Fast Money Business Ideas
இன்றைய காலத்தில் உள்ள பொருளாதார நிலையை சமாளிக்க வேண்டுமென்றால் இருவருமே சம்பாதிக்க வேண்டும். அப்போது தான் பணக்கஷ்டம் இல்லாமல் திருப்தியாக வாழ முடியும். இதற்காக பலரும் சுயதொழில் செய்ய வேண்டும் என்ற ஆசை உள்ளது. சுயதொழில் செய்ய வேண்டுமென்ற ஆசை மட்டும் இருந்தால் போதாது. அதற்கான யோசனைகளும் இருக்க வேண்டும். அதனால் இன்றைய பதிவில் சுயதொழிலாகவும், வேகமாக சம்பாதிக்க கூடிய தொழிலையும் பற்றி தெரிந்து கொள்ள போகின்றோம்.
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
வேகமாக சம்பாதிக்க கூடிய தொழில்:
உணவு, உடை, இருப்பிடம் போன்றவைகளில் எந்த தொழிலை செய்தாலும் எக்காலத்திலும் அழியாத தொழிலாக இருக்கும். அந்த வகையில் இன்றைய பதிவில் உணவு தொழிலை பற்றி தெரிந்து கொள்ள போகின்றோம். உணவு தொழிலை நாம் ஹோட்டல் வைக்க போவதில்லை. கேட்டரிங் தொழிலை பற்றி தான் பார்க்க போகிறோம்.
இடம்:
இந்த தொழிலுக்கு தனியாக இடம் தேவையில்லை. ஏனென்றால் ஒரு சுப நிகழ்ச்சி நடக்கிறது என்றால் அந்த இடத்திற்கு சென்று சமைத்து கொடுப்பீர்கள். அதனால் இதற்கு தனியாக இடம் தேவையில்லை.
முதலீடு மற்றும் மூலப்பொருட்கள்:

இதற்கு முதலீடு என்று பார்த்தால் பாத்திரங்களை வாங்குவதற்கு தான் பண தொகை தேவைப்படும். நீங்கள் சமைப்பதற்கு பெரிய பாத்திரம், சிறிய பாத்திரம், குழம்பு எடுப்பதற்கு வாலி, சட்னி, கூட்டு, வறுவல் போன்றவை எடுப்பதற்க் வாலியாக 20 வாங்கி கொள்ளவும். பெரிய கரண்டி, சிறிய கரண்டி என கரண்டி வகைகள் ஒரு 10 வாங்கி கொள்ளவும். வேறு ஏதேனும் பாத்திர வகைகள் வேண்டுமென்றாலும் வாங்கி கொள்ளலாம். இதெல்லாம் வாங்குவதற்கு 20,000 ரூபாய் தேவைப்படும்.
ஆரம்பத்தில் வேலையாட்கள் 5 நபர்கள் தேவைப்படுவார்கள். தொழில் நன்றாக பிரபலம் ஆகிவிட்டது என்றால் வேலையாட்கள் அதிகமாக தேவைப்படுவார்கள்.
வருங்காலத்திற்கு ஏற்ற மாதிரி தொழில் செய்யுங்கள்
தொழிலில் முக்கியமானது:
இந்த தொழிலில் முக்கியமானது உணவின் ருசி தான், உணவை நீங்கள் ருசியாக செய்து கொடுத்தால் தான் அவர்கள் நான்கு நபர்களிடம் சொல்வார்கள்.
வருமானம்:
எடுத்துக்காட்டாக நீங்கள் ஒரு சடங்கு நிகழ்ச்சிக்கு 100 பேருக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். இதில் நீங்கள் காலை உணவு, மதிய உணவு என இரண்டு வேலையும் உணவு வேண்டுமென்றால் அதற்கு தகுந்தது போல் வருமானத்தை வாங்கி கொள்ளலாம். இதற்கு நீங்கள் தோராயமாக 20,000 ரூபாய் வருமானம் பெறலாம். இதுவே நீங்கள் செய்யும் உணவு வகையினை பொறுத்து வருமானம் மாறுபடும். இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் உணவு செய்வதற்கு அவர்களே பொருட்கள் வாங்கி கொடுத்தால் ஒரு தொகையும், பொருட்கள் நாமே வாங்குவது போல் இருந்தால் அதற்கு ஒரு தொகையும் வாங்கி கொள்ளலாம்.
ஆன்லைன் மூலமா தொழில் செய்து லாபம் பெறனுமா.. அப்போ இந்த தொழில் தான் பெஸ்ட்..
| இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |














