முதலீடு இல்லாமல் மாதம் 1 லட்சம் லாபம் தரும் தொழில்..!

Daily Income Business Without Investment in Tamil

முதலீடு இல்லாத தொழில் | Daily Income Business Without Investment in Tamil

இன்றளவில் பலருக்கு சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. சிலருக்கு தொழிலை ஆரம்பிக்க காசு இருக்கும், ஆனால் பலருக்கு கண்டிப்பாக சொந்தமாக தொழில் தொடங்குவதற்கு பணம் மட்டுமே பெரிய பிரச்சனையாக இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது எந்த ஒரு முதலீடும் இல்லாமல் செய்யக்கூடிய தொழிலை பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்க உள்ளோம். சரி வாங்க அது என்ன தொழில், எப்படி தொடங்கலாம், என்ன பொருள் தேவைப்படும், எவ்வளவு வருமானம் கிடைக்கும் போன்ற தகவலை இப்பொழுது பார்க்கலாம்.

என்ன தொழில்? – Butterfly Pea Flower Business in Tamil

சங்கு பூவை நன்கு உலர்த்தி அதனை விற்பனை செய்யம் தொழிலை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம். இந்த சங்கு பூ ஏராளமான மருத்துவ தன்மையை கொண்டது. பூ மட்டும் இல்லாமல் இலை, வேர் என்று இந்த செடியின் அனைத்துமே மிகவும் மருத்துவம் குணம் வாய்ந்தது. குறிப்பாக சங்கு பூவை நன்கு காய வைத்து அவற்றில் டீ செய்து குடிக்கும் போது ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகள் சரியாகிறது. ஆக மக்கள் இதனை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். இருந்தாலும் இந்த பூ உலகில் எல்லா இடங்களும் கிடைக்க வாய்ப்புகள் இல்லை. இதன் காரணமாக் ஆன்லைனில் தான் ஆர்டர் செய்து பெறுகின்றன ஆக நீங்களும் இதனை தயார் செய்து ஆன்லைனில் விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும்.

அதாவது உங்கள் வீட்டில் இந்த சங்கு பூக்களை வளர்க்கலாம், அல்லது நீங்கள் இருக்கும் இடத்தில் சங்கு பூ அதிகம் கிடைக்கும் என்றால் மிகவும் வசதியாக இருக்கும். 10 கிலோ சங்கு பூக்களை பறித்து அதனை நன்கு காயவைக்க வேண்டும். காய்ந்த பிறகு அதனுடைய இடை மிகவும் குறைந்துவிடும். 5 கிலோ தான் சங்கு பூ நமக்கு கிடைக்கும்.

பிறகு அதனை 25 கிராம் 50 கிராம் 100 கிராம் என்று பேக்கிங் செய்து விற்பனை செய்யலாம். ஆன்லைனில் வெறும் 25 கிராம் 260 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

எங்கு விற்பனை செய்யலாம்:

ஆன்லைனில் செல்லர் அக்கவுண்ட் கிரியேட் செய்து மொத்தமாக நீங்கள் விற்பனை செய்யலாம். நீங்கள் 2 கிலோ காய்ந்த சங்கு பூவை பேக்கிங் செய்து ஆன்லைனில் விற்பனை செய்தாலே உங்களுக்கு 1,00,000/- ரூபாய் வரை வருமானம் கிடைக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தினமும் 3000 வரை வருமானம் தரும் தொழில்.. ஆண், பெண் இருவருமே வீட்டில் தயார் செய்து விற்பனை செய்யலாம்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>siru tholil ideas in tamil