தேங்காய் நார் கயிறு தயாரிப்பு சிறந்த சுயதொழில்..!

‘‘இந்தியாவில் தயார் செய்யப்படும் தேங்காய் நார் கயிறுகளுக்கு வெளிநாடுகளில் ஏக டிமாண்ட். நம் நாட்டில் தென்னை மரங்கள் அதிக அளவில் இருப்பதால் இந்தத் தொழிலுக்கு நல்ல வாய்ப்பு.

நவீன இயந்திரங்கள் மூலம் செய்யப்படும் தேங்காய்நார் கயிறுகள் கட்டடங்களுக்கு சாரம் அமைக்கவும் கிணறுகளிலிருந்து தண்ணீர் இறைக்கவும் மட்டுமே முதலில் பயன்படுத்தப்பட்டன.

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக கட்டடங்களுக்கு சாரம் அமைக்க கயிறுகள் பயன்படுத்தப்படும் வழக்கம் குறைந்ததாலும், தேங்காய் நார், மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றப்பட்டு மேட்கள் போன்றவை தயார் செய்யப்பட, இந்தத் தொழிலுக்கான எதிர்காலம் பிரகாசமானதாக மாறிவிட்டது.

புதிதாக என்ன தொழில் செய்யலாம் 2023 – சிறு தொழில் பட்டியல் 2023..!

யூனிட் அமைப்பு:

இந்தத் தொழிலை தொடங்க நான்கு மாதங்கள் ஆகும். ஆண்டுக்கு சுமார் 140 டன். தேங்காய் நார் கயிறு யூனிட் தொடங்க 20 சென்ட் நிலம் தேவை. சொந்தமாக இடமிருந்தால் நல்லது.

அது இல்லாதவர்கள் குத்தகைக்கோ அல்லது வாடகைக்கோ எடுத்துக் கொள்ளலாம். தொழிற்சாலை, அலுவலகம், ஸ்டோர் ரூம் போன்றவைகளுக்காக 1,200 சதுர அடி ஷெட் தேவைப்படும்

தேங்காய் நார் – தயாரிக்கும் முறை:

காட்டன் நூல் தயாரிப்பு போன்றே தேங்காய் நார் கயிறுகளும் தயார் செய்யப்படுகிறது. முதலில் தேங்காய் மட்டைகளை தண்ணீர்விட்டு ஊறவைத்து,

இரண்டு, மூன்று மணி நேரம் கழித்து ‘வில்லோயிங்’ எனப்படும் மரத்திலான இயந்திரத்தில் இட்டால் கழிவுகள் அகன்று நார் கிடைக்கும்.

அதன் பிறகு அந்த நாரை ‘சில்வரிங்’ மற்றும் ஸ்பின்னிங் இயந்திரத்தில் கொடுத்து கயிறாகத் திரித்தால், விற்பனைக்கு தயார்.

மூலப்பொருட்கள்:

தேங்காய் நார்தான் இதன் முக்கிய மூலப்பொருள். மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், கோவை மாவட்டங்களில் தென்னை மரங்கள் அதிகளவில் இருப்பதால் அங்கிருந்து தேங்காய் மட்டையை வாங்கிக் கொள்ளலாம்.

மின்சாரம்:

இந்த தொழிலுக்கு 6.50 ஹெச்.பி(hp) மின்சாரம் தேவைப்படும். தேங்காய் நார் கயிறு தயாரிப்பு குடிசைத் தொழிலின் கீழ் வருவதால் மின்சாரத்தை அரசு சலுகைக் கட்டணத்தில் வழங்குகிறது.

பெண்கள் வீட்டில் இருந்து என்ன மாதிரியான சுயதொழில் செய்யலாம்..!

வேலையாட்கள்:

ஒரு ஷிப்ட் வேலை பார்க்க ஒன்பது திறமையான தொழிலாளர்கள் தேவை. இரண்டு ஷிப்ட் என்று வரும்போது 18 வேலையாட்கள் தேவை. மேலும் உற்பத்தி மற்றும் பராமரிப்பு வேலைகளுக்கு ஒரு சூப்பர்வைசர் தேவை.

இதில் 90 சதவிகித வேலைகள் பெண் தொழிலாளர்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. விவசாயக் கூலித் தொழிலாளர்களை இந்தத் தொழிலில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இயந்திரங்களை எப்படி இயக்குவது என்பதை இயந்திரங்களை சப்ளை செய்யும் நிறுவனமே தொழிலாளர்களுக்கு ஒரு வார காலத்தில் கற்றுத் தந்துவிடும்.

தண்ணீர்:

தினமும் 1,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். அதற்கான தண்ணீரை ஆழ்குழாய் கிணற்றின் மூலம் எடுத்துக் கொள்வது நல்லது. எனவே, நல்ல தண்ணீர் வசதி இருக்கும் இடமாகப் பார்த்து யூனிட்டை தொடங்குவது அவசியம்.

இந்தத் தொழில் மூலம் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஆகையால் தயாரித்த பொருளை எவ்வித பிரச்னையும் இல்லாமல் சப்ளை செய்யலாம்.

 தேங்காய் நார் – மூலதனம்:

முதல் வருட செயல்பாட்டு மூலதனமாக 1.71 லட்ச ரூபாய் தேவைப்படும். இது 15 நாட்களுக்கான மூலப் பொருட்கள், ஏழு நாட்களுக்கான முடிக்கப்பட்ட ஸ்டாக்குகள் மற்றும் 15 நாட்கள் விற்ற சரக்குக்கான வரவேண்டிய தொகை ஆகியவற்றை உள்ளடக்கிய தொகையாகும்.

எதிர்பாராத செலவு:

எவ்வளவுதான் பட்ஜெட் போட்டு செலவு செய்தாலும் துண்டு விழவே செய்யும். அதுபோல இந்த தேங்காய் நார் பிஸினஸில் திடீர் செலவுகளும் வரும்.

கட்டட வேலைகள், இயந்திரங்கள், மின்சாரம், அலுவலக உபகரணங்கள் மற்றும் ஃபர்னிச்சர் போன்ற விதங்களில் 5 சதவிகிதம் அதாவது சுமார் 39 ஆயிரம் ரூபாய் வரை ஏற்படக்கூடும்.

ரிஸ்க்:

இத்தொழிலுக்குத் தேவையான மூலப்பொருளான தேங்காய் மட்டை கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படலாம். அப்போது அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைமை வரும்.

அதனால் நம் லாபம் குறையலாம். போட்டி அதிகரித்து வருவதால், பொருட்களின் விலை குறையவும் வாய்ப்புண்டு.

சந்தை வாய்ப்பு:

நாம் தயார் செய்யும் தேங்காய்நார் கயிறை கேரளாவில் இருக்கும் தேங்காய்நார் பொருட்கள் தயாரிப்பு யூனிட்களுக்கு விற்பனை செய்யலாம்.

தவிர, தமிழ்நாட்டில் சேலம், பொள்ளாச்சி, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் தேங்காய்நார் கயிறுகளை வாங்க நிறைய வியாபாரிகள் இருக்கின்றனர்.

சுயதொழில் பேப்பர் கவர் தயாரிப்பு..! சூப்பர் வருமானம்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில்  போன்ற புதிய சென்னை அமேசான் நிறுவனத்தில் வேலைதொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> தொழில் பட்டியல் 2023