Best Income Business
சுயதொழில் என்பது அனைவருக்கும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இப்படி இருக்கின்ற சுயதொழிலுக்கு போட்டி என்பது சொல்லவே வேண்டாம். ஏனென்றால் ஒரே வகையான சுயதொழிலினை செய்யக்கூடிய நிறைய நபர்கள் இருக்கிறார்கள். இவ்வாறு இருக்கையில் நாமும் அதே தொழிலை செய்யும் போது வருமானம் என்பது அதிக அளவில் இருக்காது. இதுபோன்ற நிலை ஏற்படும் போது சுயதொழில் என்பதே ஒரு சவாலான ஒன்றாக உள்ளது. அதனால் தான் இன்றைய பதிவில் அதிக லாபம் மற்றும் வருமானம் தரக்கூடிய ஒரு அருமையான தொழிலை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
தினசரி வருமானம் தரும் தொழில்:
மக்கள் தினமும் பயன்படுத்தக்கூடிய அன்றாட பொருட்களான பால், காய்கறி, மருந்து, மளிகை பொருட்கள் மற்றும் பூ ஆகியவை தான். இத்தகைய பொருட்களில் ஏதேனும் பொருளினை மட்டும் தொழிலாக செய்தால் போதும் நல்ல வருமானம் பெறலாம்.
இத்தகைய வரிசையில் இன்றைய பதிவில் பூ சந்தை தொழிலினை செய்து எப்படி அதிகளவில் வருமானத்தை பெறுவது என்று விரிவாக கீழே தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
முதலீடு என்ன:
நீங்கள் செய்யப்போகும் இத்தகைய தொழிலுக்கான முதலீடு என்பது தோராயமாக 5,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை மட்டும் இருந்தால் போதும்.
மூலப்பொருள் என்ன:
இந்த பூ சந்தை தொழிலினை செய்வதற்கு மல்லிப்பூ, முல்லைப்பூ, ரோஜா, கனகாம்பரம், காக்கரட்டான் பூ, மஞ்சள் மற்றும் வெள்ளை செவ்வந்தி மற்றும் கதம்பம் கட்டுவதற்கு என மொத்தமாக எல்லா பூவினையும் நீங்கள் Wholesale முறையில் வாங்கி கொள்ள வேண்டும்.
மேலும் எடை மிஷின், கவர் மற்றும் பூக்கட்டும் நூல் போன்றவையும் வேண்டும்.
இதையும் படியுங்கள்⇒ பெண்கள் வீட்டிலிருந்து செய்யும் அருமையான தொழில்.. தினமும் 1000 ரூபாய் வரை வருமானம்..
எந்த இடத்தில் தொடங்குவது:
மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஒரு இடம் அல்லது சந்தை அமைக்கும் இடம் இதுபோன்ற இடங்களில் உங்களுடைய கடைக்கு ஒரு பெயரினை இந்த பூ சந்தை தொழிலினை செய்யலாம்.
மேலும் இவ்வாறு நீங்கள் வாங்கி வந்தால் போதும் உங்களுடைய ஊரில் உள்ள பூக்கடை மற்றும் இதர மக்கள் என அனைவரும் கிலோ கணக்கில் மொத்த வியாபாரம் முறையில் பூக்களை வாங்கி விட்டு செல்வார்கள்.
வருமானம் பெறுவது எப்படி.?
பூவினை மொத்த வியாபாரம் முறையில் செய்யும் போது தோராயமாக ஒரு நாளைக்கு 4,000 ரூபாயும் மற்றும் 1 மாதத்திற்கு 75,000 ரூபாய் வரையும் வருமானம் பெறலாம்.
மேலும் இந்த தொழிலை பொறுத்தவரை லாபம் என்பது பூவின் விலையினை பொறுத்து தான் அமையும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |