Child Care Business Ideas
இன்றைய காலகட்டத்தை பொறுத்தவரை கணவன். மனைவி இருவருமே வேலைக்கு சென்றால் தான் குடும்பத்தை ஓட்ட முடியும் என்ற நிலைமை இருக்கிறது. சில பேர் வீட்டில் வயதானவர்கள் இருப்பார்கள். அப்படி இருக்கும் போது ஏதவாது சுயதொழில் என்ற யோசனை இருக்கும். ஆனால் சுயதொழில் செய்யணும் அப்படினா ரொம்ப படிச்சுருக்கணுமோ என்ற கேள்வியும் இருக்கும். படிக்காதவர்கள் எல்லாம் சுயதொழில் செய்ய முடியும் என்ற எண்ணம் இருக்கும். அதனால் தான் இந்த பதிவில் 12th படித்திருந்தால் இந்த தொழில். அது என்ன தொழில் எப்படி செய்ய வேண்டும் என்று முழு பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Demand:
குழந்தை பராமரிப்பு தொழில் பற்றி தான் பார்க்க போகிறோம். குழந்தை பராமரிப்பு தொழிலுக்கு டிமாண்ட் ஆனது இந்தியாவுல அதிகமா இருக்கு. நகர்ப்புறங்களில் வேலை செய்யும் பெற்றோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெற்றோர்கள் குழந்தைகளை பாதுகாப்பான இடத்தில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். வேலைக்குச் செல்லும் தம்பதிகள், சிங்கிள் பேரெண்ட்ஸ், குறுகிய கால பராமரிப்பு தேவை உள்ள பெற்றோர் போன்ற குழந்தைகள் தான் உங்களோட டார்கெட் ஆடியன்ஸ் ஆக இருப்பார்கள். இந்த தொழிலில் 2 அல்லது 3 வயது வரை உள்ள குழந்தைகளை தான் பராமரிக்க வேண்டியிருக்கும்.
எப்படியெல்லாம் சர்விஸ் பண்ணலாம்.
புல் டே , ஹால்வ் டே போன்ற முறைகளில் செய்யலாம். இந்த தொழிலுக்கு இடமானது ரொம்ப பாதுகாப்பானதாக இருக்க வேண்டும். விளையாட்டு மைதானம், சாப்பிடுவதற்கு ஒரு ரூம், துாங்கும் ரூம், CCTV போன்றவை இருக்க வேண்டும்.
கால் மேலே கால் போட்டுக்கிட்டே வீட்டில் இருந்தபடியே 1 லட்சம் சம்பாதிக்கலாம்..
பெற்றோர்களை கவருவது எப்படி.?
உங்க இடத்துல டைல்ஸ் ரொம்ப வழுக்காத மாதிரி இருக்க வேண்டும். ஏனென்றால் குழந்தைகள் விளையாடும் போது கீழே விழுகாதது போல இருக்க வேண்டும். குழந்தைகள் விளையாடும் விளையாட்டு பொருளானது பாதுகாப்பானதாக இருக்க வேண்டும்.
என்னவெல்லாம் அனுமதி பெற வேண்டும் என்று தெரியுமா.?
குழந்தை பராமரிப்பு மையங்களை இயக்க அரசு அனுமதி பெற வேண்டும். கமர்ஷியல் சட்டங்கள், குழந்தை பாதுகாப்பு விதிமுறைகள், ஊழியர் பாதுகாப்பு சட்டங்கள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். GST பதிவு, ஷாப்பு & எஸ்டாப்ளிஷ்மெண்ட் அனுமதி பெற வேண்டும். 10 குழந்தைகளுக்கு 1 ஊழியர் இருக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. அப்போ உங்க டே கேர்ல 30 குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால் 3 ஊழியரை வைத்திருக்க வேண்டும்.
விளம்பரம் செய்வது எப்படி?
பேஸ் புக், இன்ஸ்டாகிராம், யூடூப் போன்றவற்றில் உங்களது தொழில் பற்றிய படங்கள் மற்றும் தகவல்களை கூறி விளம்பரப்படுத்தலாம். கஸ்டமரை ஈர்ப்பதற்கு அப்போ அப்ப தள்ளுபடி மற்றும் ஆபர்களை வழங்க வேண்டும்.
இதுக்கு ஏதும் ஆட்கள் தேவைப்படுமா!
பராமரிப்பு ஊழியர்,மருத்துவ உதவியாளர், சமையல் மற்றும் துப்புரவு பணியாளர், பாதுகாப்பு ஊழியர் போன்றோர் தேவைப்படுவார்கள். இந்த தொழில் செய்வதற்கு நீங்க பன்னிரண்டாம் வகுப்பு அல்லது ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தாலே போதுமானது. மேலும் குழந்தைகளை பராமரிக்கவும், அந்த குழந்தைகளும் கற்று தருவதற்கான நாலெட்ஜ் இருந்தால் போதும்.
பெண்களுக்கான எதிர்கால தொழில் ஐடியா
முதலீடு
விளையாட்டு பொருட்கள், ஆட்களுக்கு சம்பளம் போன்றவை செலவு செய்ய வேண்டியிருக்கும். இடத்திற்கு ஐம்பதியாயிரம் முதல் 5 லட்சம் தேவைப்படும். இந்த விலையானது நீங்க இருக்கும் இடத்தை பொறுத்து மாறுபடும். குழந்தைகளுக்கு வாங்கும் விளையாட்டு பொருட்கள், CCTV போன்றவற்றிக்கு ஐம்பதியாயிரம் தேவைப்படும். லைசென்ஸ் போன்றவற்றிற்கு இருபதாயிரம் வேணும். இதெல்லாம் ஒரு தடவை முதலீடு செய்வதற்கு 3 லட்சம் முதல் 5 லட்சம் வரைக்கும் செலவு ஆகும். வேலை செய்யும் ஆட்கள், கரண்ட் பில் போன்றவற்றிற்கு மாதம் மாதம் கொடுக்க வேண்டியிருக்கும்.
வருமானம்:
ஒரு குழந்தையிடம் தோராயமாக எட்டாயிரம் வாங்குகிறீர்கள் என்றால் மொத்தம் 30 குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால் இரண்டு லட்சத்து நாப்பதாயிரம் வருமானம் கிடைக்கும். இதில் லாபம் என்றால் 30% முதல் 40% வரை கிடைக்கும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |