உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிப்பு தொழில் முழு (Potato Chips Making Business) விவரம்..!
சொந்தமாக தொழில் துவங்குவதற்கு பல தொழில் வாய்ப்புகள் இருக்கின்றது. இருப்பினும் உணவு பொருள் சார்ந்த தயாரிப்பு தொழில் மூலம் விற்பனை செய்து அதிக இலாபம் பெறலாம். அதிலும் குறிப்பாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய சிப்ஸ் தயாரிப்பு தொழில் தற்போது அதிகரித்து கொண்டே வருகின்றது. எனவே சிப்ஸ் தயாரிப்பு தொழில் செய்து தினமும் அதிக லாபம் பெறலாம்.
சரி வாங்க இந்த உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிப்பு தொழில் (Potato Chips Making Business) பற்றிய அனைத்து விவரங்களையும் இந்த பகுதியில் நாம் படித்தறிவோம்.
சுயதொழில் – வீட்டில் கற்பூரம் தயாரிப்பது எப்படி..? |
உருளைக்கிழங்கு தயாரிப்பு தொழில் (Potato Chips Making Business) முழு விவரங்கள்:
உருளைக்கிழங்கை முதலில் தோல் நீக்கும் இயந்திரத்தில் போட வேண்டும். உருளைக்கிழங்கு தோல் நீக்கி தண்ணீரில் கழுவி வெளிவரும். இந்தத் தோல் நீக்கிய உருளைக்கிழங்கை சிப்ஸ் வடிவில் வெட்டும் இயந்திரத்தில் போட வேண்டும். இங்கும் தண்ணீருடன் வெட்டி வெளிவரும் அதிகமான ஸ்டார்ச் கழுவிவிடும்.
ஈரமான உருளை சிப்ஸ்களை நீர் வெளியேற்றி காய வைக்கும் இயந்திரத்தில் போட வேண்டும். இது துணி துவைக்கும் இயந்திரம் போல நீரைச் சுழற்சி மூலம் வெளியேற்றி ஈரம் குறைந்த சிப்ஸ்களை தரும். இந்த சிப்ஸ்களை எண்ணெய் கொப்பரையில் கொட்ட வேண்டும். உருளைக்கிழங்கு சிப்ஸ் இதில் நன்றாகப் பொரிந்துவிடும். பின் எண்ணெயை வடியவிட்டு சிப்ஸ்களைத் தனியாக எடுக்க வேண்டும்.
இந்த சிப்ஸை ஒரு உருளும் இயந்திரத்தில் இட்டு தேவையான உப்பு, காரம் மற்றும் சுவைக்காக மசாலாப் பொருட்களைச் சேர்க்க வேண்டும். இப்போது சிப்ஸ்களை முறையாகப் பாலிதீன் பைகளில் போட்டு சீல் செய்து விற்பனை செய்யலாம். பல நாட்கள் வைத்து விற்பனை செய்ய நைட்ரஜன் கேஸ் பேக்கிங் செய்யலாம். அனைத்திற்கும் இயந்திரம் உண்டு.
தயாரிப்பு தொழில் – சந்தை வாய்ப்பு:
அனைத்து பேக்கரிகள் சில்லறைக் கடைகள், பார்கள், பெரிய ஓட்டல்கள், ஸ்வீட் கடைகள் போன்றவற்றுக்கு சப்ளை செய்யலாம். இதே இயந்திரத்தை கொண்டு வீல், பிரயம் போன்ற பொருட்களையும் பொரித்து பேக் செய்து விற்பனை செய்யலாம்.
தயாரிப்பு தொழில் திட்ட அறிக்கை:
- இடம்: வாடகை
- கட்டடம்: வாடகை
- இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள்: 3.50 லட்சம்
- மின்சாரம் & நிறுவும் செலவு: 0.20 லட்சம்
- இதர செலவுகள்: 0.30 லட்சம்
- நடைமுறை மூலதனம்: 1.00 லட்சம்
- மொத்த முதலீடு: 5.00 லட்சம்
இந்தத் தொழிலை அரசின் மானியத்துடன் கடன் பெற்று தொழில் செய்யலாம்.
- மொத்த திட்ட மதிப்பீடு: 5.00 லட்சம்
- நமது பங்கு 5%: 0.25 லட்சம்
- அரசு மானியம் 25% : 1.25 லட்சம்
- வங்கிக் கடன்: 3.50 லட்சம்
தமிழக அரசின் வேலையில்லா இளைஞர்களுக்கான வேலை உருவாக்கும் திட்டம் (UYEGP). இந்தத் திட்டம் மாநில அரசின் திட்டமாகும் இதில் உற்பத்தித் துறைக்கு ரூ.10 லட்சம் வரை மானியத்துடன் கடன் பெறலாம்.
மானியம் அதிகபட்சம் ரூ.1.25 லட்சம் வரை பெறலாம். உங்கள் பங்கு 5%, அரசின் மானியம் 25% (அதிகபட்சம் ரூ.1.25 லட்சம் வரை) மாவட்டத் தொழில் மையத்தை அணுகிப் பெறலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அதற்குத் திட்ட அறிக்கை தேவை.
