குறைந்த முதலீட்டில் செய்ய கூடிய பட்டன் தயாரிப்பு தொழில்..!

தயாரிப்பு தொழில்

சுயதொழில் – பட்டன் தயாரிப்பு தொழில் (Button Making Business)..!

இன்று நாம் குறைந்த முதலீட்டில் அதிகம் இலாபம் தரக்கூடிய ஒரு அருமையான பிசினெஸ் ஐடியாவை பற்றித்தான் இந்த பகுதியில் நாம் தெரிந்துகொள்ள போகிறோம். அது என்ன குறைந்த முதலீட்டில் செய்ய கூடிய தொழில் என்றால், அதுதான் பட்டன் தயாரிப்பு தொழில்.

இந்த சுயதொழில் பொறுத்த வரை அதிக முதலீடு செய்ய தேவையில்லை. குறைந்த முதலீடு இருந்தாலே போதும். இந்த சுயதொழில் பொறுத்தவரை நாளுக்கு நாள் ரெடிமேட் ஆடைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டேபோவதால்.

இவற்றின் தேவை அதிகம் உள்ளது என்பதால் இந்த சுயதொழிலை தயக்கம் இல்லாமல் இப்போதே துவங்கலாம்.

சிறுதொழில் – டி ஷர்ட் பிரிண்டிங் தொழில் நல்ல வருமானம்..!

 

சரி வாங்க இந்த பட்டன் தயாரிப்பு தொழில் (Button Making Business) பற்றி சில விவரங்கள் நாம் இந்த பகுதியில் படித்து தெரிந்து கொள்வோம்.

பட்டன் தயாரிப்பு தொழில் (Button Making Business) செய்ய வேண்டுமா.? இந்தாங்க சில ஆலோசனைகள்..!

இடவசதி:

இந்த பட்டன் தொழில் பொறுத்தவரை 300 சதுர அடி கொண்ட இடம் இருந்தால் போதும், இந்த தொழிலை நாம் துவங்கிவிட முடியும்.

தேவைப்படும் இயந்திரம்:

இந்த பட்டன் தொழில் பொறுத்தவரை தேவைப்படும் இயந்திரங்கள் என்று பார்த்தால், Acrylic sheet cutting machine அதாவது Acrylic sheet-டை கட்டிங் செய்வதற்கு ஒரு இயந்திரம், பின்பு தயாரித்த பட்டனில் சிறிய ஓட்டை விடுவதற்கு இந்த Drilling machine அவசியம் தேவைப்படும், அதேபோல் தயாரித்த பட்டனை விருப்பத்திற்கேற்ப வடிவமைக்க Grinding machine தேவைப்படும்.

இந்த அனைத்து இயந்திரங்களும் Indiamart.com -யில்  மிக குறைந்த விலையில் நமக்கு கிடைக்கும் அவற்றில் நாம் ஆடர் செய்து வாங்கிக்கொள்ளலாம்.

வேலையாட்கள்:

நன்கு வேலை தெரிந்த இரண்டு பேர் தேவை, அதை தவிர கூட இருந்து உதவி செய்வதற்கு இரண்டு பேர் தேவை.

சுயதொழில் ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பு..!

சந்தை வாய்ப்பு:

இந்த பட்டன் தொழில் பொறுத்தவரை சந்தை வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. குறிப்பாக அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த பட்டன் கம்பெனி உள்ளது.

அவர்களிடம் சென்று கூட்டணி வைத்து கொண்டு, நாம் தயாரித்த பட்டனை விற்பனை செய்யலாம், அதேபோல் தையல் கடை, சிறிய சிறிய பேன்சி ஸ்டோர் கடைகளிலும் நாம் தயாரித்த பட்டனை விற்பனை செய்யலாம்.

குறிப்பாக பர்ஸ், ஸ்குள் பேக் தயாரிக்கும் இடங்களுக்கு சென்றும் அவர்களது விருப்பத்திற்கேற்ப வண்ணவண்ண டினைகளில் பட்டனை தயார் செய்து விற்பனை செய்யலாம். இதன் மூலம் அதிக இலாபமும் பெறமுடியும்.

லாபம்:

இந்த பட்டன் தயாரிப்பு தொழில் பொறுத்த வரை குறைந்த முதலீட்டில் அதிகம் இலாபம் தரக்கூடிய தொழில். அதாவது குறைந்தபட்சம் 70 சதவீதம் வரை லாபம் தரக்கூடிய நல்ல லாபகரமான தொழில்.

என்ன நண்பர்களே இந்த பட்டன தயாரிப்பு தொழில் பற்றிய சில விஷயங்களை தெரிந்துகொண்டீர்களா.

சரி நண்பர்களே இந்த சுயதொழில் தகவல் தங்களுக்கு பிடித்திருந்தால் தங்கள் நண்பர்களுக்கும் தவறாமல் இந்த பதிவினை பகிர்த்திடுங்கள் நன்றி..! 

புதிதாக என்ன தொழில் செய்யலாம் சிறந்த சிறு தொழில்கள் 2019..!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com