படிப்பு தேவையில்லை முதலீடு தேவையில்லை தினமும் ரூ.1000/- வருமானம் தரும் தொழில் | Daily 1000 income business in Tamil
நண்பர்களுக்கு வணக்கம்..! வீட்டில் இருந்தபடியே சொந்தமாகத் தொழில் தொடங்க உங்களுக்கு ஆர்வம் இருக்கா? அப்போ வெறும் 500 ரூபாய் முதலீட்டில் தினமும் 1000 ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் சூப்பர் தொழில் வாய்ப்பு உள்ளது. அந்த தொழில் வாய்ப்பை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
Daily 1000 income business in Tamil – வினிகர் தயாரிப்பு தொழில்:
வீட்டில் இருந்தபடியே சொந்தமாக தொழில் செய்ய விரும்பும் நபர்களுக்கு மிகவும் சிறந்த தொழிலாக வினிகர் தயாரிப்பு தொழில் விளங்குகிறது. இந்த வினிகரில் நிறைய வகைகள் இருக்கின்றன. இருப்பினும் அதிகளவு பயன்படுத்த கூடிய வினிகர் என்றால் white vinegar என்று சொல்லலாம். இந்த white vinegar-ஐ பெரும்பாலோனோர் உணவு தயாரிக்க, மாமிசத்தை மிருதுவாக்க, உணவுகள் கெட்டு போகாமல் இருக்க பயன்படுத்துகின்ற.
குறிப்பாக ஊறுகாய் பல நாட்கள் வரை நாம் பயன்படுத்தும் ஒரு உணவு பொருள் இது கெட்டு போக்கால் இருப்பதற்காக ஊறுகாயில் வினிகர் பயன்படுத்துகின்ற, அதேபோல் பேக்கரி, ஹோட்டல் போன்ற உணவகங்களிலும் இந்த வினிகரை அதிகளவு பயன்படுத்துகின்றன.
பின்பு தரையில் உள்ள அழுக்குகளை நீக்குவதற்க்கு, வாஷிங் மெஷின் கிளீன் செய்ய, ஆடைகளில் உள்ள அழுக்குகளை நீக்க, நர்சரி கார்டனில் பூக்கள் வாடாமல் இருக்கவும், அழகிற்காகவும் இந்த வினிகர் அதிகளவு பயன்படுத்தப்படுகிறித்து. ஆகவே மக்களிடம் இதன் தேவை அதிகளவு இருப்பதினால் நீங்கள் இதனை வீட்டில் தயார் செய்து விற்பனை செய்வதன் மூலம் வீட்டில் நல்ல வருமானம் பெறமுடியும்.
வினிகர் வகை:
- Organic Vinegar
- Synthetic Vinegar
இவற்றில் Organic Vinegar தான் மக்கள் அதிகம் பயன்படுத்துகுடிய white vinegar ஆகும். சரி இவற்றை எப்படி தயார் செய்யலாம் என்பதை பற்றி கீழ் காண்போம் வாங்க.
தினசரி 1000 ரூபாய் வருமானம் தரும் தொழில்
தேவைப்படும் மூலப்பொருட்கள்:
- Acetic acid
- RO Water
- பேக்கிங் செய்ய பாட்டில்
வினிகர் தயாரிக்கும் முறை:
இரண்டு லிட்டர் வினிகர் தயார் செய்ய அளவு:
உங்கள் அருகில் கெமிக்கல் ஸ்டோரில் Acetic acid ஒரு லிட்டர் 150 ரூபாய்க்கு கிடைக்கும். ஆக நீங்கள் ஒரு லிட்டர் Acetic acid-ஐ வாங்கிக்கொள்ளுங்கள். இந்த Acidic acid-ஐ 200 மில்லி கிராம் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அதனுடன் RO Water அதாவது நாம் வீட்டில் வாங்க கூடிய கேன் தண்ணீர் 1800 ml Acidic acid உடன் கலந்து விட்டால் நமக்கு இப்பொழுது 2000 ml கொண்ட white vinegar தயார்.
இவ்வாறு தயாரித்த வினிகரை சிறிய சிறிய பாட்டில்களில் 50 மில்லி, 100 மில்லி, 250, மில்லி, 500 மில்லி, ஒரு லிட்டர் என்று மக்களின் தேவைகளுக்கு ஏற்ப பேக்கிங் செய்து. லேபிள் ஒட்டி விற்பனைக்கு அனுப்பலாம்.
2 White vinegar தயாரிக்க ஆகும் செலவு:
1. Acidic acid 200 ml – ரூ.25
2. கேன் வாட்டர் 1800 ml – ரூ.5
3 . 500 ml காலி டப்பா விலை – ரூ.5
4. ஸ்டிக்கர் செலவு – ரூ.5
ஆக மொத்த செலவு – 40 ரூபாய்
2 லிட்டர் White vinegar விற்கும் விலை
மார்க்கெட்டில் 1 லிட்டர்100 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை ஆகிறது, நம்ம ஒரு லிட்டர் வினிகரை 100 ரூபாய்க்கு விற்றால் கூட நமக்கு செலவு 40 ரூபாய் போக 160 ரூபாய் வரை 2 லிட்டருக்கு லாபமாக நமக்கு கிடைக்கும்
நாம் தினமும் ஒரு 20 லிட்டர் உற்பத்தி செய்து விற்றால் நமக்கு 1500 ரூபாய் தினமும் லாபமாக கிடைக்கும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Siru Tholil Ideas in Tamil 2022 |