வீட்டில் இருந்து லாபம் பெற கைவினை பொருள் பிசினஸ்..! Craft Work From Home..!
நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் வீட்டில் இருந்து கைவினை பொருள்கள் மூலம் அதிகம் லாபம் பெறுவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம். வீட்டில் இருக்கும் பெண்கள் விதவிதமான கைவினை பொருள்கள் செய்து அழகு பார்ப்பார்கள். இதை விற்றால் லாபம் பெறலாம் என்பது பற்றி நிறைய பேருக்கு தெரியவில்லை. வீட்டில் இருந்தபடியே என்னெல்லாம் கைவினை பொருள்கள்(Craft Work Ideas) செய்யலாம் என்ற முழு விவரத்தை படித்து தெரிந்து கொள்ளுவோம் வாங்க..!
![]() |
Craft Business / கைத்தொழில் வகைகள்:
நீங்கள் ஏதாவது கைவினை பொருட்கள் செய்ததுண்டா? உதாரணமாக மண்பாண்டத்தில் செய்யப்பட்ட பொருட்கள், அலங்கார கலை அல்லது இன்னும் பல கைவினை பொருட்கள் வீட்டில் செய்து வைத்திருந்தால் அந்த பொருட்களை ஆன்லைன் மூலமாகவோ அல்லது பெரிய டிபார்ட்மென்டல் ஸ்டோரிலோ விற்பனை செய்யலாம்.
கைவினை பொருட்கள் செய்வதன் மூலம் குறைந்த செலவில் நிறைய லாபம் பெறலாம். நீங்கள் செய்யும் கைவினை பொருட்களை கண்காட்சிகள் மூலம் விற்பனை செய்து அதிக லாபம் பெறலாம்.
Jewellery Making Business:
மணிகளால் ஆன நகைகளையே மக்கள் பெரிதும் விரும்புகின்றனர் அதுமட்டுமின்றி நகைகளில் இந்த வகை மட்டும்மில்லாமல் நிறைய வகை நகைகளை நீங்கள் விற்பனை செய்யலாம்.
மற்ற தொழில்களை போன்றே இதிலும் பெரிய கடைகள் அல்லது டிபார்ட்மென்டல் ஸ்டோர்ஸ் உட்பட கைவினை கண்காட்சிகள், சில்லறை விற்பனையாளர்கள்(retail shops) மற்றும் ஆன்லைன் வழியாக மற்றும் e-commerce போன்ற இணையதளங்கள் மூலமாக விற்பனை செய்யலாம்.
இந்த கைவினை பொருட்களை மக்கள் பெரிதும் விரும்புவதற்கு காரணம் அதனுடைய தனித்துவமே ஆகும்.
![]() |
Home Decorating Craft Business:
பிரபலமான தொலைக்காட்சிகளில் இதுபோன்ற வீடு அலங்கரித்தல் மற்றும் உட்புற வடிவமைப்பு பற்றிய விவரங்களை மக்கள் பார்த்து அவர்களும் தங்கள் வீட்டினை அலங்கரிக்க நினைக்கிறார்கள்.
சிலரின் பிரச்சனை என்னவென்றால் வீட்டின் அமைப்பு மற்றும் அதன் வண்ணங்களை பற்றிய புரிதல் இல்லாமலும், அந்த படைப்பின் நோக்கம் என்னவென்றும் புரியாமலும் இந்த வீடு அலங்கார தொழிலை செய்யமுடியாது.
Photography Business:
நீங்கள் புகைபடம் எடுப்பதில் ஆர்வம் உள்ளவரா? ஆர்வம் உள்ளவர்கள் என்றால் இந்த தொழில் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். photography மூலம் நிறைய வழிகளில் நாம் பணம் சம்பாதிக்கலாம்.
ஒருவழி என்னவென்றால் மக்களுக்காக உருவப்பட(portrait services) சேவைகள் அல்லது செல்ல பிராணிகளுக்கான புகைப்படம் எடுப்பது மூலமாகவும் சம்பாதிக்கலாம்.
அடுத்ததாக ஏதேனும் நிகழ்வுகள் அல்லது திருமண நிகழ்ச்சிகள் போன்ற நிறைய நிகழ்வுகளில் இந்த photography தொழிலை தாராளமாய் செய்யலாம்.
![]() |
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |