மாஷா சம்பாதிக்க இந்த தொழிலை விட வேறு எந்த தொழிலும் Best- ஆக இருக்க முடியாது..!

earthworm business plan in tamil

Small Business Ideas

உங்களுக்கு சொந்தமாக ஒரு சுயதொழில் ஆரம்பிக்க வேண்டும் என்றால் உடனே அதனை தாமதம் படுத்தாமல் தொடங்கி விடுங்கள். நீங்கள் யோசிக்கலாம் அது எப்படி உடனே தொடங்க முடியும் முதலீடு செய்வதற்கு பணம் வேண்டும் அல்லவா என்று..?. அதுவும் சரி தான் முதலீடு செய்வதற்கு பணம் கட்டாயம் வேண்டும். ஆனால் நீங்கள் எடுத்த உடனே பெரிய அளவில் உள்ள தொழிலை செய்யாமல் குறைந்த முதலீட்டில் உள்ள தொழிலை தொடங்கினால் நல்ல வருமானம் மற்றும் லாபம் இரண்டும் ஒரே நேரத்தில் பெறலாம். இந்த இரண்டிற்கும் ஏற்ற மாதிரியான ஒரு Small Business பற்றி தான் இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

Low Investment High Profit Business Ideas:

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய உழவனின் நண்பன் என்று அனைவராலும் அழைக்கப்படுகின்றன Earthworm Business பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

இந்த தொழிலுக்கான டிமாண்ட் என்றும் குறையாமல் எதிர்காலத்திலும் இருந்து கொண்டே தான் இருக்கும். நீங்கள் இந்த தொழிலை செய்வதற்கு எந்த ஒரு மிஷினும் தேவைப்படாது.

முதலீடு:

நீங்கள் Earthworm Business-ஐ தொடங்குவதற்கு தோராயமாக 3,000 ரூபாய் மட்டும் முதலீடாக இருந்தால் போதும்.

தொழில் தொடங்க எவ்வளவு இடம் தேவை:

வீட்டில் ஏதோ ஒரு பகுதியில் 10×10 அளவில் உள்ள சிறிய அளவிலான இடம் இருந்தால் போதும்.

மண்புழு உரம் தயாரிக்க தேவையான பொருட்கள்:

  1. அழுகிய காய்கறிகள்
  2. மண் பானை
  3. வெல்லம்
  4. மாட்டு சாணம்
  5. மண்புழு- 50

இதையும் படியுங்கள்⇒ மாதம் லட்சம் கணக்கில் லாபம் தரக்கூடிய சிறந்த 3 தொழில்

How to Start Vermiculture Business:

 மண்புழு உரம் தயாரிக்கும் முறை

முதலில் நீங்கள் 25 லிட்டர் தண்ணீர் பிடிக்கும் அளவில் உள்ள ஒரு மண் பானையை வாங்கி கொள்ளுங்கள். அதன் பிறகு அந்த பானையில் 50 மண்புழுக்களை விட்டு விடுங்கள்.

அடுத்து அந்த மண்புழுவின் மேலே அழுகிய காய்கறிகளை போட்டு கொண்டு அதனுடன் வெல்லம் மற்றும் மாட்டு சாணம் இந்த இரண்டினையும் சேர்த்து போட்டு தண்ணீர் சிறிதளவு தெளித்து ஒரு சணல் சாக்கினால் மூடி வைத்து கொள்ளுங்கள்.

இது மாதிரி செய்த பிறகு தினமும் காலையில் அந்த பானையை திறந்து அதன் மேலே தண்ணீர் தெளித்து கொண்டே இருக்க வேண்டும். ஏனென்றால் மண்புழுவிற்கு ஈரப்பதம் எப்போதும் இருந்து கொண்டே இருப்பது மிகவும் அவசியமானதாகும்.

25 நாட்கள் கழித்து அந்த பானையை திறந்து பார்த்தால் 3 கிலோ அளவிலான மண்புழுக்கள் உரம் தயாராகிவிடும்.

இது மட்டும் இல்லாமல் நீங்கள் தினமும் அந்த பானையை திறக்கும் போது பானையில் இருக்கும் மண்புழு எச்சத்தினை தனியாக மற்றொரு பானையில் போட்டு கொண்டு வந்தால் 25 நாட்கள் கழித்து இதிலிருந்து 5 மண்புழுக்கள் உங்களுக்கு கிடைத்து விடும்.

தோராயமாக உங்களுக்கு இப்போது 8 கிலோ வரையிலும் மண்புழு உரம் கிடைத்து விடும். 1 பானைக்கு மட்டும் உங்களுக்கு தோராயமாக 8 கிலோ கிடைக்கிறது. அதனால் நீங்கள் 10 பானை  வாங்கியும் இதை போல உரம் ஒரே நேரத்தில் தயாரித்து கொள்ளலாம்.

விற்பனை செய்யும் முறை:

1 கிலோ மண்புழு உரம் தோராயமாக 1,500 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. அப்படி என்றால் ஒரு நாளைக்கு நீங்கள் தோராயமாக 8 கிலோ மண்புழு உரம் விற்பனை செய்தால் 12,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.

விற்பனை செய்ய வேண்டிய இடம்:

 how to start vermiculture business in tamil

நர்சரி கார்டன், மீன் பண்ணை, இயற்கை உரக்கடை போன்ற இடங்களில் நீங்கள் மண்புழு உரத்தை விற்பனை செய்யலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇👇
மூளை மட்டும் போதும் ஒரு ரூபாய் கூட முதலீடு தேவையில்லை..!

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> siru tholil ideas in tamil