Dried Neem Flower Business Plan in Tamil
இக்காலத்தில் சுயதொழில் செய்தால் தான் அன்றாட பணத்தேவையை பூர்த்தி செய்ய முடியும். என்னதான் வேலைக்கு சென்று பணம் சம்பாதித்தாலும் கூட வரவுக்கு மிஞ்சிய செலவாகத்தான் இருக்கிறது. எனவே இதனை கருத்தில் கொண்டு பலரும் சுயதொழில் தொடங்க ஆரம்பித்து விட்டார்கள். ஆனால் சுயதொழில் தொடங்குவதற்கு முதலீடு மிகவும் அவசியம். இக்காரணத்தினால் சிலபேரின் சுயதொழில் தொடங்க வேண்டும் என்ற கனவு கனவாகவே இருக்கிறது. ஆனால் முதலீடு இல்லாத தொழில்கள் அதிகமாகவே உள்ளது. எனவே அந்த வகையில் முதலீடே இல்லாத அருமையான தொழிலை பற்றித்தான் இப்பதிவில் பார்ப்போகிறோம்.
அதாவது நம் ஊரில் வளரக்கூடிய வேப்பம் மரத்தின் பூக்களை உலர்த்தி அதனை விற்பனை செய்யும் தொழிலை பற்றித்தான் இப்பதிவில் பார்க்கபோகிறோம். இத்தொழில் அதிக டிமாண்ட் உள்ள தொழில் என்றே சொல்லலாம். எனவே அதிக டிமாண்ட் இருக்க கூடிய தொழிலை செய்வதன் மூலம் அதிக லாபத்தை பெறலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
How To Dried Neem Flower Business Plan in Tamil:
வேப்பம் பூ பல்வேறு மருத்துவ குணங்களை உடையது:
- வாயு தொல்லை நீங்க
- வயிற்று கோளாறுகள் நீங்க
- சரும நோய்
- தலைவலி
இதுபோன்ற பல மருத்துவ பலன்களை கொண்டுள்ளது. எனவே இவ்வளவு நன்மைகளை அளிக்கக்கூடிய வேப்பம் பூ தொழிலை எப்படி தொடங்குவது என்பதை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
தேவையான இடம்:
இத்தொழிலை செய்வதற்கு பெரிய அளவில் எந்த இடமும் தேவையில்லை. உங்கள் வீட்டில் பகுதியில் ஒரு தூய்மையான இடம் இருந்தால் போதும் இத்தொழிலை தொடங்கலாம்.
இந்த தொழிலில் இவ்வளவு வருமானமானு தோனுதா.. அப்போ லாபத்தை கொஞ்சம் யோசிங்க..
தேவையான மூலப்பொருட்கள்:
- நல்ல நிலையில் உள்ள வேப்பம் பூ
- பேக்கிங் கவர்
- Sealing Machine
முதலீடு:
இத்தொழிலுக்கு முதலீடு தேவையில்லை, இருப்பினும் பேக்கிங் கவர் மற்றும் Sealing Machine இவை இரண்டும் வாங்குவதற்கு தோராயமாக 1000 முதல் 1500 ரூபாய் வரை தேவைப்படும்.
தேவையான ஆட்கள்:
இத்தொழிலுக்கு குறைந்தப்பட்சம் 2 நபர்கள் போதும்.
தயாரிக்கும் முறை:
முதலில் வேப்ப மரத்தில் இருக்கும் வேப்பம் பூக்களை பறித்து கொள்ளவும். இவற்றை புழு பூச்சிகள் இல்லாதவாறு நன்றாக உதறி எடுத்து கொள்ளவும்.
பிறகு, இதனை தண்ணீரில் சேர்த்து நன்றாக கழுவி வெயிலில் நன்றாக காயவைக்க வேண்டும். வேப்பம் பூவில் ஒரு சொட்டு ஈரப்பதம் கூட இல்லாமல் நன்றாக உலர வைக்க வேண்டும்.
அவ்வளவு தாங்க உலர்ந்த வேப்பம் பூ தயார்.
பேக்கிங் செய்யும் முறை:
இப்போது இதனை உங்களுக்கு தேவையான அளவுகளில் பேக்கிங் கவரை கொண்டு பேக்கிங் செய்து கொள்ளவேண்டும். அதாவது 50 கிராம், 100 கிராம், 250 கிராம் போன்ற அளவுகளில் பேக்கிங் செய்து விற்பனை செய்யலாம்.
சும்மா கிடைக்கிற பொருளை பயன்படுத்தி வாரம் 3,00,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்..
விற்பனை செய்யும் இடங்கள்:
- சூப்பர் மார்க்கெட்
- நாட்டு மருந்து கடை
- ஆன்லைன் கடைகள்
கிடைக்கக்கூடிய வருமானம்:
ஆன்லைன் மார்க்கெட்டுகளில் 100 கிராம் உலர்ந்த வேப்பம் பூ தோராயமாக 105 ரூபாய் முதல் விற்கப்படுகிறது. எனவே இதனை நீங்கள் 100 ரூபாய் விலைக்கு விற்பனை செய்கிறீர்கள் என்று கணக்கில் கொள்ளுங்கள்.
அப்படி என்றால் ஒரு நாளைக்கு 3 கிலோ விற்பனை செய்தால் 3 ஆயிரம் ரூபாய் வருமானம் பெறலாம். அதுவே ஒரு மாதத்திற்கு கணக்கிட்டால் தோராயமாக 3,000* 30= 90,000 வருமானமாக கிடைக்கும்.
குறிப்பு:
இது அனைத்துமே ஒரு தோராய மதிப்பில் கூறப்பட்டுள்ளது. நீங்கள் எந்த அளவிற்கு விற்பனை செய்கிறீர்களோ அதனை பொறுத்து இத்தொழிலில் வருமானம் வரும்.
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |