குறைந்த Investment அதிக Profit கிடைக்கும் தொழில்

Advertisement

மாதம் கைநிறைய லாபம் கிடைக்கும் தொழில்

நண்பர்களே வணக்கம் இன்று கைநிறைய சம்பாதிக்க நினைக்கும் அனைவருக்கும் இந்த தொழில் உதவியாக இருக்கும். பொதுவாக படித்தவர்களுக்கு படிப்புக்கு சம்மந்தமான வேலை கிடைப்பதில்லை என்று யோசித்து கவலை பட்டு வருகிறார்கள். படித்தவர்கள் படித்த வேலைக்கு தான் போகுவேன் என்று யோசித்தார்கள் என்றால் நாட்டில் அதிகளவு யாரும் வேலைக்கு செல்ல முடியாது. கிடைத்த வழிகளை வைத்து நமக்கு ஏற்றத்தை போல் வாழ்க்கையை அமைத்து கொள்ளவது நல்லது.

இன்னும் சொல்லப்போனால் அதிகளவு பணக்காரனாக இருப்பவர்கள் அவர்கள் கிடைத்த வேலைகளை வைத்து மட்டுமே வாழ்வின் முன்னேற்றம் அடைந்திருப்பார்கள். நீங்களும் நினைத்த இடத்தை அடைய வேண்டும் என்று நினைத்தால் கிடைத்த வழிகளை வைத்து பெரியளவில் பயன்படுத்திக்கொள்ளுங்கள். வாங்க இப்போது குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் தொழிலை பற்றி தெரிந்துகொள்வோம்.

தேங்காய் வியாபாரம் செய்வது எப்படி?

பொதுவாக ஒரு தொழில் தொடங்க என்ன செய்ய வேண்டும் என்றால் முதலீடு தான் அதனை விட முக்கியமான விஷயம் ஒன்று உள்ளது. இந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விடுமா என்பதை யோசிக்காமல் இருப்பது உங்கள் தொழிலுக்கு மிகப்பெரிய நல்லதாக இருக்கும் ஏனென்றால் ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கை என்பது ஒரு நல்ல நண்பனாக இருக்கும் அதனால் தான் அப்படி சொல்கிறோம்.

இப்போது தேய்காய் வியாபாரம் தொடங்க பெரிய முதலீடு எதுவும் தேவையில்லை குறைந்த முதலீடு போதும். வாங்க தொழில் தொடங்க எவ்வளவு முதலீடு வேணும் என்பதை பார்ப்போம்.

மக்கள் தொகை அதிம் உள்ள இடமோ அல்லது அதை சுற்றி உள்ள இடமோ அதை தேடிக்கொள்ள வேண்டும். குறைந்தளவு இடத்தின் அளவு 2,000 சதுர அடி இருக்க வேண்டும். அது மரத்தடியாக இருந்தாலும் சரி அல்லது குடோனாக இருந்தாலும் சரி. இடமானது குடோனாக இருப்பது மிகவும் நல்லது.

தேங்காய் தொழில் என்பது ஒரு சின்ன கடையாவும் வைத்துக்கொள்ளலாம். அப்படி வைக்கும்பட்சத்தில் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று பார்ப்போம்.

தேங்காய் கடை

இப்போது ஒரு சின்ன கடை என்றால் நேரடியாக தேய்காய் தோப்புக்கே சென்று அங்கு 4,00 தேங்காய் வாங்குறீர்கள் என்றால் அதற்கு நீங்கள் கொடுக்கும் பணம் 6,000 இருக்குமாயின் நீங்கள் கொடுக்கும் பணம் 5,000 அல்லது 4,000 ரூபாய இருக்கும்.

அப்படி இல்லையென்றால் நீங்கள் ஒரு பெரிய மொத்த வியாபாரிகளிடம் வாங்கி வியாபாரம் செய்தால் அதற்கு நீங்கள் முதலீடு செய்வது அதிகம்.

நீங்கள் தேங்காய் தோப்புக்கே நேரடியாக சென்று வாங்கிவருவதன் மூலம் உங்களுக்கு விலையும் குறைவு மனமும் நிறைவு.

10 ரூபாய் என்று வாங்கி வந்தால் அதனை விற்கும் போது  குறைந்தது 14 அல்லது 15 ரூபாய்க்கு விற்பனை செய்வீர்கள். இதன் மூலம் நஷ்டத்தை அடையாமல் தொடர்ந்து விற்பனை செய்து வரலாம்.

அதிக லாபம் தரும் சிறு தொழில்

Wholesale Coconut Market in Tamil:

மேல் கொடுக்கப்பட்ட பதிவில் தேங்காய் கடைவைக்க லாபம் நஷ்டத்தை பார்த்தோம். இப்போது நீங்களே Wholesale செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதிலும் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாங்க அதை பற்றி பார்ப்போம்.

Wholesale Coconut Market in Tamil

உங்ககிட்ட தென்னை தோப்பு இல்லை இடம் இருக்கிறது  என்றால் நீங்களும் இந்த Wholesale தொழில் செய்யலாம். அதற்கு நீங்கள் முதலீடு செய்ய வேண்டிய தொகை

1.20,000 முதலீடு செய்ய வேண்டும். ஒரு தேங்காய் தோப்புக்கு சென்று அங்கு 15,000 உரிக்காத தேங்காய் வாங்குவீர்கள் என்றால் அதற்கு அந்த முதலீடு போடவேண்டும். ஒரு உரிக்காத தேங்காயின் விலை 8 ரூபாய் என்ற கணக்கில் 15,000 தேங்காய் 1,20,000 ரூபாய் ஆகும்.

அதன் பின் கடைக்கு விற்பதற்கு தேங்காய்யை உரிக்க 2 ஆட்கள் வைக்கவேண்டும். அந்த ஆட்களுக்கு ஒரு நாளைக்கு 400 கூலி வழங்கவேண்டும்.

இப்போது உரித்த தேங்காய் நார்களை தனியாக ஒரு இடத்திலும் தேங்காயை ஒரு  இடத்திலும் சேமித்து வையுங்கள்.

இப்போது நீங்கள் சின்ன சின்ன கடைகளுக்கு சென்று தேங்காய் விற்க ஆர்டர் எடுத்து ஒரு தேங்காயின் விலை 12 ரூபாய் என்ற கணக்கில் அவர்களுக்கு 100 தேங்காய் விற்றால் உங்களுக்கு ஒரு தேங்காய்க்கு கிடைக்கும் லாபம் 5 ரூபாய் ஆகும். அப்போது 100 தேங்காயிற்கு 500 ரூபாய் லாபம் கிடைக்கும்.

இதே போல் அனைத்து இடத்திலும் ஒரே விலையாக விற்றாலும் சரி அதைவிட அதிக விலையில் விற்றாலும் சரி உங்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.

கொப்பரை தேங்காய் தொழில்

அனைத்து தேங்காய்களை விற்குமா என்ற கேள்வி இருக்கும்? அப்படி விற்காத தேங்காயை உடைத்து காயவைத்து கொப்பறை தேங்காய்களுக்கும் அதிக தேவை இருக்கிறது அதனை நீங்கள் இப்படியும் விற்பனை செய்யலாம்.

தேங்காய் நார்

 

அதுமட்டுமில்லாமல் குடோனில் சேர்த்து வைத்த தேங்காய் நாருக்கு நிறைய தேவைகள் அதிகம் உள்ளதால் அதனையும் நீங்கள் விற்பனை செய்யலாம். இதனுடைய தேவையானது வெளி மாவட்டத்திற்கு அதிகம் தேவைப்படும் அதிலும் உடுமேலைபேட்டை, சேலம் போன்ற ஊர்களின் அதிகம் இதனுடைய தேவை அதிகமாக இருக்கும் அதனால் இதையும் நீங்கள் விற்பனை செய்யலாம். எப்படி பார்த்தாலும் இந்த தொழிலை நஷ்டம் என்பது கிடையாது தயங்காமல் தொழிலை தொடங்கி முன்னேற்றம் அடையாளம்.

 

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil 2022
Advertisement