..!
விற்பனை விவரம்:
- Collagen Eye Mask
- Aloe Vera Cooling Eye Gel Mask
என இரண்டு வகைகளில் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை நாம் மொத்தமாக வாங்கி விற்பனை செய்வதன் மூலம் நல்ல பலம் பெற முடியும்.
சந்தையில் ஒரு பீசின் விலை 90 ரூபாய் முதல், 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதனை நாம் பொத்தமாக வாங்கும் பொழுது ஒரு பீஸ் விலை 16 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆக நாம் மொத்தமாக வாங்கி விற்பனை செய்வதன் மூலம். ஒரு பீஸ் விலை 90 ரூபாய் என்று விற்பனை செய்யலாம். ஒரு பீஸிலேயே நமக்கு 60 ரூபாய் லாபம் கிடைக்கும். ஒரு நாளைக்கு 50 பீஸ் விற்பனை செய்கிறீர்கள் என்றால் 4000 ரூபாய் வரை லாபம் பெறமுடியும்.
எங்கு விற்பனை செய்யலாம்:
நீங்கள் இந்த மாஸ்க்கை ஆன்லைனில் கூட விற்பனை செய்யலாம். அப்படி இல்லை என்றால் WhatsApp, Facebook, Telegram, Instagram போன்ற சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்து அதன் மூலம் லாபம் பெறலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2022 |