Chapati Making Business Plan in Tamil
வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவில் வியாபாரம் பகுதியின் வாயிலாக தினமும் பல சுயதொழில் பற்றிய விவரங்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஒரு புதுமையான சுயதொழில் பற்றித்தான் பார்க்கப்போகிறோம். இப்போது இருக்கும் காலகட்டத்தில் பணம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருக்கும் பட்சத்தில் அனைவரும் மாத சம்பளத்திற்கோ அல்லது சுயதொழில் செய்தோ பணத்தேவையை பூர்த்தி செய்ய வேண்டிருக்கிறது. அதனால் ஒரு குடும்பத்தில் ஆண், பெண் என இருவரும் வேலைக்கு செல்கிறார்கள். எனவே பலநேரங்களில் ஹோட்டலில் தான் உணவு வாங்கி சாப்பிடுகிறோம். இதனால் உணவகங்கள் தான் அதிக வருமானத்தை ஈட்டுகிறது. அந்த வகையில் உணவகங்களுடன் தொடர்புடைய ஒரு சுயதொழில் பற்றித்தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம். எனவே இப்பதிவை முழுவதுமாக படித்து இத்தொழிலை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
உணவகங்களில் மிகவும் கடினமான வேலைகளில் ஒன்று சப்பாத்திக்கு மாவு பிசைவதும் தேய்ப்பதும். அந்த கடினமான வேலையை ஒரு தொழிலாக மாற்றுவது தான் இந்த சுயதொழில்.
Chapati Making Business in Tamil:
ஏற்கனவே, Ready To Cook என்ற பெயரில் இவ்வகையான சப்பாத்தி மற்றும் பரோட்டாக்கள் பேக் செய்து வருகிறது. இது வீடுகளில் இருப்பவர்களுக்கு ஏற்றது. ஆனால், பெரிய பெரிய உணவகங்களுக்கு இது ஏற்றதாக இருக்காது. ஏனென்றால் உணவகங்களின் எதிர்பார்ப்பிற்கு அந்த பாக்கெட்டின் விலை ஈடாகாது.
எனவே, உணவகங்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றவாறு, குறைவான விலையில் செய்து கொடுக்கலாம். இந்த தொழிலுக்கான டிமாண்ட் இன்றைய காலத்தில் அதிக அளவே உள்ளது.
மூலப்பொருட்கள்:
- கோதுமை மாவு
- சப்பாத்தி தேய்க்கும் இயந்திரம்
- உப்பு
முதலீடு:
சப்பாத்தி தேய்க்கும் இயந்திரத்தை தவிர இத்தொழிலுக்கு முதலீடு என்று பார்த்தல் 2000 ரூபாய் மட்டும்தான்.
மிகவும் புதுமையான தொழில் தினமும் 40,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்
சப்பாத்தி தேய்க்கும் இயந்திரம்:
- சப்பாத்தி தேய்க்கும் இயந்திரங்களில் இரண்டு வகையான இயந்திரம் உள்ளது.
- Automatic Chapati Making Machine
- Manual Chapati Making Machine
இத்தொழிலுக்கு தேவையான இடம்:
இத்தொழிலை செய்ய பெரிய அளவில் இடம் தேவையில்லை. வீட்டில் 10×10 அளவுள்ள சிறிய அறை இருந்தால் போதும்.
தயாரிக்கும் முறை:
முதலில் கோதுமை மாவை சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து எடுத்து கொள்ளுங்கள். சப்பாத்தி மாவு பிசைவதற்கு இயந்திரம் இருக்கிறது, இருந்தாலும் ஆரம்பத்தில் கையால் பிசைந்து கொண்டு தொழில் சிறிது வளர்ச்சி அடைந்ததும் இயந்திரத்தை வாங்கி கொள்ளலாம்.
இப்போது, சப்பாத்தி பதத்தில் பிசைந்த மாவை, Automatic Chapati Making Machine -ல் வைத்தால் போதும் அந்த இயந்திரம் மாவை தட்டையாக தேய்த்து வட்ட வடிவில் மாவை நறுக்கி கொடுத்துவிடும்.
அதே, நீங்கள் Manual Chapati Making Machine -ஐ பயன்படுத்தி செய்தீர்கள் என்றால், மாவினை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி ஒவ்வொன்றாக இந்த இயந்திரத்தில் வைத்து எடுக்க வேண்டும்.
(எனவே, உங்களுக்கு விருப்பமான முறையில் இயந்திரத்தை வாங்கி கொள்ளுங்கள்.)
பிறகு, தேய்த்து வைத்த சப்பாத்தியை ஒன்றோடு ஒன்று ஒட்டாதவாறு கவரில் போட்டு பேக்கிங் செய்து கொள்ளுங்கள்.
சும்மா தூக்கி போடுற பொருளை பயன்படுத்தி தினமும் 30,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..!
விற்பனை செய்யும் முறை:
தயார் செய்து வைத்துள்ள சப்பாத்திகளை உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள உணவகங்களில் ஆர்டர் எடுத்து விற்பனை செய்யலாம். அதுமட்டுமில்லாமல் சமையல்காரர்களிடம் ஆர்டர் செய்து விசேஷங்களுக்கு தயார் செய்து கொடுக்கலாம்.
கிடைக்கக்கூடிய வருமானம்:
ஒரு கிலோ மாவில் 25 முதல் 30 சப்பாத்திகளை தயார் செய்ய முடியும். எனவே 1,000 சப்பாத்திகளை தயார் செய்ய 40 கிலோ கோதுமை மாவு தேவைப்படும். எனவே தோராயமாக, 1 கிலோ மாவு 50 ரூபாய் என கணக்கில் கொண்டால் கூட 40 கிலோ மாவு 2000 ரூபாய் வரும்.
அதாவது நாம் 1 சப்பாத்தி செய்ய 2 ரூபாய் செலவாகும். ஆனால் இதனை உணவகங்களில் சப்பாத்தியை 7 ரூபாய்க்கு விற்பனை செய்தால் அதில் நாம் 5 ரூபாய் லாபம் பெறலாம் . எனவே 1 நாளைக்கு தோராயமாக 1000 சப்பாத்திகளை விற்பனை செய்தால் ரூ. 5000 வரை சம்பாதிக்க முடியும். இதேபோல் நீங்கள் 1 மாதத்திற்கு விற்பனை செய்தால் மாதம் தோராயமாக 1,50,000 வரை சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.10,000 ரூபாய் முதலீட்டில் மாதம் 1,50,000 ரூபாய் வருமானம் தரக்கூடிய சூப்பரான தொழில்…!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |