Daily Income Business in India
மனிதர்கள் பணத்தை தேடி ஓடி ஓடி உழைக்கின்றனர். இந்த பரபரப்பான உலகத்தில் கணவன், மனைவி இருவருமே உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது. வருங்காலத்தில் கணவன் மட்டும் வேலை பார்த்து குடும்பத்தை சிறப்பாக எடுத்து செல்ல முடியாது. நம் வாழ்க்கையில் முக்கியமாக இருப்பது பணம் தான். இந்த பணத்தை சம்பாதிப்பதற்கு Pothunalam.com பதிவில் பல வகைகளில் சொல்லி இருக்கின்றோம். அதுபோல உங்களுக்கு உதவிடும் வகையில் மக்களிடையே Demand உள்ள தொழிலை பற்றி தெரிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Fruit Business Ideas in India:
எப்பொழுதும் அழியாத தொழில் என்றால் அது உணவு தொழில் தான். நீங்கள் எந்த மாதிரியான உணவு தொழில் செய்தாலும் அதில் முன்னேறிவிடலாம். அதில் ஒன்று பழ வியாபாரம் தொழில். என்ன தான் உணவை சாப்பிட்டாலும் ஆரோக்கியத்திற்காக பழங்களை வாங்கி சாப்பிடுவோம்.
பழம் வாங்கும் இடம்:
பழத்தை மொத்தமாக வாங்கும் இடத்தில் வாங்கினால் விலை கம்மியாக இருக்கும். நீங்கள் குறைவாக பழத்தை வாங்கினால் தான் லாபத்திற்கு விற்க முடியும். முக்கியமாக பழங்களில் ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, மாதுளை, வாழைப்பழம், கொய்யாப்பழம் போன்றவை ஆரம்பத்தில் இருந்தால் போதுமானது.
இதையும் படியுங்கள் ⇒ எக்காலத்திலும் அழியாத தொழிலை செய்து முதலாளியாக மாறுங்கள்..!
முதலீடு:
பழக்கடை தொடங்குவதற்கு உங்களிடம் சொந்தமாகவோ அல்லது வாடைக்கோ ஒரு கடை இருக்க வேண்டும். அல்லது தள்ளு வண்டி போன்றவற்றிலும் நீங்கள் இந்த பழக்கடையை தொடங்கலாம்.
ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, கொய்யா, திராட்சை, வாழைப்பழம் போன்றவை வாங்குவதற்கு மட்டும் 10,000 ரூபாய் தேவைப்படும். கடையை Main இடமாக பார்க்க வேண்டும்.
மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடமாக பார்க்க வேண்டும். அதாவது பேருந்து நிலையம், இரயிலடி, பள்ளி, கல்லூரி போன்ற இடத்தில் வைக்க வேண்டும். நீங்கள் வைக்கும் கடையை பொறுத்து வாடகை மாறுபடும்.
அடுத்து கடையில் பழங்களை வைப்பதற்கு Stand தேவைப்படும். அப்போது ஒவ்வொரு பழமாக அடுக்கி வைக்க முடியும். Stand -யை ஆசாரிகளிடம் சொல்லி வாங்கினால் நல்லதாக இருக்கும்.
வருமானம்:
இந்த தொழிலை பொறுத்தவரை இவ்வளவு தான் வருமானம் என்று சொல்ல முடியாது. ஒரு கிலோ ஆப்பிள் 80 ரூபாய் -க்கு வாங்கினால் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். இந்த மாதிரி ஒவ்வொரு பழத்திற்கு வருமானம் மாறுபடும். தோராயமாக மாதத்திற்கு 20,000 ரூபாய் லாபம் கிடைக்கும்.
இதையும் படியுங்கள் ⇒ எதிர்காலத்தில் கொடி கட்டி பறக்கும் தொழிலை இன்றே தொடங்குங்கள்..!
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |