டெல்லி மொத்த வியாபார சந்தையில் பிளாஸ்டிக் மற்றும் கிஃப்ட் பொருட்கள் மிக கம்மி விலையில் வாங்கலாம்..!

Advertisement

டெல்லி மொத்த வியபார சந்தை.. 3 ரூபாயில் பொருட்கள் வாங்கி 200 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யலாம்..! Wholesale Business Ideas in Tamil

புதிதாக தொழில் தொடங்க விரும்பும் அனைவருக்கும் வணக்கம்.. இன்றைய தொழில் யோசனையில் குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் தரும் தொழில் வாய்ப்பை பற்றி தான் தெரிந்துகொள்ள போகிறோம். இந்த தொழில் யோசனை பொறுத்தவரை டெல்லியில் மொத்த வியாபார சந்தைக்கு நேரடியாக சென்று விற்பனை செய்ய இருக்கும் பொருட்களை கம்மி விலையில் மொத்தமாக வாங்கி அதனை நமது ஊரில் விற்பனை செய்யக்கூடிய தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம். குறிப்பாக அனைவரது வீட்டிலும் பிளாஸ்டிக் பொருட்களை அதிகமாக பயன்படுத்துவோம். அதேபோல் ஏதாவது விழாவிற்கு செல்கிறோம் என்றால் உதாரணத்திற்கு பிறந்தநாள் விழாவிற்கு செல்கிறோம் என்றால் ஏதாவது கிஃப்ட் பொருளை வாங்கி செல்வோம். ஆக இந்த பிளாஸ்டிக் பொருள் மற்றும் கிஃப்ட் பொருள் இரண்டு டெல்லி மொத்த வியாபார சந்தியில் மிக குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதனை நாம் மொத்தமாக வாங்கி நமது ஊரில் விற்பனை செய்தால் நல்ல வருமானத்தை பார்க்க முடியும். சரி வாங்க டெல்லியில் என்னென்ன பொருட்கள் மொத்த விலையில் எவ்வளவு ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது என்று பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

டெல்லி மொத்த வியபார சந்தை – Wholesale Business Ideas in Tamil:Wholesale Business Ideas in Tamil

டெல்லியில் நிறைய மொத்த வியாபர சந்தைகள் உள்ளது. அதிலும் டெல்லியில் உள்ள சதர் பஸாரில் அனைத்து வகையான பொருட்களும் விற்பனை செய்யப்படுகிறது.

டீ வடிகட்டும் வடிகட்டி மொத்த விலையில் 1.25 பாஸா முதல் 3 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு வடிகட்டியை நமது ஊரில் 10 முதல் 15 ரூபாய் வரை விற்பனை செய்யலாம்.

ஒரு பிளாஸ்டிக் சோப்பு டப்பாவின் விலை சதர் பஸாரில் 3 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை நமது ஊரில் 15 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை விற்பனை செய்யலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்👇
காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டும் வேலை செய்தால் 3000 ரூபாய் சம்பாதிக்கலாம்

தண்ணீர் ஊற்றிவைக்கும் டப்பாவின் விலை டெல்லி சதர் பஸாரில் ஒரு பீஸ் 15 ரூபாய்க்கு விற்பனை செயற்படுகிறது. அதனை நமது ஊரில் 30 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யலாம்.

தண்ணீர் குடிப்பதற்கு பயன்படுத்தும் வாட்டர் பாட்டில் 10 ரூபாய் முதல் 75 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

மளிகை சாமான் கொட்டிவைக்கும் பிளாஸ்டிக் அஞ்சறை பெட்டியின் விலை 10 ரூபாய் முதல் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பாத்ரூமிற்கு பயன்படுத்தும் கப் 3 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

பிளாஸ்டிக் வாளி அளவுகளுக்கு தகுந்தது போல் 10 ரூபாயில் இருந்து 35 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

துணிதுவைக்க பயன்படுத்து பாக்கெட் அளவுகளுக்கு தகுந்தது போல் 60 ரூபாய் முதல் 75 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

பிளாஸ்டிக் ஸ்டூல் 35 ரூபாய் முதல் 65 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

பிளாஸ்டிக் டிபன் பாக்ஸ் 50 ரூபாய் முதல் 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

போலும் பல கிஃப்ட் பொருட்கள் டெல்லி சதர் பஸாரில் 35 ரூபாய் முதல் 75 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இது போன்ற பொருட்களை குறைந்த விலையில் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நீங்களே டெல்லி சதர் பஸாருக்கு சென்று சென்று இது போன்ற பொருட்களை பர்ச்சேஸ் செய்து உங்கள் ஊரில் ஒரு சிறிய கடைய போடுங்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
வீட்டிலிருந்தபடியே தினமும் 2,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..! உடனடியாக இந்த தொழிலை தொடங்குங்கள்..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil
Advertisement