கப் சாம்பிராணி தயாரிப்பு தொழில் | Cup Sambrani Making Business in Tamil | சாம்பிராணி தயாரிப்பு
வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் கப் சாம்பிராணி தயாரிப்பு தொழில் (Cup Sambrani Making Business in Tamil) பற்றி பின்வருமாறு விவரித்துள்ளோம். புதிதாக தொழில் தொடங்க விரும்பும் அனைவர்க்கும் அன்பான வணக்கம். இன்று நாம் குறைந்த முதலீட்டில் நல்ல வருமானம் தரக்கூடிய ஒரு தொழில் பற்றி தான் பார்க்க போகிறோம். அதாவது பூஜைக்கு அதிகம் பயன்படுத்தப்படும் கப் சாம்பிராணி தயாரிப்பு தொழில் பற்றி தான் பார்க்க போகிறோம். இது ஒரு லாபகரமான தொழில் என்று சொல்லலாம். சரி வாங்க இந்த தொழிலை எப்படி ஆரம்பிக்கலாம். எவ்வளவு முதலீடு தேவைப்படும், எவ்வளவு வருமானம் கிடைக்கும், எவ்வளவு, என்னென்ன மூலப்பொருட்கள் தேவைப்படும் என்பதை பற்றி இன்றைய பதிவில் நாம் பார்க்கலாம் வாங்க.
இடம்:
கப் சாம்பிராணி தயாரிக்க நீங்கள் தனியாக இடம் அமைக்க வேண்டும் என்ற எந்த ஒரு அவசியமும் இல்லை. உங்களில் வீட்டில் ஒரு சிறிய அறை இருந்தால் போதும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
மாதம் லட்சம் கணக்கில் லாபம் தரக்கூடிய சிறந்த 3 தொழில்
மூலப்பொருட்கள்:
- மரத்தூள்
- கரித்தூள்
- Jigat Powder
- சாம்பிராணி
- வாசனை திரவியம்
- பேக்கிங் பாக்ஸ் அல்லது பேக்கிங் கவர் இந்த பொருட்கள் அனைத்தும் தேவைப்படும்.
இயந்திரம்:
கப் சாம்பிராணி தயார் செய்யும் இயந்திரத்தின் விலை 18000 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த இயந்திரம் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரில் கிடைக்கிறது உங்களுக்கு விருப்பம் இருந்தால் ஆன்லைனில் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளுங்கள்.
முதலீடு:
இந்த தொழிலை தொடங்க உங்களிடம் குறைந்தபட்சம் 30 ஆயிரம் இருந்தாலே போதும் மிக எளிதாக நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே இந்த தொழிலை ஆரம்பிக்கலாம்.
தயாரிக்கும் முறை:
மேல் கூறப்பட்டுள்ள மூலப்பொருட்களை சரியான அளவில் கலந்து இயந்திரத்தில் கலந்த கலவையை போட்டு இரண்டு முறை அழுத்தி எடுத்தோம் என்றால் என்றால் கப் தயாராகிவிடும், பின் அந்த கப்பில் சாம்பிராணியை வைத்து செட் செய்யவும். அவ்வளவு தான் கப் சாம்பிராணி தயார். இதனை ஒரு டப்பாவில் 12 என்று பேக்கிங் செய்து விற்பனை செய்யலாம்.
உற்பத்தி:
ஒரு கிலோ கலவையில் 120 கப் சம்பிராணிகளை உற்பத்தி செய்யலாம். ஒரு கப் சாம்பிராணி உற்பத்திக்கு 1.50 ரூபாய் தான் செலவாகும். ஆனால் ஒரு கப் சாம்பிராணியை நீங்கள் 5 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். 12 எண்ணிக்கை உள்ள கப் சாம்பிராணியை நீங்கள் 60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யலாம்.
வருமானம்:
ஒரு நாளுக்கு 500 கப் சாம்பிராணியை உற்பத்தி செய்து விற்பனை செய்தால் 2500 ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பெண்கள் வீட்டில் இருந்து மாதம் 20,000 சம்பாதிக்கலாம் இந்த தொழிலில்..!
சந்தை வாய்ப்பு:
நீங்கள் தயார் செய்த கப் சாம்பிராணியை மளிகை கடை, பெட்டி கடை, டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர், ஹோல்சேல் கடை என்று அனைத்து கடைகளிலும் விற்பனை செய்யலாம். மேலும் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்டோரிலும் செல்லர் அக்கௌன்ட் கிரியேட் செய்து உங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்யலாம்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |