காயர் பித்து தயாரிப்பு தொழில் பற்றிய ஆலோசனை..!
நீங்கள் புதிய ஏற்றுமதி தொழில் துவங்க ஆர்வம் உள்ளவரா..?
என்ன தொழில் செய்யலாம் என சிந்தித்து கொண்டிருப்பவரா..?
உங்களுக்கு ஓர் நற்செய்தி…
அதாவது தேங்காய் மட்டையில் இருந்து தயாரிக்கப்படும், காயர் பித்து ஏற்றுமதி தொழில் மிகவும் சிறந்து விளங்குகிறது. எனவே இந்த தயாரிப்பு தொழில் பற்றிய விவரங்களை இந்த பகுதியில் நாம் படித்தறிவோம் வாங்க.
![]() |
தயாரிப்பு தொழில் – காயர் பித்து!
தேங்காய் மட்டையிலிருந்து நார் பிரித்தெடுக்கும்போது உதிரும் துகள்கள் காயர் பித்து என்று அழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் மலை மலையாகக் குவிந்த இந்தப் பித்துக்களை எப்படி அழிப்பது என்று தெரியாமல் பெரிய களத்தில் தீ வைத்துக் கொளுத்தினார்கள்.
பின்னர் அதனால் கிடைக்கும் பலன்களை அறிந்தபிறகே அதையும் பணமாக்க முடியும் என்று தெரிய வந்தது. பின்னரே அவற்றை ஏற்றுமதி செய்தார்கள்.
இந்தப் பித்துக்களை பெரிய களத்தில் நன்றாக காய வைத்து, தண்ணீரால் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
அதிலுள்ள உப்பு மற்றும் PH அளவு ஆகிய அமிலத்தன்மையைக் குறைக்க வேண்டும். பின்னர் இவை இரண்டு அளவுகளில் கட்டிகளாக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இவை நிறைய தண்ணீரை உறிஞ்சி தனக்குள் வைத்துக்கொள்ளும் என்பதால், மண்ணில்லா விவசாயம் செய்ய பெரிதும் உதவுகின்றன.
தயாரிப்பு தொழில் – கவனிக்க வேண்டியவை!
தேங்காய் மட்டைகளை வாங்கும்போது இறக்குமதியாளரின் தேவைக்கேற்ப பார்த்து வாங்க வேண்டும். அதற்கு மட்டையின் அளவு மற்றும் நிறம் குறித்து பார்க்க வேண்டியிருக்கும்.மேலும், பிரித்தெடுக்கப்படும் நார் மற்றும் பித்தில் உப்பின் அளவு, PH அளவு ஆகியவை வரையறைக்குள் இருக்க வேண்டும்.
தயாரிப்பு தொழில் – மானியமும், வரி விலக்கும்!
தேங்காய் நார் உற்பத்தி செய்யும் தொழில் தொடங்க காயர் போர்டிலிருந்து மானியம் வழங்கப்படுகிறது. மேலும் தேங்காய் நார் மற்றும் அதன் மதிப்பு கூட்டுப் பொருட்களின் ஏற்றுமதிக்கு விற்பனை வரி இல்லை.
உலகளவில் பல்வேறு தேவைகளுக்கு அவசியமாக உள்ள தேங்காய் நார் மற்றும் அதன் மதிப்புக் கூட்டுப் பொருட்களை ஏற்றுமதி செய்து லாபம் பார்க்க அனைவருமே முயற்சிக்கலாமே!
தேங்காய் உரித்த பின் கிடைக்கும் மட்டைகளை, இயந்திரத்தில் அரைத்தால், மஞ்சி கிடைக்கும். அதைத் திரித்து தான் கயிறு உற்பத்தி செய்வர்.
மட்டைகளை அரைக்கும்போது, கழிவுத் துகள்களும் வெளியாகும். மாடித் தோட்டம், நர்சரி, மண்ணில்லா விவசாயத்திற்கு, தென்னை நார்க்கழிவு பயன்படுகிறது.
அதற்கான இயந்திரங்களை வாங்கி, கட்டியாக்கி விற்பனை செய்யலாம். இப்போது, ‘காயர் பித்’ தயாரிக்கும் தொழிற்சாலைகள் பெருகி வருவதுடன், விற்பனை வாய்ப்பும் அதிகரித்துள்ளது.
இதை அமைக்க, வங்கிக் கடனும் கிடைக்கிறது. மாதத்தில், 20 நாட்களுக்குத் தான் வேலை இருக்கும்.
நன்றாக வெயில் அடிக்கும் ஆறு மாதம் தான், தென்னை நார்க்கட்டியை தயாரிக்க முடியும். தற்போது தினமும், 10 டன் அளவுக்கு, காயர் பித், அதாவது, 2,000 கட்டிகள் உற்பத்தி செய்யலாம்.
ஒரு காயர் பித், 70 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். ஏஜன்ட் கமிஷன், போக்குவரத்து, வங்கித் தவணை, கரன்ட் செலவு போக, தினமும், 8,000 ரூபாய் லாபமாக நிற்கிறது.
வெயில் காலத்தில் உற்பத்தி அதிகமாக இருக்கும். மழைக் காலத்தில் காய வைக்க முடியாது என்பதால், உற்பத்தி இருக்காது. இப்போது, மழைக் காலங்களிலும் உலர் கலன் பயன்படுத்தி காய வைக்கும் தொழில்நுட்பத்தில் உற்பத்தி செய்யலாம்.
![]() |
இந்த காயர் பித் தயாரிப்பு தொழில் சிறப்பு அம்சங்கள்:
வெளிநாடுகளில் அதிகம் விவசாயம் செய்ய பயன்படுகின்றது.
காளான் வளர்ப்பதற்கு அதிகம் பயன்படுகிறது.
நகரங்களிலும் இப்போது அதிகம் மாடித்தோட்டம் மூலம் விவசாயம் செய்வதினால் இவற்றின் தேவை அதிகமாகவே உள்ளது.
தயாரிப்பு தொழில் – முதலீடு:
காயர் பித்து தயார் செய்வதற்கு இயந்திரம் தேவை. அந்த இயந்திரத்தின் விலை 7 லட்சம் மற்றும் இதறசெலவுகள் 3 லட்சம் குறிப்பாக இந்த தயாரிப்பு தொழில் துவங்க அதிகபட்சம் 10 லட்சம் தேவைப்படும்.
தயாரிப்பு தொழில் – இடவசதி:
அதிகமாக தென்னை மரங்கள் உள்ள இடங்களில் ஒரு சிறிய குடோன் அமைத்து கொண்டு இந்த தொழிலை துவங்கலாம்.
![]() |
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் (Siru Tholil Ideas in Tamil) போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2020 |