5,000 முதலீடு | வாரத்தில் இரண்டு நாள் மட்டும் வேலை | 40,000/- லாபம் | அருமையான சுயதொழில்..!

Flower Export Business in Tamil

வாரத்தில் இரண்டு நாள் மட்டும் வேலை ஆனால் 40,000/- லாபம்..! அருமையான சுயதொழில்..! Flower Export Business in Tamil..!

Flower Export Business in Tamil வணக்கம் நண்பர்களே நீங்களும் தொழில் ஆரம்பிக்கலாம்.. இன்று நாம் நமது பொதுநலம்.காம் பதிவில் ஏற்றுமதி தொழிலான (flower export business) பற்றி தான் பார்க்க போகிறோம். பூக்கள் ஏற்றுமதி தொழில் அப்படி என்ன வருமானம் வந்துவிட போகிறது என்று யோசிக்கலாம் ஆனால் உலகம் முழுவத்துக்கு நமது இந்தியாவில் இருந்து தான் மலர்கள் ஏற்றுமதி ஆகிறது என்று சொன்னால் உங்களால் நம்மமுடிகிறதா.. ஆம் நண்பர்களே நமது இந்தியாவில் இருந்து தான் மலர்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆக நீங்கள் இந்த தொழிலை செய்வதன் மூலம் நல்ல வருமானத்தை பெற முடியும். சரி வாங்க இந்த தொழிலை நாம் எப்படி ஆரம்பிக்க வேண்டும், இதற்கு எவ்வளவு முதலீடு தேவைப்படும், இந்த ஏற்றுமதி தொழில் என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும், எவ்வளவு லாபம் நமக்கு கிடைக்கும் போன்ற தகவல்களை இப்பொழுது நாம் பார்க்கலாம்.

முதலீடு:

மிக குறைந்த முதலீட்டில் இந்த Flower Export Business-ஐ  நீங்கள் தொடங்க முடியும். அதாவது உங்களிடம் வெறும் 5,000 ரூபாய் முதலீடு போதுமானது.

பயிற்சி:

Flower Export Business in Tamil

 

Flower Export Business என்பது சாதாரணமான தொழில் இல்லை. நீங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருக்கும் மலர்களை சரியான முறையில் பேக்கிங் செய்து அதனை ஏற்றுமதி செய்ய வேண்டும். ஆக அதற்கு உங்களிடம் சரியான பயிற்சி இருக்க வேண்டும். பேக்கிங் செய்வதற்க்கென்று பயிற்சிகள் அளிக்கப்படுகிறது, இந்த பயிற்சிகளும் ஒரு நாள் முதல் ஒரு வாரங்கள் வரை மட்டுமே உள்ளது. ஆக அங்கு சென்று பயிற்சிகள் பெற்று மலர்களை எப்படி சரியான முறையில் பேக்கிங் செய்யலாம் என்பதை கற்றுக்கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள் 👉👉 பெண்களே வீட்டில் Table Size இடம் இருந்தால் போதும் தினமும் 1500 ரூபாய் சம்பாதிக்கலாம்..

தேவைப்படும் ஆவணம்:

இந்த Flower Export Business செய்வதற்கு உங்களிடம் IE Code License கட்டாயம் இருக்க வேண்டும். அப்பொழுது தான் உங்களை பூக்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும்.

பேக்கிங் செய்யும் முறை:

உதாரணத்திற்கு 10 கிலோ மல்லிகை பூவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதனை பேக்கிங் செய்யும்பொழுது ஐஸ் கட்டிகளை வடித்து தான் பேக்கிங் செய்வோம் ஆக அதன் எடை கிட்ட தட்ட 13 கிலோ முதல் 15 கிலோ வரை Gross Weight வரும்.

பேக்கிங் செய்யும் பொழுது Shelf Life 24 மணி நேரத்திற்கு பிறகு மலர்கள் நன்றாக இருக்கும். அதுவே சாதாரண ஐஸ் கட்டிகளை போன்று பேக்கிங் செய்யும்பொழுது 24 மணி நேரம் பாதுகாப்பாக இருக்கும். அதேபோல் Ice Gel பேக் என்றால் 36 மணி நேரம் வரை மலர்கள் பாதுகாப்பாக. இருக்கும்.

தேவைப்படும் மூலப்பொருட்கள்:

ஐஸ் கட்டிகள், தெர்மாகோல், Ziplock Cover, மலர்கள் இவை அனைத்தும் தான் மூலப்பொருட்கள் ஆகும். குறிப்பாக மலர்கள் பேக்கிங் செய்யும்பொழுது மொட்டாக தான் இருக்க வேண்டும். பூத்திருக்க கூடாது. மலர்களை பேக்கிங் செய்யும்பொழுது ஐஸ் கட்டிகள், தெர்மாகோல், Ziplock Cover, மலர்கள் இவை அனைத்திற்கும் சேர்த்து தான் நாம் packaging charges வசூல் செய்ய வேண்டும்.

வருமானம்:

 

பொதுவாக Flower Export Price  எவ்வளவு இருக்கும் என்றால் ஒரு கிளி சுமார் 10 டாலர் வரை இருக்கும். உதாரணத்திற்கு நாம் சிங்கப்பூரை டாலருக்கு பார்த்தால் கிட்டத்தட்ட 600 ரூபாய் வரை இருக்கு. அதிலும் மல்லிகை பூ  சீசன் குறைவாக இருக்கும்பொழுது இன்னும் அதன் விலை அதிகமாக இருக்கும்.

ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை 400 ரூபாய் என்று வைத்து கொண்டாலும், வாரத்திற்கு ஒரு முறை நீங்கள் 10 கிலோ மல்லிகை பூக்களை ஏற்றுமதி செய்தீர்கள் மற்றும் அதனுடன் போக்குவரத்துக்கு செலவுகளையும் இணைத்தீர்கள் என்றால் கிட்டத்தட்ட ஒரு வாரத்திலேயே நீங்கள் 40,000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 தினமும் 3000 லாபம் தரக்கூடிய தந்தூரி டீ தொழில்..!

ஆர்டர் பெறுவது எப்படி?

வெளிநாடுகளிலும் பூக்கள் விற்பதற்கென்று ஸ்டோர் இருக்கும். ஆக அந்த ஷாப்பை முதலில் கலைக்ட் செய்ய வேண்டும். பின் அவர்களது காண்டைக்ட் பேஜில் இருக்கு ஈமெயில் ஐடியில் நீங்கள் மெயில் செய்யுங்கள். அதன் மூலம் உங்களுக்கு ஆர்டர் கிடைக்க கூடும்.

இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>siru tholil ideas in tamil 2022