சிறு தொழில் செய்ய முத்ரா தொழில் கடன் பெறுவது எப்படி ? |
உருளைக்கிழங்கு தயாரிப்பு தொழில் – தேவையான இயந்திரங்கள்
- உருளைக்கிழங்கு தோல் சீவும் இயந்திரம்
- சிப்ஸ் தயாரிக்கும் இயந்திரம்
- தண்ணீர் வெளியேற்றி உலரவைக்கும் இயந்திரம்
- சிப்ஸ் வறுக்கும் இயந்திரம்
- மசாலா சேர்க்கும் இயந்திரம்
- பாக்கெட் போடும் இயந்திரம்
தயாரிப்பு தொழில் – மூலப் பொருட்கள்
- உருளைக்கிழங்கு
- எண்ணெய்
- மசாலாப் பொருட்கள்
- பேக்கிங் பொருட்கள்
அடிப்படை விவரங்கள்
உருளைக்கிழங்கு மொத்த சந்தையில் ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை விற்கப்படுகிறது. நாம் கிலோ ரூ.20க்கு வாங்குவதாக வைத்துக் கொள்வோம். ஒரு வாரத்திற்குத் தேவையான உருளைக்கிழங்கு வாங்கு வதால் விலை குறைவாகக் கேட்டு வாங்கலாம்.
100 கிலோ உருளைக்கிழங்கிலிருந்து சுமார் 35 கிலோ சிப்ஸ் தயாரிக்க முடியும்.
100gm பேக்கிங் செலவு ரூ.1.50 மற்றும் ஒரு கிலோ சிப்ஸ் பேக்கிங் செலவு ரூ.15 என வைத்துக்கொள்வோம்.
100 கிலோ உருளைக்கிழங்கு பொரிப்பதற்கு 14 லிட்டர் எண்ணெய் தேவைப்படும்.
மசாலா விலை ரூ.50 என வைத்துக்கொள்வோம்.
கேஸ் சிலிண்டர்
- இரண்டு நாட்களுக்கு ஒரு சிலிண்டர் தேவைப்படும். ஒரு நாளைக்கு சிலிண்டர் செலவு ரூ.750. ஒரு மாதத்திற்கு ரூ.19,000 செலவாகும்.
மூலப்பொருட்களின் தேவை:
ஒருநாள் தேவையான
- உருளைக்கிழங்கு – 300 கிலோ
- 300 X Rs.20 – ரூ. 6000/-
- ஒரு மாதத்திற்கு – ரூ.1,50,000/-
- எண்ணெய் ஒரு நாளைக்கு
- 45 லிட்டர் X ரூ.70 – ரூ. 3150/-
- ஒரு மாதத்திற்கு – ரூ. 78,750/-
- மசாலா பவுடர்
- ஒரு மாதத்திற்கு – ரூ. 4,000/-
மொத்தம் – ரூ.2,34,000/-
உற்பத்தி மற்றும் விற்பனை வரவு:
- ஒரு நாளைக்கு 100 கிலோ சிப்ஸ் தயாரிக்கலாம். ஒரு மாதத்திற்கு 2,500 கிலோ சிப்ஸ் தயாரிக்க முடியும்.
- ஒரு கிலோ சிப்ஸ் ரூ.300 to ரூ.320-வரை சில்லறை விலையில் கடையில் கிடைக்கிறது. நாம் மொத்த விலைக்கு விற்கும்போது ரூ.200-க்கு விற்பனை செய்யலாம்.
- ஒரு நாளைக்கு 100 கிலோ சிப்ஸ் ரூ.20,000
- ஒரு மாதத்திற்கு ரூ.5,00,000-க்கு விற்பனை செய்யலாம்.
வேலையாட்கள் சம்பளம்:
- மேலாளர் 1: ரூ.7,000
- பணியாளர் 2: ரூ.10,000
- விற்பனையாளர்: ரூ.6,000
- மொத்த சம்பளம்: ரூ.23,000
உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிப்பு தொழில் – மொத்த செலவு:
- மூலப்பொருட்கள்: ரூ.2,34,000
- பேக்கிங் மெட்டீரியல்: ரூ.38,000
- கேஸ் சிலிண்டர்: ரூ.19,000
- மின்சாரம்: ரூ.54,000
- சம்பளம்: ரூ.23,000
- இயந்திரப் பராமரிப்பு: ரூ.3,000
- மேலாண்மைச் செலவு: ரூ.3,000
- விற்பனைச் செலவு: ரூ.3,000
- தேய்மானம் 15%: ரூ.5,000
- கடன் வட்டி: ரூ.4,000
கடன் தவணை
- (60 தவணை): ரூ.6,000
- மொத்தம்: ரூ.3,97,000
லாப விவரம் - மொத்த வரவு: ரூ.5,00,000
- மொத்த செலவு: ரூ.4,00,000
- லாபம்: ரூ.1,00,000
சுயதொழில் பேப்பர் கவர் தயாரிப்பு..! சூப்பர் வருமானம்..! |
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தொழில் பட்டியல் 2019 |