Best Business Ideas in 2023
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் 2023 ஆம் ஆண்டில் எந்த தொழில் தொடங்கினால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். ஒவ்வொரு மனிதனும் தன் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு கண்டிப்பாக ஒரு தொழில் தேவை. அதுபோல சொந்தமாக தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆசை அனைவருக்குமே இருக்கும். அப்படி சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். வாங்க நண்பர்களே இந்த பதிவின் மூலம் என்ன தொழில் தொடங்கலாம் என்பதை பார்ப்போம்.
இந்தியாவில் eCommerce விற்பனையில் அதிகம் விற்பனையாகும் 10 தயாரிப்புகள்..! |
Ecommerce Business Ideas in Tamil:
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
மக்கள் அனைவரும் கடையில் பொருட்கள் வாங்குவதை விட ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவது என்பது அதிகம் நடைபெற்று வருகிறது.
மக்கள் அனைவரும் ஆன்லைனில் பொருட்கள் வாங்குவதால் நாம் E-commerce பிசினஸ் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற முடியும்.
நாம் தனியாகவோ அல்லது அமேசான் போன்ற E-commerce தளங்களில் இணைந்தோ ஒரு பிசினஸ் தொடங்க முடியும். நாம் புதிதாக ஒரு பொருளை வாங்கி அந்த பொருளை விற்பனை செய்வதற்கு நாமாக ஒரு website ஓபன் செய்து அதன் மூலம் விற்பனை செய்து லாபம் பார்க்கலாம்.
இதற்கு முதலீடு அதிகம் தேவைப்படாது. அதுபோல இந்த தொழிலில் அதிக நேரம் செலவிட தேவையும் இல்லை. அதனால் தான் மக்கள் அனைவரும் இந்த E-commerce பிசினஸ் தொடங்கி வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். இந்த E- commerce பிசினஸை நாம் நம் வீட்டிலிருந்தே தொடங்கி அதன் மூலம் நல்ல லாபத்தை பெற முடியும்.
வீட்டில் இருந்து தொழில் செய்ய வேண்டும் என்று நினைக்கும் பெண்களுக்கு இந்த பிசினஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இ-காமர்ஸ் பிசினஸ் என்பது நீங்கள் பொருள்களை மொத்தமாகவோ அல்லது சில்லறையாகவோ வாங்கி அவற்றை Amazon அல்லது Flipkart போன்ற E-commerce தளங்களில் விற்பனை செய்து அதன் மூலமாக நல்ல லாபத்தை ஈட்ட முடியும்.
இது தெரியுமா 👉👉 பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி தெரியுமா?
Ecommerce Business எப்படி தொடங்குவது..?
உதாரணத்திற்கு.., நீங்கள் ஒரு கடையில் 100 ஆடைகளை குறைந்த விலைக்கு மொத்தமாக வாங்க வேண்டும். பின் அந்த ஆடைகளை புகைப்படம் எடுத்து Amazon அல்லது Flipkart போன்ற தளங்களில் பட்டியல் (LISTING) செய்திட வேண்டும்.
Amazon மற்றும் Flipkart தளத்திற்கு வரும் பார்வையாளர்கள், உங்கள் பொருள்களை வாங்க வேண்டும் என்று Order கொடுத்தால், அந்த பொருள்களை நீங்கள் இடைப்பட்ட தரகராக இருக்கும் Amazon தளத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
ஒரு விற்பனைக்கு இவ்வளவு கமிஷன் என்று வரும் லாபத்தில் அவர்களுக்கு தேவையான பங்கை கொடுத்து விட வேண்டும். பிறகு பொருளுக்கான செலவு + கமிஷன் போன்ற செலவுகள் போக உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
இந்த தொழில் தொடங்குவதற்கு உங்களிடம் Pan Card, Current Account அல்லது Saving Account, GST Certificate, Trade License போன்ற ஆவணங்கள் சொந்தமாக தொழில் தொடங்குபவர்களுக்கு மட்டும் தேவைப்படும்.அதுபோல, நீங்கள் விற்பனை செய்யும் பொருட்கள் உணவு பொருட்களாக இருந்தால் FSSAI Certificate தேவைப்படும்.
அதேபோல, கணினி, லேப்டாப் மற்றும் பிரிண்டர் போன்ற விற்பதற்கு தேவையான பொருட்கள் இருக்க வேண்டும்.
எப்பொழுதும் விற்பனையில் முன்னணியில் இருக்க கூடிய பொருள்களை தேர்வு செய்து விற்பனை செய்ய வேண்டும். இப்படி விற்பனை செய்வதால் நல்ல லாபம் கிடைக்கும்.
இதுபோல நீங்களும் E-commerce பிசினஸ் தொடங்கி உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று முன்னேறுங்கள்..!
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய Top 5 Franchise தொழில்கள்..! |
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil 2023 |