கால் மிதியடி தயாரிப்பு தொழில் முழு விளக்கம்..!
புதிதாக தொழில் துவங்க நினைக்கும் நண்பர்களுக்கு ஒரு சிறந்த சுயதொழில் வாய்ப்பு. அதாவது தேங்காய் நாரை பயன்படுத்தி தயாரிக்கக்கூடிய கயர் கால்மிதியடி.
இது சுற்றுசூழலுக்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது, மேலும் மக்களிடமும் அதிக வரவேற்பு உள்ளது, என்பதால் புதிதாக என்ன தொழில் செய்யலாம் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த சுயதொழில். எனவே தயங்காமல் இந்த சுயதொழிலை துவங்கலாம்.
தேங்காய் நார் கயிறு தயாரிப்பு சிறந்த சுயதொழில்..! |
சரிவாங்க தேங்காய் நாரை பயன்படுத்தி கால்மிதியடி தயாரிக்கும் முறையை பற்றி இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க..!
இந்த தேங்காய் நாரில் கால்மிதியடி தயாரிப்பு தொழில் பொறுத்தவரை குறைந்த விலையில் கைகளால் இயக்கக்கூடிய மேனுவல் இயந்திரத்திலும் மேட்களை தயார் செய்து விற்பனை செய்யலாம்.
ஆட்டோமேட்டிக் இயந்திரம் மூலம் 115 கிலோ தேங்காய் நாரிலிருந்து ஒரு நாளில் 100 கிலோ கயிறு தயாரிக்க முடியும். அப்படி கயிறு தயாரிப்பவர்களிடமிருந்து இந்தக் கயிறை வாங்கிச் சென்று கைகளால் இயக்கக்கூடிய இயந்திரம் மூலம் நாம் மேட் தயாரிக்கலாம்.
இனி கால்மிதியடி தயாரிப்பின் சிறப்பம்சங்கள், திட்ட மதிப்பீடு உற்பத்தித் திறன் மற்றும் லாபம் என்ன என்பதை பற்றியும் சுயதொழிலுக்கான வழிகாட்டுதலையும் பார்ப்போம் வாங்க…
கால்மிதியடி தயாரிப்பு தொழில்
கால்மிதியடி தயாரிப்பு தொழில் – சிறப்பம்சங்கள் :
பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் டோர் மேட்களுக்கு மாற்றாக தேங்காய் நார் டோர் மேட்கள் அமையும். துணிகளால் தயாரிக்கப்படும் டோர் மேட்கள் சீக்கிரமே கிழிந்துவிடும். அதே சமயம் எளிதில் மக்கும் தன்மையுடையதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இருக்காது.
குறைந்த விலையில் தயாரிக்க முடியும். இதன் மூலப்பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது. வருங்காலங்களில் எல்லா பொருட்களும் உடல் நலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி பயன்படுத்தப்படும் நிலையில் இதன் தேவை அதிகம்.
நிரந்தர வருமானம் தரக்கூடிய தொழில்.இந்தத் தொழிலை அரசு மானியத்துடன் கடன் பெற்று தொடங்கலாம். இது ஒரு 100% இயற்கை தயாரிப்பு என்பதால், உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
மேட்களில் வசம்புக் கலவை சேர்த்தால் கால் வலி வராது. உற்பத்தியில் ரசாயனங்கள் சேர்க்கப்படுவதில்லை. முற்றிலும் சுற்றுச்சூழலுக்கு கேடுவிளைவிக்காதது.
மத்திய கயிறு வாரியத்திலிருந்து மேட் தயாரிப்புக்கு இலவசப் பயிற்சி வழங்கப்படுகிறது. இதை சுயதொழிலாக தொடங்கும்பட்சத்தில் மானியமும் வழங்கப்படுகிறது.
வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஏற்ற சுயதொழில்..! |
முதலீடு:
மூலப்பொருளான தேங்காய் நார் கயிறு ஒரு நாளைக்கு 100 கிலோ தேவைப்படும். ஒரு மாதத்திற்கு 25 வேலை நாட்கள் என எடுத்துக்கொண்டால் 2500 கிலோ தேவைப்படும்.
ஒரு கிலோ தேங்காய் நார் கயிற்றின் விலை ரூ.50 என்றால், ஒரு மாதத்திற்கு 2500 கிலோ X ரூ.50 = ரூ.1,25,000 தேவைப்படும்.
மொத்தம் – ரூ.2.75 லட்சம்.
தேங்காய் நார் மேட் தயாரிக்கும் முறை:
மேனுவல் மெஷினில் மேட் தயாரிப்பதும் சுலபம்தான். கைகளால் இயக்கப்படும் ஓர் இயந்திரத்தில் 4 பேர் வேலை செய்யலாம்.
2 பேர் பினிஷிங் வேலை செய்ய வேண்டும். கயிற்றை இயந்திரத்தின் ஒரு பகுதியில் கொடுத்தால் பின்னப்பட்டு மேட்டாக தயாராகி வெளியே வரும்.
இவ்வாறு 4 பேரும் சேர்ந்து ஒரு நாளில் 100 கிலோ கயிற்றில் 200 மேட்டுகள் தயார் செய்ய முடியும்.
உற்பத்தி திறன் மற்றும் விற்பனை வரவு:
இந்த கால் மிதியடி தயாரிப்பு தொழில் பொறுத்தவரை ஒரு மாதத்திற்கான மூலப்பொருளான 2500 கிலோவிலிருந்து தோராயமாக 5000 மேட்கள் தயார் செய்ய முடியும்.
சந்தையில் மொத்த விலைக்கு ஒரு மேட் ரூ.80 முதல் 90 என விலை நிர்ணயித்து விற்பனை செய்யலாம். நாம் ஒரு மேட்டின் விலை 90 ரூபாய் என எடுத்துக்கொள்வோம். அப்படியானால் ரூபாய் 4,50,000 கிடைக்க வாய்ப்புள்ளது.
அதே சமயம் மார்க்கெட்டிங் செய்வதைப் பொறுத்து நமது விற்பனை லாப வரம்பு அதிகமாகவும் வாய்ப்பு உண்டு. ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்பது இத்தொழிலின் சிறப்பு.
குறைந்த முதலீட்டில் செய்ய கூடிய பட்டன் தயாரிப்பு தொழில்..! |
இதுபோன்ற தயாரிப்பு தொழில், சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், சிறுதொழில், வியாபாரம் விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | தயாரிப்பு தொழில் |