High Demand Products Business Ideas
சுயதொழில் என்றால் அதில் உள்ள வகைகளை நாம் கணக்கிடவே முடியாது. ஏனென்றால் அதில் நிறைய வகைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதனுடைய வகைகள் அதிகரிப்பதற்கு ஏற்றவாறு மக்களும் அவர்களுக்கு ஏற்ற மாதிரியான ஒரு தொழிலை செய்து அதன் மூலம் நல்ல நிலைமைக்கு வந்து விடுகின்றார். அதுமட்டும் இல்லாமல் நாம் மாத சம்பளத்திற்கு வேலை பார்ப்பதை ஒப்பிட்டு பார்க்கும் போது சுயதொழில் தான் நல்ல லாபம் மற்றும் வருமானம் இரண்டும் கிடைக்கிறது. சரி இவற்றை எல்லாம் யோசித்து சுயதொழிலை தொடங்கலாம் என்றாலும் அந்த தொழில் எங்கு எவ்வளவு முதலீடு செய்து தொடங்குவது என்ற கேள்வி அனைவருக்கும் வருகிறது. ஆகையால் உங்களுடய கேள்விகள் அனைத்திற்கும் பதில் கிடைப்பதற்கு இந்த பதிவு ஒன்று மட்டும் போதும். மேலும் இன்றைய பதிவில் மக்களுக்கு அதிக அளவு தேவைப்படும் ஒரு பொருளை வைத்து எப்படி பல முறையில் தொழில் செய்து அதிகமான வருமானம் பெறுவது என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழில்:
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய Coconut Products Business பற்றி தான் பார்க்கப்போகிறோம். இந்த தொழிலை நிறைய பேர் செய்து வந்தாலும் கூட அதில் எப்படி மற்றவர்களை விட அதிகமான வருமானம் மற்றும் லாபம் இரண்டினையும் ஒன்றாக பெறுவது என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
மேலும் இந்த தொழிலுக்கான டிமாண்ட் பார்த்தால் உங்களுக்கே தெரியும். ஏனென்றால் ஒரு நாளைக்கு உங்களுடைய வீட்டிலேயே எத்தனை தேங்காய் உபயோகப்படுத்துகின்றீர்கள்.
முதலீடு மற்றும் மூலப்பொருள்:
இந்த தொழிலுக்கான மூலப்பொருள் என்று பார்த்தால் வெறும் தேங்காய் மட்டும் தான். ஆகையால் நல்ல கொஞ்சம் பெரிய தேங்கையாக இருந்தால் போதும்.
மேலும் நீங்கள் இந்த தொழிலை தொடங்குவதற்கு முதலீடு என்று பார்த்தால் தோராயமாக 10,000 ரூபாய் போதும். அதன் பிறகு உங்களுடைய வருமானத்திற்கு ஏற்றவாறு முதலீடு அதிகரித்து காணப்படும்.
தொழில் தொடங்க தேவையான இடம்:
நீங்கள் Coconut Products Business-ஐ தொடங்க வேண்டும் ஒரு நடுத்தரமான அளவில் உள்ள ஒரு கடை தேவைப்படும். இந்த கடையினை நீங்கள் மக்கல் அதிக நடமாட்டம் உள்ள இடத்தில் வைப்பது மிகவும் அவசியம்.
இதையும் படியுங்கள்⇒ யாரும் நினைத்து பார்க்க முடியாது அளவிற்கு வருமானம் தரக்கூடிய இந்த தொழிலை சும்மா செஞ்சு பாருங்கள்..!
How to Start Coconut Business:
முதலில் நல்ல மற்றும் பெரிய அளவில் உள்ள தேங்காயினை மொத்தமாக வாங்கி கொள்ளவும். இதனை நீங்கள் நிறைய தென்னை மரம் வைத்து இருப்பவர்களிடம் நேரில் சென்று பேசி தேங்காயினை வாங்குனீர்கள் என்றால் விலை கொஞ்சம் குறைவாக இருக்கும். மேலும் உங்களுக்கு வாங்குவதற்கு ஒவ்வொரு முறையும் அலைச்சல் இருக்காது.
அதுபோல நீங்கள் இந்த தொழிலை மூன்று முறையில் செய்து வருமானம் பெறலாம் எப்படி என்றால்.
Type- 1
நீங்கள் மொத்தமாக வாங்கி வைத்துள்ள தேங்காயினை ஹோட்டல், பெரிய மற்றும் சிறிய மளிகை கடை, ஷாப்பிங் மால், காய்கறி கடை, பூஜைக்கு சாமான் விற்கும் கடை மற்றும் Restaurants ஆகிய இடங்களுக்கு தேவைப்படும் தேங்காயினை ஆர்டர் முறையில் பேசி நீங்கள் விற்பனை செய்யலாம்.
Type- 2
இரண்டாவது Type என்னவென்றால் தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் இடத்திற்கு கட்டயமாக தேங்காய் தான் முதல் மூலப்பொருளாக இருக்கும். ஆகையால் அங்கும் நீங்கள் ஆர்டர் எடுத்து விற்பனை செய்யலாம்.
Type- 3
கடைசியாக நீங்களே தேங்காய் கடை வைத்து ஒரே ஒரு நிரந்தமான இடத்தில் மட்டும் விற்பனை செய்யலாம்.
ஆகையால் உங்களுக்கு எது மிகவும் ஏற்றது போல உள்ளதோ அதனை நீங்கள் செய்து கொள்ளலாம்.
இதையும் படியுங்கள்⇒ தலைமுறை தலைமுறையாக நஷ்டம் இல்லாத தொழில் என்றால் அது இதாங்க..!
வருமானம்:
நீங்கள் ஒரு நாளைக்கு விற்பனை செய்யும் தேங்காயின் அளவை பொறுத்து அதனுடைய வருமானம் என்பது இருக்கும். உங்களுடைய வருமானம் அதிகரிக்க அதிகரிக்க லாபமும் வந்து கொண்டே இருக்கும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |