கவரிங் நகை தயாரிப்பு தொழில் (Business ideas in tamil)..!
சுயமாக வீட்டில் இருந்த படியே தொழில் துவங்க வேண்டுமா??? அப்படி என்றால் கவரின் செயின் வியாபாரம் செய்யலாமே. நாம் தயாரிக்கும் கவரிங் செயினை கோல்டு கவரிங் கடைக்காரர்கள் ஆர்டர் செய்து வாங்கிக்கொள்வார்கள். இப்போதேல்லாம் சாதாரணமாக பெண்கள் அனைத்து விழாக்காலங்களில் அதிகமாக கவரின் செயினை அணிந்து கொள்கின்றனர்.
இதனால் நாம் கவரிங் நகை செய்யும் கடைக்கே நேராக வந்து கோல்டு கவரிங் கடைக்காரர்கள் வாங்கி செல்கின்றனர். எனவே இந்த சுயதொழில் துவங்க நினைப்பவர்கள் தயக்கம் இல்லாமல் இந்த கவரிங் செயின் தயாரிப்பு தொழில் செய்யலாம்.
இதையும் படிக்கவும் ![]() |
பேக்கிங் கிளிப் தயாரிப்பு..! லாபம் தரும் சிறு தொழில் |
சரி வாங்க இந்த பகுதில் கவரிங் செயின் தயாரிப்பு தொழில் பற்றி தெளிவாக படித்தறிவோம்..!
கவரிங் செயின் தயாரிப்பு தொழில் பயிற்சி (Business ideas in tamil):
கவரிங் நகை தயாரிப்பு தொழில் துவங்க நினைப்பவர்கள் கம்பி முறுக்கு, கலவை பூச்சு, செயின் இணைப்புக்கு என தனி தனியாக பயிற்சி பெற வேண்டும். இந்த அனைத்து பயிற்சிகளையும் குறைந்தது 6 மாதங்களில் பழகிக்கொள்ளலாம். முழுமையாக கவரிங் நகை தயாரிப்பில் ஈடுபடாவிட்டாலும், குறிப்பிட்ட ஒரு ஜாப் ஒர்க் செய்து கொடுத்தும் சம்பாதிக்கலாம்.
சுயதொழில் – முதலீடு :
இந்த கவரிங் நகை(covering jewellery)தயாரிப்பு தொழில் துவங்குவதற்கு முதலீடு செலவாக ரூபாய் 26,000/- ஆகும். ஒரு மாத உற்பத்தி செலவுக்கு ரூபாய் 80,000/- மொத்தமாக முதலீடு செலவாக ரூபாய் 1,06,000/- தேவைப்படும்.
சுயதொழில் முதலீடு :
ஒரு கவரிங் செயின் (24 இஞ்ச்) உற்பத்தி செய்ய பொருட்கள் மற்றும் கூலிச்செலவு உள்பட ரூ.52 செலவாகிறது.
ஒரு நாளில் 5 பேர் மூலம் 50 செயின் தயாரிக்கலாம். ஒரு நாள் உற்பத்தி செலவு ரூ.2,600. 25 நாளில் 1250 செயின் தயாரிக்கலாம். மொத்த உற்பத்தி செலவு ரூ.65,000/-.
உற்பத்தி பொருட்கள் கிடைக்கும் இடங்கள் :
இந்த தயாரிப்பு தொழில் பொறுத்த வரை இயந்திரங்களை லேத்களில் ஆர்டர் கொடுத்தால் வடிவமைத்து தருவார்கள். அல்லது ரெடிமேடாக கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கிடைக்கிறது.
உற்பத்தி பொருட்கள் பெரும்பாலானவை சிறு நகரங்களில் கூட கிடைக்கிறது. சில பொருட்கள் மட்டும் கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் பெற வேண்டும்.
இதையும் படிக்கவும் ![]() |
மாதம் Rs.50000 to Rs. 1 Lakh தரக்கூடிய மிக சிறந்த 3 தொழில்..! |
கவரிங் செயின் தயாரிப்பது எப்படி???
கவரிங் செயின் தயாரிக்கும் முறை (Gold covering jewellery business)
நூல்இழை போல உள்ள காப்பர் கம்பியை புளோயிங் மெஷினில் மாட்டி சுற்ற வேண்டும்.
காப்பர் கம்பி ஸ்பிரிங் (முறுக்கு) போல வரும். அதை பிரஸ் மெஷினில் பொருத்தி, ஸ்பிரிங்கில் உள்ள ஒவ்வொரு வளையத்தையும் தனித்தனியாக துண்டாக்கி எடுக்க வேண்டும்.
வளையத்தின் துளை வழியாக ‘சென்ட்ரிங் நூலிழை கம்பி’யை கொடுத்து கயிறு போல முறுக்கினால் செயின் வரும்.
அதை இரும்பு பலகையில் வைத்து தேய்த்தால் இறுக்கமடையும் பின்னர் அதை தொங்கவிட்டு, ஏற்கனவே கலக்கப்பட்ட வெள்ளி ஈயப் பொடி, பித்தளை பொடி, வெங்கார பொடி கலவையை செயினில் உள்ள இடைவெளிகளில் பிரஷ் மூலம் தடவ வேண்டும்.
கேஸ் வெல்டிங் செய்வது போல் தீயில் பழுக்க வைத்தால் செயின் முழுமையடையும். பின்னர் அதன் மீது தங்கமுலாம் பூசி, கொக்கி மாட்டினால் கவரிங் செயின் ரெடி.
கவரிங் நகை தயாரிப்பு தொழில் (Gold covering jewellery business)தேவைப்படும் பொருட்கள் :
காப்பர் அல்லது கலாய் கம்பி(ஜிஐ வயரில் உள்ளது), சென்ட்ரிங் கம்பி(சன்னமானது), வெள்ளி ஈய பொடி, பித்தளை மிக்சிங் பொடி , வெங்காரம் பொடி, தங்க முலாம் பூச்சு கலவை, வீட்டில் ஒரு சின்ன அறை போதும்.
கவரிங் செயின் தயாரிப்பு தொழில் (Gold covering jewellery business)இயந்திரங்கள் :
புளோயிங் மெஷின் (ரூ.2500), பிரஸ் மெஷின்(ரூ.15 ஆயிரம்.), இரும்பு பலகை (ரூ.1500), கேஸ் சிலிண்டர் இணைப்பு ரூ.5000. டை, டை கத்தி ரூ.2000.
சுயதொழில் – வருவாய்
இந்த தயாரிப்பு தொழில் பொறுத்த வரை ஒரு செயின் ரூ.72 வரை விற்பனையாகிறது. மாதவருவாய் ரூ.90,000. லாபம் ரூ.25 ஆயிரம் வரை கிடைக்கும்.
சுயதொழில் சந்தை வாய்ப்பு:
கவரிங் செயின் தயாரிப்பு தொழில் பொறுத்த வரை பெண்களிடம் அதிக வரவேற்புகள் உள்ளது என்பதால் அனைத்து கவரிங் கடைகளுக்கும் சென்று விற்பனை செய்யலாம்.
இருப்பினும் கவரிங் நகை தயாரிப்பு தொழில் பொறுத்த வரை அக்டோபர் முதல் ஏப்ரல் வரை சுபகாரியங்கள் அதிகளவில் நடைபெறுவதால், இக்காலங்களில் கவரிங் செயின் விற்பனை அதிகம் இருக்கும். அதை கவனத்தில் கொண்டு உற்பத்தியை அதிகரிப்பது முக்கியம்.
இதையும் படிக்கவும் ![]() |
தேங்காய் நார் கயிறு தயாரிப்பு சிறந்த சுயதொழில்..! |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | siru tholil ideas in tamil |